மகள்களை உணவுக்காக விற்கும் கொடூரம்!!!

 

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட அமைப்பான தாலிபான் அமைப்பு. கடந்த 1991 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசை வீழ்த்தி தலைநகர் காபூலை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தது. இதற்கு பிறகு அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலின் பொது ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவு கொடுத்ததாக அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு படைகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி, தாலிபான் ஆட்சியியை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

தொடர்ந்து அமெரிக்க ஆதரவு அரசு ஆப்கானிஸ்தானில் அமைந்தது, எனினும் தாலிபான் அச்சுறுத்தல் இருந்ததால், அமெரிக்க படைகள் அங்கு நிலை கொண்டனர், இச்சூழளில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார், அதற்கு பிறகு மீண்டெழுந்த தாலிபான்கள் அங்கிருந்த அரசை வீழ்த்திவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றினர்.

அதற்குப் பிறகு தாலிபான் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளும் விதிக்கப்பட்டன, இதனை காரணமாக காட்டி ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பொருளாதாரம் மற்றும் உணவு உதவிகளை பல்வேறு நாடுகள் ரத்து செய்தனர். இதனால் ஆப்கானிஸ்தானில் முன் எப்போதும் இல்லாத அளவு வறுமை தலைவிரிதது ஆடுகிறது.

மேலும் நிதி பற்றாக்குறை காரணமாக 440 க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூடப்பட்டிருப்பதாகவும், அந்த நாட்டின் 40 விழுக்காடு மக்கள் குடிநீர் கூட இல்லாமல் வறுமையில் வாடுவதாக கூறப்பட்டிருக்கிறது.

இதனால் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு சிறப்பு கவனம் எடுத்து உதவ வேண்டும். என்று ஐநா கோரிக்கை விடுத்திருக்கிறது, இதனிடையே வறுமை காரணமாக, ஆப்கானிஸ்தானில் சிறு வயது மகள்களை திருமண வரதட்சனையை பெற்று வயதானவர்களுக்கு திருமணத்திற்காக விற்கும் நிலை உருவாகி இருப்பதாகவும், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்பு விற்பனை அதிகரித்து இருப்பதாகவும், கார்டியன் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது போன்ற நிலை காரணமாக சிறுவயதில் கர்ப்பம் ஆகி குழந்தை பிறப்பின் பொது, தாய் செய் உயிரிழப்பும் அதிகரித்திருக்கிறது, இது ஆப்கானிஸ்தானில் கோர நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.