வெப்பநிலை உயர்வு- முடிவுக்கு வரும் 1.5ஊC ஐநா-வின் அதிர்ச்சி அறிக்கை

 

பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய ஒன்றான 1.5ஊC என்ற அளவிற்குள் உலக வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தும், புவி வெப்பமயமாதல் இலக்கை அடைவது இனி சாத்தியமில்லை என்று ஐநா கூறியுள்ளது. ஐநா சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) தனது சமீபத்திய 2026 உமிழ்வு இடைவெளி அறிக்கையில் (Emissions Gap Report 2026) இதனை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகல் போதுமானதாக இல்லாததால், அடுத்த சில ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை 1.5ஊC என்ற வரம்பை தாண்டுவது நிச்சயம் எனவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மிகச்சிறந்த திட்டங்களின்படி பார்த்தால் கூட, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலக வெப்பநிலை 1.7ஊC முதல் 1.8ஊC வரை உயர்ந்து விடும், அதன் பின்னரே குறைய தொடங்கும். வெப்பநிலையை மீண்டும் 1.5ஊC-க்கு கீழ் கொண்டு வர வேண்டுமானால், உலகளாவிய கார்பன் உமிழ்வை 2030-க்குள் 18%, 2035-க்குள் 45% குறைக்க வேண்டும். அத்துடன் வளிமண்டலத்திலிருந்து கோடிக்கணக்கான டன் கார்பன் டை ஆக்சைடை அகற்ற வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1.5 டிகிரி செல்சியஸிற்கு மேல் புவி வெப்பமடைவது அதிகரிப்பது, “பனிப்படலங்கள், உறைபனி நிலத்தடியில் சேமிக்கப்பட்டுள்ள கார்பன், கடல் நீரோட்டங்கள் மற்றும் பவளப்பாறை அமைப்புகள் ஆகியவற்றில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான அபாயத்தை அதிகரிப்பதோடு, மனிதர்களுக்குப் பேரழிவுகரமான பாதிப்புகளையும் உண்டாக்கும்” என்பதை இந்த அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது.