வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி காங்கிரஸ்,கரப்பான்பூச்சி ஜனதா உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.கலாச்சாரம் காண்
இந்தப் போராட்டத்தை இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்திருந்ததுடன், சேவ் டெமாக்ரசி, எஸ்எப்ஐ மற்றும் சவுத் ஏசியா சாலிடிட்டி குரூப் உள்ளிட்ட பல்வேறு புலம்பெயர் அமைப்புகள் இதற்கு ஆதரவளித்தன. லண்டன் நாடாளுமன்ற தெருவில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே கூடிய மாணவர்கள் வாக்கு திருட்டை நிறுத்து என்ற கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சமூக ஆர்வலர் துருவ் ரத்தி உரையாற்றினார். இந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே மற்றொரு குழுவினர் கூடி மோடி, மோடி என முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினர்.



