–
ஜோர்டானில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு தென்மேற்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கராக் நகரில் உள்ள கிரேக்க தேவாலயத்தில் நேற்று தீவிரவாத தாக்குதல் நடந்தது.
தேவாலயத்தில் இருந்தவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல்களை நடத்தினர். இதில், 8 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோர்டான் மன்னர் அப்துல்லா, குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.
தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், ஜோர்டான் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜோர்டானின் கராக் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது நேற்று (அக்.23) . இந்த தாக்குதலில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த கோழைத்தனமான தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறோம்.
இக்கட்டான இந்தச் சூழலில், ஜோர்டான் அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இந்தியா உறுதுணையாக நிற்கிறது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தில் எங்களது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.



