அஜீத் நடித்திருக்கும் என்னை அறிந்தால் ஜனவரி 29 வெளியாகிறது. அந்த தேதியில் பிற படங்கள் எதுவும் வெளியாகப் போவதில்லை என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் சண்டமாருதம் ஜனவரி 30 – என்னை அறிந்தால் வெளியானதற்கு மறுநாள் திரைக்கு வருகிறது.
நான்கு வருடங்களுக்குப் பிறகு சரத்குமார் தனி ஹீரோவாக நடித்துள்ள படம், சண்டமாருதம். இதன் கதையை சரத்குமாரே எழுதியுள்ளார். திரைக்கதை, வசனம் ராஜேஷ் குமார்.
ஓவியா, மீரா நந்தன், சமுத்திரகனி, ராதிகா சரத்குமார் நடித்துள்ள இந்தப் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். மேஜிக் ப்ரேம்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன், சரத்குமார் ஆகியோர் கூட்டாக தயாரித்துள்ளனர்.
மிர்ச்சி சிவா திருடனாக நடிக்கும் 144 – சி.வி.குமார் தயாரிக்கிறார்
மிர்ச்சி சிவா நடிக்கும் 144 என்ற படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார் தயாரிக்கிறார்.
சிவா நடித்த கலகலப்பு தவிர்த்து சமீபத்திய எந்தப் படமும் ஓடவில்லை. அதனால் சிவாவை வைத்து படம் தயாரிக்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மூன்று ஹீரோக்களில் ஒருவராக சிவா நடிக்கும் மசாலாப் படம் என்ற ஒரேயொரு படம் மட்டுமே தற்போது அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் 144 என்ற புதிய படத்தில் சிவா ஒப்பந்தமாகியுள்ளார்.
அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தை சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கிறார். இதில் சிவா திருடனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம் அம்மிணி
ஆரோகணம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தை தொடர்ந்து, அவர் ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.
இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
இவர் இயக்கும் அந்த புதிய படத்திற்கு ‘அம்மிணி’ என்று பெயரிட்டுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, என்னுடைய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒரு பெண் கலந்துகொண்டு, அவளது துயரங்களை என்னிடம் கூறினார்.
அந்த பெண்ணின் கதை என்னை மிகவும் ஈர்த்தது. அதை ஒரு படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். அந்த கதையை அடிப்படையாக வைத்து இப்படத்தை எடுக்கவிருக்கிறேன் என்றார்.விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் ‘உத்தமவில்லன்’ படத்திற்கான இசைக் கோர்ப்பு பணிகளை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தி முடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு சவுண்ட் ரீ-ரிக்கார்டிங் மிக்சிங்கை செய்த கிரீக் மேன் என்பவர், தற்போது அறிவித்துள்ள ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார்.
‘விபிளாஸ்’ என்ற படத்திற்கு சவுண்ட் ரீ-ரிக்கார்டிங் மிக்சிங் செய்ததற்காக அவர் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு உத்தமவில்லன் படக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
‘உத்தமவில்லன்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அஜீத்துடன் நடித்தது கனவு போல் இருந்தது: பார்வதி நாயர்
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அனுஷ்கா, திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் பார்வதி நாயரும் நடித்துள்ளார்.
மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடைய இவர், நடிப்பு துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளார்.
அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் என்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த இவர், பல விளம்பர படங்களில் நடித்து வந்துள்ளார்.
பின்னர் கன்னடம் மலையாளம் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிபருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.
என்னை அறிந்தால் வாய்ப்பை பற்றி கூறும்போது, “காலம் என்னை கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ் படமே அஜீத் மற்றும் கௌதம் உடன் அமைத்திருக்கிறது. கௌதம் இப்படத்திற்கு அழைக்கும் முன் வரை தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.
அஜீத் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜீத் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் நடித்தது ஒரு கனவாய் இருந்தது. நான் பணிபுரிந்த இயக்குனர்களில் பழகுவதற்கு மிக இலகுவானவர் கௌதம்.
இவர் இருக்கும் பொழுது படப்பிடிப்பு தளமே மிக பரபரப்பாக இருக்கும். என்னை அறிந்தால் குழுவினருக்கும், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்களுக்கும் நன்றி கூறியே ஆக வேண்டும்.
எவ்வளவு பெரிய நிலைகளுக்கு சென்றாலும், உச்சத்தில் நின்றாலும் அடக்கத்துடன் இருக்க வேண்டும். இப்படி என்னை அறிந்தால் படத்தின் மூலம் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்” என்கிறார் பார்வதி நாயர்.
ஐ படத்தில் அவதூறு வசனம்: சந்தானம், ஷங்கர் மீது திருநங்கைகள் பாய்ச்சல்
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வில்லத்தனத்தில் திருநங்கை வேடம் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
இந்த கேரக்டரில் ஓ.ஐ.எஸ். ராஜானி என்ற நிஜமான திருநங்கையே நடித்து இருக்கிறார். இவர் பிரபலமான மாடலிங் ஆவார். ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட முன்னணி இந்தி நட்சத்திரங்களுக்கு இவர்தான் பேஷன் டிசைனராக இருக்கிறார். ‘ஐ’ படத்தில் விக்ரமை உருக்குலைக்கும் குரூர வில்லத்தனத்தில் வருகிறார்.
இந்த கேரக்டர் மூலம் திருநங்கைகளை அவமதித்துவிட்டதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து திருநங்கைகள் நலச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நம் சமூகத்தில் ஏற்கனவே திருநங்கைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். ‘ஐ’ படத்தில் ஒஜாஸ் கேரக்டர் மூலம் இன்னும் மோசமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாங்கள் விமர்சிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த படத்தின் இறுதி காட்சியில் மட்டுமின்றி எப்போதுமே சந்தானம் திருநங்கைகளை தவறாகவே பேசி வருகிறார். ‘ஐ’ படத்துக்கு எதிராக இயக்குனர் ஷங்கர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். ‘ஐ’ படத்தை திருநங்கையர் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: நடிகைகள் அதிர்ச்சி
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
வாட்ஸ் அப்களில் ஆபாச படங்கள் பரவுவதால் நடிகைகள் அதிர்ச்சியாகி உள்ளனர். சமீப காலமாக செல்போன் சந்தாதாரர்கள் மத்தியில் வாட்ஸ் அப் பயன்பாடுகள் பெருகி வருகிறது.
100 பேர் கொண்டு குரூப் வைத்து படங்கள், வீடியோ மற்றும் செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்கின்றனர். இவற்றில் நடிகைகளின் ஆபாச படங்களும் பரப்பப்படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆறு நடிகைகளின் ஆபாச படங்கள் வாட்ஸ் அப்களில் வந்துள்ளது.
பேராண்மை, ஜெயம் கொண்டான், தென் மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்த வசுந்தராவின் ஆபாச படம் சமீபத்தில் வாட்ஸ் அப்களில் வந்தது. செல்பியில் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. வசுந்தரா மேலாடை இன்றி அரை நிர்வாணமாக இருந்தார்.
வாலிபர் ஒருவருடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்றும் படங்கள் வந்தன. இவற்றை வாட்ஸ் அப் குரூப்களில் போட்டி போட்டு அனுப்பினார்கள். சில நிமிடங்களில் நாடெங்கும் லட்சக்கணக்கானோர் இந்த ஆபாச படத்தை பார்த்தனர்.
வசுந்தரா ஆபாச படம் வெளியாகி ஒரிரு தினங்களில் ராதிகா ஆப் தேவின் செக்ஸ் படங்கள் வந்தன. இவரும் நிர்வாணமாக இருப்பது போல் இப்படங்கள் இருந்தன. குளியல் அறையில் இந்த படங்கள் எடுக்கப்பட்டு இருந்தது. உடம்பில் ஆடைகள் எதுவும் இன்றி இருந்தார்.
