சினிமா செய்தித் துளிகள் 2015ஆம் ஆண்டில் திருமணத்திற்காக வரிசையில் நிற்கும் நடிகைகள்
06 Jan,2015
தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்த சின்னப் படங்கள்
பெரிய நட்சத்திரங்கள், நம்பர் ஒன் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாருமில்லாத கோலி சோடா படத்தின் பட்ஜெட் ரூ 2.5 கோடிதான். விஜய் மில்டன் இயக்கிய இந்தப் படம் ரூ 15 கோடி வரை சம்பாதித்துக் கொடுத்தது.
புதிய கதை, சொன்ன விதம் என இயக்குநரின் திறமையால் ஜெயித்த படம் இது.
நாய்கள் ஜாக்கிரதை
ரூ 3 கோடியில் தயாரான நாய்கள் ஜாக்கிரதை, சிபிராஜுக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்தது. தியேட்டர் வசூல், தொலைக்காட்சி உரிமை எல்லாம் சேர்த்து ரூ 10 கோடி வரை வசூலானது.
நாயின் சாகசங்கள்தான் படத்தின் பலம்.
மீடியாவை கண்டாலே ஓட்டம் பிடிக்கும் த்ரிஷா
திரையுலகிற்கு வந்து 13 வருடங்கள் ஆனாலும் இன்றும் ரசகிர்கள் மத்தியில் அழகு பதுமையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் தற்போது அஜித்துடன் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாமல் ஏதாவது ஒரு கிசுகிசுவிலும் மாட்டிகொண்டேதான் இருக்கிறார். இவரை பற்றி ஒரு புகாரும் எழுந்துள்ளது. அதாவது த்ரிஷா அவர் நடிக்கும் படத்தின், இசை வெளியிட்டு விழாவிற்கோ, இல்லை ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கோ வருவதே இல்லையாம்.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் த்ரிஷா ஜெயம் ரவியுடன் நடித்துள்ள பூலோகம் படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொள்ள அழைத்தபோது அவர் வரவில்லையாம். ஏன் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை என்று கேட்டதற்கு அவர் ஆஸ்திரேலியா சென்றிருப்பதாக ஜெயம்ரவி தெரிவித்தார்.
அதோபோல் கெளதம்மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் படத்தின் பிரஸ்மீட்டோ, ஆடியோ விழாவோ நடந்தால் அதில் அஜித் கலந்து கொள்ளப்போவதில்லை என்பதால் அதை வைத்து தானும் ஜகா வாங்கி விடலாம் என்று நினனத்துக்கொண்டிருக்கிறாரம் த்ரிஷா.
இப்படி த்ரிஷா ஏன் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் மீடியாவை தவிர்த்து வருகிறார் என்று விசாரித்தால், அவரை சந்தித்த எந்த மீடியாவினரும், நல்ல விசயம் பற்றி இதுவரை கேள்வி கேட்டதே இல்லையாம்.
எப்போது சந்தித்தாலும் முதல் கேள்வியே ராணாவுடனான காதல் பற்றிதான் கேட்பார்களாம். இல்லையென்றால் தயாரிப்பாளர் ஒருவருடன் இணைத்து வந்த செய்தியை பற்றி துருவி துருவி கேள்வி கேட்டு டென்ஷன் ஏற்றுகிறார்களாம். அதனால்தான் அவர் மீடியாவைக்கண்டாலே ஓட்டம் பிடிக்கிறாராம் த்ரிஷா.
50 லட்சம் குடுங்க போதும்! : டார்ச்சர் பண்றது ஸ்ரீதிவ்யா இல்ல, அவங்க அம்மா!
ஒரு படம் ஹிட்டானாலே நடிகைகளை கையில் பிடிக்க முடியாது. அவர்களும் ஆகாயத்தில் தான் பரப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஸ்ரீதிவ்யாவுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளக்கார துரை என தொடர்ச்சியாக மூன்று படங்கள் ஹிட்டானால் அலப்பறைகளுக்கு கேட்க வேண்டுமா என்ன?
