மலையாளத்தில் ரோஷன் ஆட்ரீவ்ஸ் இயக்கத்தில் மஞ்சுவாரியர் நடித்த படம் ஹவ் ஓல்டு ஆர் யூ. திருமணத்திற்கு பிறகு
08 Jan,2015
மலையாளத்தில் ரோஷன் ஆட்ரீவ்ஸ் இயக்கத்தில் மஞ்சுவாரியர் நடித்த படம் ஹவ் ஓல்டு ஆர் யூ. திருமணத்திற்கு பிறகு
பல ஆண்டுகளுககு பிறகு அவர் நடிதத இந்த படம் கேரளாவில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தனது வீட்டின் மொட்டை மாடியிலேயே காய்கறி தோட்டம் வைத்து குடும்பம் நடத்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி அப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படம் ஜோதிகாவை, பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணி விட்டதை அடுத்து, தனது ரீ-என்ட்ரிக்கும் இதுதான் சரியான படம் என்று தற்போது அதே இயக்குனரின் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜோதிகா. இந்த படத்தை அவரது கணவரும், நடிகருமான சூர்யாவே தயாரித்து வருகிறார்.
மேலும், மலையாளத்தில் மஞ்சுவாரியரின் பாணியை மனதில் கொண்டு கதையோட்டத்தை நகர்த்தியிருந்த டைரக்டர், ஜோதிகாவின் பாணியை கருத்தில் கொண்டு தமிழில் நிறைய திருத்தம் செய்திருக்கிறாராம். அதோடு, மலையாள படத்தை நிறைய தமிழ்நாட்டு ரசிகர்களும் பார்த்து விட்டனர் என்பதால், அதே கதைக்கருவை தமிழ் ரசிகர்கள் விரும்பும் வகையில், மாற்றம் செய்து புதிய பாணியில் காட்சிகளை நகர்த்தியுள்ளாராம். அதேசமயம், படத்தில் டைட்டிலை மட்டும் இன்னும் முடிவு செய்யவிலலை. புரொடக்சன் நம்பர்-3 என்ற பெயரிலேயே எடுத்து வருகின்றனர். படப்பிடிப்பு முடிந்து ஆடியோ ரிலீஸ் நேரத்தில்தான்