சென்னையை மிரட்ட வருகிறது இரண்டு புயல்.. மக்களே உசார்!  எச்சரிக்கை!
                  
                     04 Oct,2017
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	 
	 
	 
	இந்த மாதம் இரண்டு புயல்கள் சென்னையை பலமாக தாக்கும் என்று இந்த புயலால் பலத்த சேதம் உண்டாகும் என இந்திய வானிலை மையம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
	 
	டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழை பற்றியும் புயல்களின் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் தகவல்களாக வெளியிட்டுள்ளது.
	 
	 
	 
	 
	 
	அதாவது வருகின்ற அக்டோபர் 7ம் தேதி மற்றும் 12ம் தேதிகளில் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாகிறது. முதல் புயலானது 11ம் தேதியும், அடுத்த புயல் 20ம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் கரையைக் கடக்கும்.
	 
	இந்த புயல் வர்தா புயல் ஏற்படுத்திய சேதத்தைவிட மிக பயங்கரமாக ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் தற்போதே உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்திருப்பது மிகவும் நல்லது.