மாஜி காதலி முன் மனைவிக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த அமிதாப்
18 Jan,2014
மாஜி காதலி முன் மனைவிக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த அமிதாப்
மும்பை: மாஜி காதலி ரேகா முன் மனைவி ஜெயாபச்சனுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமிதாப்பச்சன்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் ரேகா. அப்போது இருவரும் நெருக்கமாக பழகினர். இருவரும் காதல் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டு பிரிந்தனர்.
ஜெயா பச்சனை மணந்தார் அமிதாப். மாஜி காதலி ரேகா மீது ஜெயாபச்சனுக்கு கோபம் இருந்து வந்தது. எங்காவது சந்திக்க நேர்ந்தாலும் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவார். இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த விருது விழாவில் ஜெயா பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் அமிதாப், மகன் அபிஷேக்பச்சன் கலந்துகொண்டதுடன் அமிதாப்பின் மாஜி காதலி ரேகாவும் கலந்துகொண்டார். அவரை பார்த்ததும் ஜெயா பச்சன் டென்ஷன் ஆனார். பதற்றமுடனே காணப்பட்ட அவர் மேடையில் நேருக்கு நேர் ரேகாவை சந்தித்தபோது கோபத்தை வெளிக்காட்டாமல் கைகுலுக்கினார்.
விருது பெற்றுக்கொண்டு மீண்டும் இருக்கைக்கு வந்து ஜெயா கணவர் அமிதாப் அருகில் அமர்ந்தார். அவருக்கு வாழ்த்து கூறிய அமிதாப் அன்பை வெளிக்காட்டும் விதமாக மனைவி ஜெயாபச்சனுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்தார். இந்த அரிய காட்சியை அங்கிருந்த போட்டோகிராபர்கள் சரமாரியாக போட்டோ எடுத்து தள்ளினர்.
விழாவுக்கு வந்த ஜெயா பச்சனும், ரேகாவும் ஒரு விஷயத்தில் ஒத்துப்போயிருந்தனர். இருவருமே சரிகை வேய்ந்த பிங்க் நிற பட்டு சேலை அணிந்திருந்தனர்.