ஞானசார தேரருக்கு மீண்டும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்- ஜீ,எல்.பீரிஸ்

 

ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பில் நடைமுறை சார்ந்த தவறு ஏதேனும் இருப்பின், அவற்றைச் சரிசெய்து முழுமையான மன்னிப்பை மீண்டும் வழங்குவதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருக்கிறது. அதனை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என பேராசிரியர் ஜீ,எல்.பீரிஸ் தெரிவித்தார்.அரசுச் செய்திகள்

மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் திங்கட்கிழமை (19) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். இந்நாட்டின் மகாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாகவே முன்னாள் ஜனாதிபதி அந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

குறித்த பொது மன்னிப்பை வழங்குவதில் ஜனாதிபதியிடம் தெளிவான நோக்கமும் தெளிவான தீர்மானமும் இருந்தது. அவர் அனைத்து விடயங்களையும் பரிசீலித்தே ஞானசார தேரருக்கு அம்மன்னிப்பை வழங்கினார். ஆனால், தற்போதைய அரசாங்கம் அந்த முடிவில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகக் கூறி, அவ்விடயத்தை மீண்டும் வெளிக்கொண்டுவந்து அவரை மீண்டும் சிறையிலடைத்துள்ளது.அரசியல் செய்திகள்

பொது மன்னிப்பு வழங்கவுவதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு சிறிசேன ஜனாதிபதியின் தவறல்ல; அது ஜனாதிபதி செயலகத்தினால் இடம்பெற்ற நடைமுறை சார்ந்த தொழில்நுட்பக் கோளாறாகும்.

இவ்வாறானதொரு தவறுக்காக மன்னிப்புப் பெற்ற நபரின் மீது எவ்விதத்திலும் பொறுப்பைச் சுமத்த முடியாது. மன்னிப்புப் பெற்ற நபருக்கு அந்த நடைமுறையின் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. அந்த செயற்பாட்டுக்குள்ளேயே இந்த நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அப்படியானால், தற்போதைய ஜனாதிபதிக்கு ஞானசார தேரருக்கு அம்மன்னிப்பை வழங்குவதற்கு முழுமையான அதிகாரம் உள்ளது. அதேபோல, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையும் மாற்றமின்றி அப்படியே உள்ளது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஞானசார தேரருக்கு இம்மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, இவ்வாறானதொரு சூழ்நிலையில், தொழில்நுட்ப ரீதியான அல்லது நடைமுறை சார்ந்த தவறு ஏதேனும் இருப்பின், அவற்றைச் சரிசெய்து மீண்டும் அத்தகைய குறைபாடுகள் ஏற்படாத வகையில் ஞானசார தேரருக்கு முழுமையான ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடாகும் என்றார்.அரசுச் செய்திகள்