ராதிகா ஆப்தே தமிழில் கார்த்தி ஜோடியாக ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் நடித்தார். வெற்றிச் செல்வன் படத்திலும் நடித்து இருக்கிறார்.
சுருதிஹாசனின் கவர்ச்சி படங்களும் இன்டர் நெட் வாட்ஸ் அப்களில் வந்தன. தெலுங்கு படப்பிடிப்பில் இப்படங்களை எடுத்து இருந்தனர்.
அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக இருந்தார். இந்த படங்களை வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளரிடம் நிபந்தனை விதித்து இருந்தார். அதை மீறி படங்களை வெளியிட்டு விட்டனர்.
பரத் ஜோடியாக 555 படத்தில் நடித்த மிருதுளாவின் ஆபாச படமும் வெளியாகி உள்ளது.
இது போல் லட்சுமி மேனன், ராய்லட்சுமி கவர்ச்சி படங்களும் வாட்ஸ் அப்களில் பரவியது. இவற்றில் சில படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என கூறப்படுகிறது. நடிகைகள் முகங்களை வெட்டி நிர்வாண பெண் உடலோடு இணைத்து உள்ளனர்.
வாட்ஸ்அப்கள் நடிகைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கி உள்ளன. இதை தடுக்க என்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அவர்கள் யோசிக்கின்றனர்.
செல்பி விஷயத்தில் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் எல்லை மீறக் கூடாது என்றும் நடிகை குஷ்பு ஏற்கனவே அறிவுரை கூறியுள்ளார்.
டாக்டர்கள், நர்சுகளுக்கு ஐ படம் சிறப்பு காட்சி: ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
விக்ரம், எமிஜாக்சன், ஜோடியாக நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ரிலீசானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
பொங்கலுக்கு சென்னை அப்பல்லோ டாக்டர்கள் ‘ஐ’ படத்தை பார்க்க ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு செய்து கொடுத்தார். மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி அவர்களுக்கு விநியோகித்தார்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக இதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். நர்சுகளும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டனர். இதன் மூலம் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் சேவையை நேரில் பார்த்த ஏ.ஆர். ரகுமானுக்கு பொங்கலை யொட்டி ‘ஐ’ படத்துக்கு அவர்களை அழைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனவேதான் இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கி படம் பார்க்க வைத்தார். தாய் மேல் ரகுமான் அளப்பறிய பாசம் வைத்துள்ளார். அதன் வெளிப்பாடாகவே இச்சம்பவம் அமைந்தது.
என்னை நெகிழ வைக்கிறது – டார்லிங் ஜீ.வி.பிரகாஷ்
பொங்கலுக்கு வெளியான ஐ, ஆம்பள இரண்டும் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. தயாரிப்பில் இருக்கும் பிரமாண்டமும், உழைப்பும் கதை திரைக்கதையில் இல்லை என்பதை ஐ படத்தைப் பார்த்தவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதேபோல் ஆம்பள. சுந்தர் சி.யின் மூன்று மாதத்துக்கு ஒரு படம் பார்முலாவை அவர் மறுபரிசீலனை செய்யும்படி ஆம்பளயின் ரிசல்ட் வலியுறுத்துகிறது.
இவைகளுக்கு நடுவே வெளியான ஜீ.வி.பிரகாஷ் நடித்திருக்கும் டார்லிங் தற்போது பிக்கப்பாகியுள்ளது. இது ஜீ.வி.யை ரொம்பவே நெகிழ வைத்துள்ளது.
நான் நடித்துள்ள ‘டார்லிங்’ படத்திற்கு கிடைத்திருக்கும் ஆதரவு என்னை நெகிழ செய்கிறது. பெரும் ஆனந்தத்திற்கு அப்பாற்பட்டு, நல்ல படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற பொறுப்பையும் தந்துள்ளது.
அரும்பாடுபட்டு எனது ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். அனைவருக்கும் இதயம் கனிந்த எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தனது நன்றியை தெரியப்படுத்தியுள்ளார்.