கைவசம் பென்சில், ஈட்டி, காக்கிச்சட்டை என அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களை வைத்திருக்கும் அவர் இந்த மூன்று படங்களும் கண்டிப்பாக ஹிட்டாகி விடும் என்று படங்களின் தயாரிப்பாளர்களை விட அதிகம் நம்புகிறாராம்.
கூடவே ஸ்ரீதிவ்யாவின் சக போட்டியாளரான லட்சுமிமேனனும் படிப்பதற்காக நடிப்புக்கு தற்காலிக முழுக்கு போட்டு விட்டு போய் விட்டது வசதியாகி விட்டது.
ஹீரோயின் பஞ்சத்தில் தலையைச் சொறிந்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் பெரும்பாலானோர் ஸ்ரீதிவ்யாவையே ஹீரோயினாக கமிட் செய்ய படையெடுக்கிறார்கள்.
டைரக்டர்கள் கதையைச் சொல்லி விட்டு வந்ததும் பின்னாடியே சம்பளம் பேசப் போகும் தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வருகிறார்களாம்.
40 லட்சம் வாங்கிக்கிட்டிருந்தா எம்பொண்ணு, உங்களுக்குத்தான் தெரியுமே நடிச்ச மூணு படமும் நல்ல கலெக்ஷனோட ஹிட்டாகியிருக்கு. அதனால கூட 10 லட்சம் ரூபாய் சேர்த்து குடுங்க, உடனே கால்ஷீட் ரெடி என்கிறாராம் ஸ்ரீதிவ்யாவின் தாய்க்குலம்.
இதனால் வெறு ஹீரோயினும் கிடைக்காமல் சம்பளத்தையும் அதிகமாக கொடுக்க முடியாமல் மனம் நொந்து திரும்புகிறது தயாரிப்பாளர் வட்டம்.
மேனேஜர் வைத்தால் கமிஷனாக சில லட்சங்களை கொடுக்க வேண்டுமென்பதால் தனது அம்மாவையே மேனேஜர் வேலையை கவனிக்கச் சொல்லி விட்டாராம் இந்த உஷாரான ஊதாக்கலரு ரிப்பன்.!
"நானும் ரவுடி தான்".. நல்லா சத்தமா சொல்லுங்க.. நயன்தாராவுக்கு காது கேக்காது!
சென்னை: விஜய் சேதுபதி[1] ஜோடியாக நடித்து வரும் நானும் ரவுடி தான் படத்தில் காது கேளாதவராக நடித்துள்ளாராம் நயன்தாரா[2].
நாயகனைச் சுற்றி வந்து காதலிப்பது, டூயட் பாடுவது என்பது மட்டுமல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நயன் தாரா நடித்து வருகிறார். ஸ்ரீராமராஜ்ஜியம், அனாமிகா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
அந்தவகையில், தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிற்கு காது கேளாதவர் கதாபாத்திரமாம். அத்துடன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்திலும் இப்படம் உருவாகிறதாம்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பெரும்பட்குதி பாண்டிச்சேரியில் படமாக்கப் பட்டுள்ளது.
இது தவிர உதயநிதியுடன் நடிக்கும் நண்பேண்டா படமு, சிம்பு ஜோடியாக நடித்த இது நம்ம ஆளு பட வேலைகளும் முடிந்துள்ளது. இப்படங்கள் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதேபோல், சூர்யா ஜோடியாக மாஸ் படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக தனி ஒருவன் படத்திலும், ஆரியுடன் நைட்ஷோ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். ஒரு மலையாள படத்திலும் அவர் நடிக்கிறார்.
ஜனவரி 14 ம் தேதி ஐ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. யு/ஏ சான்றுடனே வெளியாகிறது?
ஐ[1] படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசத்சந்திரன்.
படத்துக்கு வழங்கப்பட்ட யு ஏ சான்றை மாற்ற முடியாது என தணிக்கைக் குழு உறுதியாகவே இருப்பதால், யுஏவுடனே படம் வெளியாகும் என்று தெரிகிறது.
ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம் பல மாத தாமதத்துக்குப் பிறகு பொங்கலுக்கு வெளியாகிறது.
