சினிமா செய்தித் துளிகள் ஆடையின்றி நடித்து பரபரப்பு ஏற்படுத்திய ஹன்சிகா
30 Dec,2014
திறமைசாலிகளுக்கு தளம் அமைத்த வேதிகா!
'மதராசி’ படம் மூலம் சினிமாவில் தனது நடிப்பை ஆரம்பித்த வேதிகா தொடர்ந்து ’காளை’, ‘மலை மலை’, ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ உள்ளிட்ட முக்கிய படங்களின் மூலம் தமிழில் முக்கிய நடிகைகளில் ஒருவராகியுள்ளார். தற்போது சமூக வலைகளில் புதிதாக தனக்கென ஒரு பக்கம் ஆரம்பித்ததோடு ரசிகர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய இணைய தள பக்கத்தில் நிறைய ஓவியங்கள், வீடியோக்கள் வந்து குவிகின்றன. அவற்றில் சிலவற்றை நான் என் பக்கங்களில் வெளியிடுகிறேன். இதையே மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஏன் மாற்றக்கூடாது என்று யோசித்தேன்.
இதற்காக சிறப்பு பக்கத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் ரசிகர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். படைப்பாளிக்கு அதை வெளிப்படுத்த சரியான தளம் கிடைக்காவிட்டால் அது இறந்துபோனதற்கு சமம். அதேபோல் படைப்புக்குரிய விமர்சனமும் கிடைக்க வேண்டும்.
தங்கள் படைப்புகளை தங்கள் பக்கத்தில் வெளியிடும்போது அதற்கு குறைந்த அளவே வரவேற்பு கிடைக்கும். எனவேதான் இதற்காக தனி பக்கம் உருவாக்க முடிவு செய்தேன். உங்கள் படைப்பு எப்போது கவனிக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி கவனிக்கப்படும்போது உங்கள் வாழ்க்கையே மாறும்' என்கிறார் இந்த ‘காவியத்தலைவி’.
நிகிதாவுக்கு நிர்வாண போட்டோவை அனுப்பி ஷாக் கொடுத்த ஆசாமி
முரண், சரோஜா, அலெக்ஸ் பாண்டியன் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் நிகிதா. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் தொடர்பில் இருக்கிறார்.
இவரை ஏராளமான ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். சில குறும்புக்கார வாலிபர்கள் இவரது இணைய தள பக்கத்தை தவறாக பயன்படுத்தி செய்யக்கூடாத சேட்டைகள் செய்கின்றனர். சமீபத்தில் ஒரு ரசிகர் தனது நிர்வாண போட்டோவை நிகிதாவின் டுவிட்டர் பக்கத்தில் போட்டு ஷாக் கொடுத்தார். வேறு சில ரசிகர்கள் நடிகையிடம் ஆபாச கேள்விகள் கேட்கின்றனர்.
இதில் கடுப்பான நிகிதா கோபத்துடன் கூறும்போது, ‘’எனது டுவிட்டர் பக்கம் மூலம் என் ரசிகர்களிடம் தொடர்பு கொள்கிறேன். அவர்களது கருத்து அறிவதற்காக இதை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் சில விஷமிகள் விரும்பத்தகாதவற்றை செய்கின்றனர். ஆடையில்லாமல் ஒருவர் தனது போட்டோவை வெளியிட்டிருப்பதுடன் ஆபாசமாக மெசேஜ் போட்டிருக்கிறார். வேறு சிலரும் இதுபோல் ஆபாச மெசேஜ் அனுப்புகின்றனர்.
இப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான அறிவுரைகள் தேவைப்படுகிறது. நான் மட்டுமல்ல பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற டார்ச்சரை அனுபவிக்கிறார்கள். நடிகை என்பதால் எங்களுக்கு வரும் இதுபோன்ற விவரங்கள் அம்பலத்துக்கு வருகிறது. இதற்கு நான் மட்டுமல்ல எனது ரசிகர்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்” என்றார்.
மேக்கப் இல்லாமல் இலியானாவை பார்க்க முடியாது: சார்மி
தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் சிம்பு ஜோடியாக சார்மி அறிமுகமானார். ஆஹா எத்தனை அழகு, லாடம் படங்களிலும் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானா தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். இலியானாவும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இருவருக்கும் பட வாய்ப்புகள் பிடிப்பதில் பனிப்போர் நடக்கிறது என்று தெலுங்கு
அஜித்துடன் மோதும் தைரியம் இல்லை! பின் வாங்குகிறாரா சிவகார்த்திகேயன்?
