கத்தி பட கதை திருடப்பட்டதாக வழக்கு: நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கோர்ட்டில்
கத்தி பட கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேர் அடுத்த மாதம் 23-ந்தேதி நேரில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று தஞ்சை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை எதிர்த்து தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர்(வயது32) என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுக்களில், திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படம், நான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையாகும்.
எனவே கத்தி திரைப்படத்தை வேறு எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும். தொலைக்காட்சியில் கத்தி திரைப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். கதையை திருடியதற்காக உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுக்களை நீதிபதி முகமதுஅலி விசாரணை செய்து, கத்தி திரைப்படத்தை வேறு எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்ய தடைகோரும் மனு மீதான விசாரணையை அடுத்தமாதம்(ஜனவரி) 7-ந்தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், தயாரிப்பாளர்களான சென்னை தி.நகரை சேர்ந்த கருணாகரன், சுபாஸ்கரன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் நஷ்டஈடு வழங்கக்கோரும் மனு மீதான விசாரணையை அடுத்தமாதம் 23-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி முகமதுஅலி அன்றையதினம் கத்தி திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்வில்லியம் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
அஜீத் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்திருக்கிறார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
டீசரை பார்த்த அனைவரும் படத்தின் பாடல்கள் மற்றும் படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்களை டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் வெளியிட உள்ளனர். இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் கிரியேசன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜீத்தின் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் விடியல் மிக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னை அறிந்தால் பாடல்கள் டிசம்பர் 31 நள்ளிரவில் ரிலீஸ்
அஜீத் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்திருக்கிறார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
டீசரை பார்த்த அனைவரும் படத்தின் பாடல்கள் மற்றும் படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்களை டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் வெளியிட உள்ளனர். இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் கிரியேசன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜீத்தின் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் விடியல் மிக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாபி சிம்ஹா நடிக்கும் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
ஜிகர்தண்டா’ படத்திற்குப் பிறகு பாபி சிம்ஹாவிற்கு பட வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தில் சிம்ஹாவின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டதால் புதிய வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
ஜிகர்தண்டா படத்தை இயக்கிய கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘இறவி’, மனோபாலா தயாரிப்பில் ‘பாம்பு சட்டை’ மற்றும் ‘உறுமீன்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்னும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
கல்யாணத்திற்காக பெண் தேடி அலையும் மூன்று இளைஞர்கள், அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகளால் அவர்கள் எடுக்கும் முடிவுகளைத்தான் படத்தின் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இதில் கதாநாயகியாக சரண்யா நடிக்கிறார். மேலும் பாபி சிம்ஹாவுடன், லிங்கா மற்றும் பிரபஞ்செயன் என்னும் புதுமுக நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தை மருதுபாண்டியன் இயக்குகிறார். இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரனின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு சூர்யாவின் மாஸ் ட்ரீட்
பொங்கலுக்கு என்னை அறிந்தால், ஐ, ஆம்பள ஆகிய படங்கள் வெளியாகின்றன. சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு என எல்லா திருவிழாக்களும் கொண்டாட்டமில்லாத தினங்கள்.
பொங்கலையும் அப்படி கைவிட சூர்யாவும், வெங்கட்பிரபுவும் விரும்பவில்லை.
பொங்கலுக்கு சூர்யாவின் மாஸ் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகின்றனர்.
வெங்கட்பிரபு இயக்கிவரும் இந்த ஹாரர் படத்தில் சூர்யாவுக்கு உண்மையாகவே வித்தியாசமான வேடம். நயன்தாரா, ப்ரணித்தா என இரு ஹீரோயின்கள். வெளிநாடுகளில் முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள்.
2015 மார்ச் 27 அல்லது ஏப்ரல் 14 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Home ஞ தமிழ் சினிமா ஞ பாகுபலி படத்திற்காக 6 கிலோ எடை குறைத்த தமன்னா
பாகுபலி படத்திற்காக 6 கிலோ எடை குறைத்த தமன்னா
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகும் பிரம்மாண்ட சரித்திர படம் பாகுபலி. ‘மகதீரா’, ‘நான் ஈ’, ஆகிய படங்கள் மூலம் பிரபலமான ராஜமவுலி இப்படத்தை இயக்குகிறார்.
பாகுபலி படத்தில் ராணா, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் போன்றோரும் நடிக்கின்றனர். கடந்த வருடம் ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
தமன்னாவுக்கு இதில் சண்டைக் காட்சிகள் உள்ளன. இதற்காக 6 கிலோ எடை குறைத்துள்ளார். இதுகுறித்து தமன்னா கூறியதாவது:– நிறைய படங்களில் ரசிகர்கள் என்னை கவர்ச்சியாக பார்த்துள்ளனர். பாகுபலி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறேன்.
இதில் அவந்திகா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். நகைகள், காஸ்ட்யூம்கள் எல்லாமே சரித்திர காலத்தை பிரதிபலிக்கும். இந்த கேரக்டருக்காக எடை குறைக்கும்படி டைரக்டர் ராஜமவுலி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று கடும் பயிற்சிகள் செய்தேன். உணவு கட்டுப்பாட்டிலும் இருந்தேன். தற்போது ஆறு கிலோ எடை குறைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த படத்தில் தமன்னா, குதிரை சவாரி செய்யும் காட்சிகளிலும் நடிக்கிறார். இதற்காக குதிரையேற்றம் பயிற்சிகளும் எடுத்தார். ஆபத்தான சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளாராம். திரையுலக வாழ்க்கையில் பாகுபலி முக்கிய படமாக இருக்கும் என்றார்.