யு சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் இருந்தனர். இதனால் ஜனவரி 8 அல்லது 14 என்று மாற்றி மாற்றி கூறி வந்தனர்.
இப்போது ஜனவரி 14-ம் தேதிதான் படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
தெலுங்கில் இந்தப் படத்தை மெகா சூப்பர் குட் நிறுவனம் வெளியிடுகிறது.
வெளிநாடுகளில் ஆஸ்கர் ரவிச்சந்திரனே வெளியிடுகிறார்.
2015ஆம் ஆண்டில் திருமணத்திற்காக வரிசையில் நிற்கும் நடிகைகள்
பொதுவாக நடிகைகள் பற்றி காதல், கல்யாணம் குறித்து கிசுகிசு வருவது வழக்கம் தான். ஆனால் சில நடிகைகள் 30 வயதிற்கு மேலாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதால் அவர்களை பற்றிதான் அதிகமான கிசுகிசு வெளிவருகிறது.
அந்த வகையில் நடிகை த்ரிஷாவின் பெயர் தான் அதிகமாக அடிப்படுகிறது. அதேபோல அனுஷ்கா, சமந்தா, அசின், மோனிகா ஆகியோரும் பெயரும் அடிப்பட்டு வருகிறது.
த்ரிஷா:
சில மாதங்களுக்கு முன்பு வரை இவரும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்விருக்கின்றனர் என்றும் தகவல் வந்தன. பிறகு இருவரும் பிறந்து விட்டனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் சமீபத்தில் திடீரென்று த்ரிஷாவும், படத்தயாரிப்பாளர் வருண் மணியனும் நெருக்கமாக இருப்பதுபோல படம் இணையதளங்களில் வெளியானது.
இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. அதை மறுத்தார் த்ரிஷா. தனக்கு எதிராக தவறான வதந்திகள் பரப்பபடுவதாக த்ரிஷா கூறியுள்ளார். நாங்களும் மற்றவர்கள் போலத்தான். எங்களுக்கும் மனசு, காதல், திருமண ஆசைகள் எல்லாம் இருக்கிறது. மற்றவர்கள் போலவே நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார் திரிஷா.
சமந்தா:
த்ரிஷாவிற்கு அடுத்து திருமணம் வதந்தியில் அடிக்கடி அடிபடும் நடிகை சமந்தா. சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா, சித்தார்த்தை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகுதான் அது வதந்தி என்று தெரியவந்தது.
சித்தார்த்தும் சமந்தாவும் ‘ஜபர்தஸ்த்’ என்ற தெலுங்குப் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக இருவரும் ஜோடியாக காளஹஸ்தி கோவில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. சமந்தா தற்போது பத்து எண்றதுக்குள்ள படm மட்டுமே கையில் வைத்துள்ளார். இதனால் அநேகமாக 2015 முடிவதற்குள் திருமண அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
அனுஷ்கா:
30 வயதுக்கு மேலாகும் நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் செய்ய அவர் வீட்டில் ஏற்பாடு செய்து வருகின்றனர். அனுஷ்கா தற்போது‘ருத்ரம்மா தேவி’, ‘பாகுபாலி’, ‘என்னை அறிந்தால்’ என வரிசையாக நடித்து வருகிறார். இதில் என்னை அறிந்தால் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
தற்போது உடற்பயிற்சி செய்து, உடல் எடையையும் குறைத்து வரும் அனுஷ்கா இந்த மூன்று படங்களுக்கு பிறகு புதிதாக படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், இந்த ஆண்டில் அனுஷ்கா திருமணம் செய்துகொள்வார் என்கின்றனர் அவருடைய உறவினர்கள்.
அசின்:
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என்று அனைத்து மொழி சினிமாவும் நடிகை அசினை கைவிட்டு விட்டதால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் அசின். இவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் இளைஞருடன் காதலாம்.
இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்று பெற்றோர்கள் முடிவு செய்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோனிகா:
சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திற்கு மாறி ரஹீமா என்று தன் பெயரை மாற்றி கொண்டவர் மோனிகா. இவர் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் மாலிக் என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 11ஆம் திகதி நடக்கிறது.