அஜித் படம் வருகிறது என்றால் அதே நாளில் போட்டிக்கு படத்தை ரிலிஸ் செய்ய பலரும் தயங்குவாகள். இந்நிலையில் என்னை அறிந்தால் படத்துடன் ஐ, காக்கி சட்டை, ஆம்பள அகிய படங்கள் வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் ஐ பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை, கண்டிப்பாக வரும். ஆம்பள தள்ளி போடலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால், விஷால் எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்று கூற எல்லோரும் இதை வைத்து கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
அதனால், போட்டியில் அவரும் கோபமாக களம் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், சிவகார்த்திகேயன் முன்பே ஒரு பேட்டியில் அஜித்துடன் மோதும் தைரியம் எனக்கு இல்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் காக்கி சட்டை படத்தின் ரிலிஸ் தேதியை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, பொங்கல் படங்களில் ரிசல்ட்டை பார்த்த பிறகு, நம் படத்தை இறக்கலாம் என்று படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அஜித் அல்லது விஜய் யாருக்கு முதலிடம் ஒரு பார்வை க்ளிக் செய்க
கேரவனுக்குள் ஒரு அதிர்ச்சி!
மூன்றெழுத்து நாயகன் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலை ஐந்தரை மணி அளவில் மங்களகரமான கதாநாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது. உடனே அந்த கதாநாயகி தனது தாயார், பாட்டி ஆகிய இருவருடனும் கேரவனுக்குள் புகுந்தார்.
ஒப்பனையை கலைக்கப் போகிறார் போலும் என்று படப்பிடிப்பு குழுவினர் கருதினார்கள். ஒரு மணி நேரமாகியும் கதாநாயகி கேரவனை விட்டு இறங்கவில்லை. என்ன ஆனது? என்று எட்டிப் பார்த்த உதவியாளருக்கு அதிர்ச்சி. கதாநாயகியுடன் அவருடைய அம்மா, பாட்டி ஆகிய இரண்டு பேரும் அமர்ந்து ‘உற்சாகத்துடன்’ சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்களாம்!
’லிங்கா’ படத்தைத் தொடர்ந்து ’விஜய் 58’ ?
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யின் 58வது படம் முழுமூச்சில் நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கர்நாடகாவின் மைசூர் அரண்மனைக்குப் பிறகு பெரிய அரண்மனை லலிதா மஹால் அரண்மனைதான்.இங்கு பல சினிமா படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. சமீப்பத்தில் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பும் இங்கு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பையும் இந்த அரண்மனையில் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘வில்லு’ படத்தின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டது.
தற்போது, இரண்டாவது முறையாக விஜய் படத்தின் படப்பிடிப்புகள் இங்கு நடைபெற இருக்கின்றன. இதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.
லதா ரஜினிகாந்த் சொத்து ஆவணங்களை வங்கியிடமிருந்து மீட்போம்: மீடியா ஒன் நிறுவனம் உறுதி
ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவான ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கினார். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் செலவுகளுக்காக மீடியா ஒன் நிறுவனம் எக்சிம் வங்கியிடம் ரூ.20 கோடி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்காக பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள சொத்து ஆவணங்களை ரஜினி மனைவி லதா உத்தரவாதமாக கொடுத்தார்.
கோச்சடையான் படம் வெளியான பிறகு மீடியா ஒன் பட நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடனுக்கு உத்தரவாதமாக கொடுக்கப்பட்ட லதா ரஜினியின் சொத்துக்களை கைப்பற்றுவதாக வங்கி அறிவித்தது.
இதையடுத்து மீடியா ஒன் நிறுவனம் எக்சிம் வங்கியின் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், மீடியா ஒன் நிறுவனத்தின் தலைவரான முரளி மனோகர் இன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பத்திரிகையாளரை சந்தித்து இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை நாங்கள் 10 ஆண்டு காலமாக நடத்தி வருகிறோம். இந்நிறுவனம் சார்பாக சில படங்களை தயாரித்தும், சில படங்களை விநியோகித்தும் வருகிறோம்.
எங்களுக்கு இந்திய கலாச்சார படங்களை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசை நீண்டநாளாக இருந்து வந்தது. அந்த நிலையில்தான் ரஜினி நடிப்பில் தயாராகி வந்த கோச்சடையான் படத்தை தயாரிக்க முன்வந்தோம்.
மற்ற தமிழ்ப்படங்களைப் போல் அல்லாமல், இப்படம் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தின் உதவியாலேயே நடந்ததால, இப்படம் வெளிவருவதில் சில காலதாமதங்கள் ஏற்பட்டது. அந்த நிலையில் எங்களுக்கு பண நெருக்கடியும் உருவானது.
அப்போது எங்களுக்கு லதா ரஜினிகாந்த் அவர்கள் உதவ முன்வந்தார்கள். அவர்கள் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை வங்கியில் வைத்து, கடன் வாங்கி இந்த படத்தை எடுத்தோம்.