40 படங்களுக்கு சான்றிதழ் அளிக்க மறுப்பு: தணிக்கை குழுவை எதிர்த்து வழக்கு
தமிழ்பட தயாரிப்பாளர்கள் தங்களது புது படங்களுக்கான தலைப்புகளை தயாரிப்பாளர் சங்கத்திலும் சினிமா, டெலிவிஷன் தயாரிப்பாளர் சங்க கில்டிலும் பதிவு செய்கின்றனர். இங்கு பதிவு செய்யப்படும் படங்களை தணிக்கை குழுவினரும் பார்த்து சான்றிதழ் அளித்து வந்தனர்.
ஆனால் தற்போது திடீரென சினிமா டெலிவிஷன் தயாரிப்பாளர் சங்க கில்டில் பதிவு செய்யப்பட்ட படங்களுக்கு தணிக்கை சான்று அளிக்க தணிக்கை குழு மறுத்துவிட்டது. இதனால் 40 படங்களின் தயாரிப்பாளர்கள் தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
தயாரிப்பாளர் சங்க கில்டில் இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் மோதல் காரணமாகவே தணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளதாக தணிக்கை குழு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் சங்க கில்டில் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்று உள்ளனர். இவர்கள் ஏற்கனவே பொறுப்புகளில் இருந்த கிரிதிலால் நாக்பால் உள்ளிட்ட பலரை நீக்கிவிட்டனர். இதனை எதிர்த்து அவர்கள் கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.
இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. இதை காரணம் காட்டியே 40 படங்களுக்கும் தணிக்கை சான்று மறுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தணிக்கை குழு அதிகாரி பக்கிரிசாமி கூறும்போது, ஒரு சங்கத்தில் இரு கோஷ்டிகள் உரிமை கொண்டாடுகின்றனர். இந்த சர்ச்சையால் தான் தணிக்கை சான்று அறிவிப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். கோஷ்டி பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் இறுதி தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம் என்றார்.
தணிக்கை குழு சான்று அளிக்க மறுப்பதை எதிர்த்து கில்டு செயலாளர் டி.ஆதிராம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் சங்க நிர்வாகிகளுக்குள் பிரச்சினை இருப்பதை காரணம் காட்டி படங்களை தணிக்கை செய்வதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது. அதற்கு தணிக்கை குழு அதிகாரிக்கு உரிமை இல்லை.
அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கையால் சுமார் 40–க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை சான்று பெற முடியாமல் முடங்கி கிடக்கின்றன.
எனவே உடனடியாக கில்டு உறுப்பினர்கள் படங்களை தணிக்கை செய்வதற்கு மண்டல தணிக்கை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆதிராம் சார்பில் மூத்த வக்கீல் மோகன் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை ஜனவரி 6–ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மாமனார் மருமகன் உறவைச் சொல்லும்
முத்தையா இயக்கியிருக்கும் கொம்பன் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவது என முடிவு செய்து அறிவித்தும் விட்டனர். என்னை அறிந்தால் பொங்கலுக்கு வெளியாகாது என்ற நம்பிக்கையில்.
ஆனால் என்னை அறிந்தால் பொங்கலுக்கு கண்டிப்பாக வெளியாகும் என்பதால் கொம்பன் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.
கடா மீசை வைத்து கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படத்தில் மாமனார் மருமகன் உறவை பிரதானமாக சொல்லியிருக்கிறார்களாம். மாமனார் ராஜ்கிரண், மருமகன் கார்த்தி.
லட்சுமி மேனன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் கோவை சரளா தனது கெட்டப்பை மாற்றி அம்மா வேடத்தில் நடித்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனையும் ஒரு வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.
முத்தையா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பிரியா கதாநாயகியாக அறிமுகமாகும் சோன் பப்டி
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருப்பவர் பிரியா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’ படத்திலும் கார்த்திக்கு தங்கையாக நடித்திருக்கிறார்.
இவர் ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தங்கை கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரியா ‘சோன் பப்டி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை திருமணத்திற்கு முன்பே பிரியா நடித்து முடித்து விட்டார். தற்போது இப்படக்குழுவினர் பின்னணி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்தில் நாயகனாக ‘வழக்கு எண் 18/9’, ஓநாயும் ஆட்டுகுட்டியும்’ படத்தில் நடித்த ஸ்ரீ நடித்திருக்கிறார். மேலும் நிரஞ்சனாவும் இப்படத்தில் மற்றொரு நாயகியாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தை ஷிவானி இயக்கியிருக்கிறார். ஜனவரி மாதம் இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
.
கே.பி.யின் இழப்பு ஈடு செய்ய முடியாதது – நடிகர் சங்கம் இரங்கல்
கே.பாலசந்தர் மறைவுக்கு தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது் –
இந்திய திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான கே.பி. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பெற்ற இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், தனது கலைப்பயணத்தை தஞ்சை தரணியில் திண்ணை நாடகங்களில் ஆரம்பித்து மத்திய அரசு பணியில் அமர்ந்து மேடை நாடகங்கள் மூலமாக தனக்கென்று ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டவர். இவரது மேடை நாடகங்கள் அந்தக்காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.
பின்னர் தமிழ் திரையுலகில் தனி முத்திரையை பதித்தவர். இன்றுவரை தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பல நட்சத்திரங்களை உருவாக்கியவர் கே.பாலசந்தர். தென்னிந்திய தொழிலாளர்களின் நலன்களில் பெரும் அக்கறை செலுத்தினார்.
கே.பாலச்சந்தரின் மறைவு இந்திய திரையுலகத்துக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். அவரை பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.