மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 17-2026

 

மேஷ ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை தரும். தொழில்துறையில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பெற்றோர்களுக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டி வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் கிடைக்கும். கிழக்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வேலை உத்திரவாதம் வந்து சேரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு தேவையான வெளிநாட்டு உதவிகள் வந்து சேர்வது. உங்கள் திட்டங்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: ஏதாவது இடையூறு ஏற்பட்டு கவனத்தை சிதறடிப்பது. வீட்டில் மனைவி புரிந்து கொள்ளாமல் நடப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுக்கக் கூடாது. 2 முக்கியமான காரியங்களை தள்ளிப் போடக்கூடாது. 3 உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! நன்மையான செய்திகள் வந்து சேரும் நாள். வேலை இடத்தில் உங்களின் திறமை பாராட்டப்படும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தொழிலில் புதிய பாதை அமையும். வருமானம் பெருகி மன தைரியம் உண்டாகும். வியாபாரம் மேன்மையாக நடக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை பெறுவார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலை வளர்க்க திட்டம் வகுத்து செயல்படுவீர்கள். அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வேலை அதிகம் இருப்பதால் குடும்பத்தில் கவனம் செலுத்த இயலாமல் தடுமாறுவீர்கள். திடீர் செலவுகள் வந்து சேரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஜாமீன் கொடுப்பதில் நிதானமாக இருக்க வேண்டும். 2 வங்கிக்குச் செல்லும் போது பணத்தை பத்திரப்படுத்த வேண்டும். 3 வரவு செலவு கணக்குகளை முறையாக சரி பார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்

மிதுன ராசி அன்பர்களே! உயர்ந்த பலன்கள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள் பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் தீரும். தொழிலில் புதிய மாற்றம் உருவாகும். பண வரவு தேவைக்கேற்ப வந்து சேரும். வேலை இடத்தில் திறமை பாராட்டப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோகபலன் அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனலாபம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: உங்களின் சாதுரியமான அணுகுமுறையால் தொழில் சிறப்பாக நடப்பது. தேவையான உதவிகள் வந்து சேர்வது. இன்று உங்கள் பலவீனம்: வெளியில் சொல்ல முடியாத சோகம் மனதை அழுத்துவது. அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள மோசடியில் ஏமாந்து விடக்கூடாது. 2 அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். 3 சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! சிறப்பான யோகம் வரும் நாள். வியாபாரத்தில் அதிகமான லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த எதிர்ப்புகள் மாறும். வேலை இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். கையிருப்பு கூடும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அரசு வேலையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடு நடக்கும். யோக பலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பான பலன் பெறுவார்கள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய சித்தி அடைவார்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

தொழில் போட்டிகளை சாமர்த்தியமாக விலக்குவீர்கள் மதி நுட்பத்தோடு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

உங்களிடம் உதவி பெற்றவரே எதிராக நடப்பது. உறவினர்களின் தொல்லை மனதை சங்கடப் படுத்துவது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வேலையில் செலுத்தும் அக்கறையை வீட்டிலும் காட்ட வேண்டும்.

2 அவசியமற்ற வாக்குறுதிகளை கொடுக்கக் கூடாது.

3 வாகனம் ஓட்டும்போது கவனம் சிதற கூடாது.

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள்.

வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! நன்மையான காரியங்கள் நடக்கும் நாள் இன்று. உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் சிறப்பு சேரும். பதவி உயர்வு உண்டாகும். சம்பள அதிகரிப்பு ஏற்படும். வியாபாரத்தில் மிகுதியான லாபம் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். குறை கூறுபவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு தேவையான உதவி வெளிநாட்டில் இருந்து கிடைக்கும். ஊழியர்கள் உங்கள் மனதை புரிந்து கொண்டு நடப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: என்றோ நடந்த சம்பவம் இன்றும் உங்கள் மனதை உறுத்தும். வீட்டு பிரச்சினைகள் வேலையில் கவனத்தை செலுத்த விடாது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவுசெலவு கணக்குகளில் கவனம் வேண்டும். 2 பங்குச்சந்தை வியாபாரத்தில் நிதானம் வேண்டும். 3 ஆன்லைன் வர்த்தகத்தில் எச்சரிக்கை வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! மங்கலகரமான செய்திகள் கிடைக்கும் நாள். உங்கள் சொல்லுக்கு மரியாதை ஏற்படும். தொழிலில் நேர்மையும் திறமையும் வருமானத்தை பெருக்கும். வேலை இடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வருமான உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகி கையில் பணம் புரளும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியை உறுதி செய்வீர்கள். அரசியல்வாதி ஒருவர் பக்கபலமாக இருப்பார். இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் கவனக்குறைவாக நடந்து கொள்வது. திடீரென குழப்பம் அடைவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனங்களில் போகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 தொலைபேசியில் வரும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்க கூடாது. 3 பெண்கள் விஷயத்தில் சற்று விலகியே இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

துலாம் ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் நாள். மன உறுதி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். பங்குப் பரிவர்த்தனையில் சிறப்பான உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு யோகபலன் வந்து சேரும்.