ஆனால், குறிப்பிட்ட தேதியில் அந்த கடனை வங்கியில் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வங்கி நிர்வாகம் சொத்தை கைப்பற்றப் போவதாக அறிவித்தது. எனினும், அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். முழுமையாக கடனை செலுத்தி எங்களுக்கு உதவிய லதா ரஜினிகாந்த் அவர்களின் சொத்து ஆவணங்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைப்போம் என்றார்.
பிரணிதா கோபம் மலை ஏறியது
சில வருடங்களுக்கு முன் தமன்னாவுக்கும், கோலிவுட் ஹீரோவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கோபம் அடைந்தார். தமிழ் படங்களை ஏற்காமல் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார்.
ஒரு வருடத்துக்கு மேல் இந்த கோபம் நீடித்தது. பின்னர் அஜீத் ஜோடியாக ‘வீரம்' படத்தில் நடித்து கோபத்தை கைவிட்டு சகஜநிலைக்கு திரும்பினார்.
அதுபோல் ஒரு நிலைமை ‘சகுனி' படத்தில் நடித்த பிரணிதாவுக்கு ஏற்பட்டது. தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கும் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
படப்பிடிப்பில் அவர் பொருத்தமான காஸ்டியூம் அணியவில்லை, எதிர்பார்த்த நடிப்பையும் வெளிப்படுத்தவில்லை என்று இயக்குனர் கோபம் அடைந்தார். படப்பிடிப்பு தளத்திலேயே பிரணிதாவுக்கு டோஸ்விட்டார்.
கோபம் அடைந்த பிரணிதா அங்கிருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக நித்யா மேனனை இயக்குனர் ஒப்பந்தம் செய்தார். இயக்குனர் மீது இருந்த கோபத்தால் இனி தெலுங்கு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தாராம்.
அவரது கோபம் மாதக்கணக்கில்கூட நீடிக்கவில்லை. தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘அரிமா நம்பி' தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
இதில் விஷ்ணு மன்ச்சு ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரணிதாவுக்கு அழைப்பு வந்தது.
உடனே அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று இன்டஸ்ரிக்காரர்கள் கமென்ட் அடிக்கின்றனர்.
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!
சினிமாவுக்கு முழுக்கு போடும் கவர்ச்சி நடிகை முமைத்கான் : ஏக்கத்தில் ரசிகர்கள்
கவர்ச்சி ஆட்டத்துக்கு பேர் போனவர் முமைத்கான். தெலுங்கில் ஏராளமான படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளதுடன் தமிழில் ‘போக்கிரி‘, ‘மம்பட்டியான்‘, ‘கந்தசாமி‘ போன்ற படங்களிலும் குத்தாட்டம் போட்டார்.
இவரது ஆட்டத்தை பார்த்து புளித்துபோனதால் ரசிகர்கள் புதிய குத்தாட்ட நடிகைகளுக்கு வரவேற்பு காட்டினர். இதனால் முமைத்கானுக்கு பட வாய்ப்பு குறைந்துக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் சைபர் ஆகிவிட்டது. இழந்த வாய்ப்பை மீண்டும் பெற முடிவு செய்த முமைத் இசை ஆல்பம் தயாரித்து வெளியிட்டார். அது எடுபடவில்லை. இதையடுத்து கவர்ச்சி போட்டோக்களை இணையதளத்தில் பரவவிட்டார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.
ஆனாலும் சோர்ந்து போகாமல் கடைசியாக போதை ஏற்றும் வகையில் புதிதாக கவர்ச்சி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து தனது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இதுவும் கைகொடுக்கவில்லையென்றால் அவர் மும்பைக்கு மூட்டைகட்டிக்கொண்டு போக முடிவு செய்துள்ளாராம்.
ஆடையின்றி நடித்து பரபரப்பு ஏற்படுத்திய ஹன்சிகா
ஹன்சிகா எப்போதும் அளவான கிளாமர் கேரக்டரில் தான் நடிப்பார்.
ஆனால், மீகாமன் படத்தில் இவர் நடித்த ஓவர் கிளாமர் காட்சியால் தான் படத்தின் சென்ஸாரில் யு சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி ‘ ஆம், இந்த படத்தின் ஹன்சிகா ஆடை இல்லாமல் நடித்தது உண்மை தான், அதற்காக மிகவும் மோசமாக அந்த காட்சியை எடுக்கவில்லை. இதில் ஹன்சிகாவை இலைமறை காய்மறையாக தான் காண்பித்திருப்பேன். மேலும் அந்த காட்சியை நன்றாக பார்த்தால் ஹன்சிகாவை விட ஆர்யா தான் மிகவும் கவர்ச்சியாக இருப்பார்’ என்று கூறினார்.