முன்னணி இசையமைப்பாளர் தேவா காலமானார்!.. திரையுலகினர் இரங்கல்!..

 

நடிகர் பிரசாந்த் கோலிவுட்டில் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கியவர் தேவா. அதன்பின் தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்து ஒரு கட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். பாட்ஷா, அண்ணாமலை படங்களுக்கு தேவா கொடுத்த இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தனது படங்களில் அதி அளவில் கானா பாடல்களை பயன்படுத்தினார்.

இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் இசையமைத்து வந்தாலும் தேவா நிறைய படங்களுக்கு இசையமைத்தார். முன்னணி இயக்குனர்கள் பலரும் தங்களின் படங்களுக்கு தேவாவை இசையமைக்க வைத்தனர். ஆனால் கடந்த 20 வருடங்களில் புதிய இசையமைப்பாளர்களின் வரவு காரணமாக தேவா இசையமைப்பது நின்று போனது.

இந்நிலையில்தான், தற்போது அவர் மாரடைப்பில் காலமாகிவிட்டார் என்கிற செய்தி வெளியாகி ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. அவருக்கு வயது 76. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்துவிட்டது