விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, வெளியாகவுள்ள சீறும் புலி திரைப்படம்!
25 Oct,2020
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, தமிழ் திரைப்படம் ஒன்று உருவாக்கப்படுகிறது.
சீறும் புலி என்ற பெயரில் உருவாகும் இத்திரைப்படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் பொபி சிம்ஹா இந்த திரைப்படத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை ஏற்கனவே நீலம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த ஜீ.வெங்கடேஷ்குமார் இயக்குகிறார்.
முன்னதாகவே அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறைக்கொண்ட வெப் சீரியலில் நடிக்கலாம் என்ற தகவல்கள் பரவலாக வருகின்றது..
வீரப்பன் வாழ்க்கை மற்றும் ராஜீவ் கொலை வழக்கை திரைப்படமாக எடுத்த இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய வெப் சீரியலை இயக்க உள்ளதாகவும், எனவே அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அணுகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.