மார்ச் மாதம் திருமணம்: த்ரிஷாவின் கடைசி படம் 'என்னை அறிந்தால்'?
மார்ச் மாதம் திருமணம் என்பதால், நடிகை த்ரிஷாவின் தமிழ்த் திரையுலக வாழ்க்கையில் 'என்னை அறிந்தால்' கடைசி படமாக அமையும் வாய்ப்பு நிலவுகிறது.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்'. ஜனவரி 29-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
த்ரிஷா நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக 'என்னை அறிந்தால்' இருக்கும் என்கிறது, அவரது நெருங்கிய திரையுலக வட்டாரம்.
இது குறித்து த்ரிஷாவிற்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, "ஆமாம். த்ரிஷாவுக்கு மார்ச்சில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தாமல், வருண் மணியனின் தயாரிப்பு நிறுவனத்தில் கவனம் செலுத்துவார்" என்றார்கள்.
த்ரிஷா, வருண் மணியன் மற்றும் இருவரின் நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து தாஹ்மஹால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கண்டு களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நவம்பர் 16-ஆம் தேதி மாலை த்ரிஷாவின் செனடாப் சாலையில் உள்ள வீட்டில் வைத்து திருமணப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. த்ரிஷா மற்றும் வருண் மணியன் ஆகிய இரு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
இரு குடும்பங்கள் பேசி முடித்துவிட்டதால், திருமண நிச்சயதார்த்தம் என்பது இம்மாதம் திரையுலக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. இந்த மாதத்துக்குள் மற்ற மொழியில் நடித்து வரும் படங்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு, த்ரிஷா நிச்சயதார்த்தம் செய்துகொள்ள இருக்கிறார்.
திருமணப் பேச்சுவார்த்தையின்போது இருவருமே மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். 2015 மார்ச்சில் இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சொல்வதெல்லாம் பொய் பொய்! கதறும் லட்சுமி ராமகிருஷ்ணன்
ஜீ டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமாகி இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே போன்ற படங்களையும் இயக்கியதோடு பல படங்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ’அது இது எது’ என்ற நிகழ்ச்சியில், லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்ப்பது போல், சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை என்றொரு ஜாலியான நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். அதில் லட்சுமிராமகிருஷ்ணன் கெட்டப்பில் நடித்தவர் அவரை இமிடேட் செய்து நடித்ததோடு, அவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்துவதையும் கலாய்த்திருந்தார்கள்.
இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. பலரும் “என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா..”, “போலீஸைக் கூப்பிடுவேன்..” என்று இணையத்தில் கிண்டல் செய்யும் அளவிற்கு, வசனங்கள் பிரபலமானது. யு-டியூப்பில் பதிவேறிய இந்நிகழ்ச்சியினை எக்கச்சக்கம் பேர் பார்த்துள்ளனர்.
இதனால் ஆரம்பத்தில் தன்னை இப்படி கலாய்த்த அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீது செம கடுப்பில் இருந்தார் நடிகை. ஆனால், அந்த நிகழ்ச்சி அவருக்கு பெரிய பப்ளிசிட்டியை கொடுத்தது. லட்சுமிராமகிருஷ்ணனை தெரியாதவர்களும் தெரிந்து கொண்டார்கள். அப்படியொரு விளம்பரம் அவருக்கு கிடைத்தது.
அதனால், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை வழங்கியவர்களிடம் சண்டைக்கு வரிந்து கட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன், பின்னர் அவர்களை சந்தித்தபோது, என்னை கலாய்ப்பது பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அந்த நிகழச்சியில் கலந்து கொள்பவர்களிடம் நான் எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து பேச வைப்பதாக நீங்கள் சொன்னதுதான் தவறு.
சொல்வதெல்லாம் பொய் என்று கிண்டல் செய்ததும் தவறு. மேலும், குடும்பங்களில் நடக்கும் சில தீர்ககப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்திலேயே அந்த நிகழச்சியை நான் நடத்தி வருகிறேன. இதனால் எனக்கு மனதிருப்தி கிடைக்கிறது. அதனால் இனிமேல் கடுமையான விமர்சனங்களை தவிர்த்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம்.