விசாகம் நட்சத்திரக்காரர்கள் பூமி லாபம் கிடைக்கும் .

இன்று உங்கள் பலம்:

வெளிநாட்டில் இருக்கும் நண்பர் நீங்கள் கேட்ட உதவியை செய்வார். அரசு வேலைகள் உடனே நடக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

உங்களின் அவசரங்களை வீட்டில் புரிந்து கொள்ள மாட்டார்கள். உறவினர்களின் தொல்லையும் சிரமப்படுத்தும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 அடுத்தவர்களின் பேச்சை காதில் வாங்க கூடாது

2 ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக் கூடாது.

3 தேவையில்லாமல் செலவுகள் செய்யக் கூடாது.

அதிர்ஷ்ட எண்: 6,3

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

விருச்சிக ராசி அன்பர்களே! வியாபாரம் சிறப்பாக நடக்கும். வருமானம் பெருகும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை இடத்தில் உங்களின் திறமை வெளிப்படும். அரசு அலுவலகங்களில் வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். வீட்டில் நல்ல காரியம் நடக்கும். கடன் சுமை குறையும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பூமி லாபம் கிட்டும். இன்று உங்கள் பலம்: புதிய முதலீடுகளை செய்வதற்காக தனித்துவமான திட்டம் போடுவீர்கள். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: சில நேரங்களில் தேவையற்ற இடையூறுகள் சிரமப்படுத்தும். தூக்கமின்மை பலவீனப்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 குறை சொல்லும் உறவினர்களை கவனமாக அணுக வேண்டும். 2 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருக்க வேண்டும். 3 பிள்ளைகளின் விஷயத்தில் அன்போடு அணுக வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! சிறப்பான வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். மேன்மையான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும். கையிருப்பு கூடும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மை உண்டாகும். பூராடம் நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நிறைவேறும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு உயரும். இன்று உங்கள் பலம்: அரசு அதிகாரிகளின் உதவி உடனே கிடைப்பது. அரசாங்க வேலைகள் தாமதம் இன்றி நடப்பது. இன்று உங்கள் பலவீனம்: மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது. உறவினர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவது.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அவசியமற்ற செலவுகளை செய்யக்கூடாது. 2 கடன் வாங்கி இன்னொருவருக்கு கடன் கொடுக்கக் கூடாது. 3 அரசாங்க வேலைக்கு தாமதமாக செல்லக்கூடாது.. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! சிறப்பான காரியங்கள் நடக்கும் நாள். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். அரசாங்க ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். தொழில் பொறாமைப்படும் அளவிற்கு முன்னேற்றம் அடையும். கோயில் திருப்பணி செய்யும் வாய்ப்பு உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு நீங்கும். குலதெய்வத்தினுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்குப் பெருகும்.

திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் சேர்க்கை உண்டாகும்.

இன்று உங்கள் பலம்:

சாமர்த்தியமான பேச்சால் மிகப்பெரிய சிக்கலை தவிர்ப்பீர்கள். தொழில் பார்ட்னர்கள் உங்களுக்கு கட்டுப்படுவார்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

அவசரமாக கிளம்பும்போது வாகனம் மக்கர் செய்யும். பிள்ளைகளின் போக்கு மன நிம்மதியை கெடுக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வெளியூர் செல்லும் போது பணம் பத்திரம்.

2 கையில் இருக்கும் காசை செலவு செய்வதில் கவனம் தேவை.

3 வாகனத்தில் செல்லும்போது வேடிக்கை பார்க்க வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்: 9,2

அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். பூமி லாபம் கிட்டும். வியாபாரம் எதிர்பாராத லாபத்தை கொடுக்கும். தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்படும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு அதிகரிக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் மேம்படும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காரியம் நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு பூமி லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலை உயர்வு உண்டாகும். இன்று உங்கள் பலம்: புதிய நுட்பத்தோடு வியாபாரத்தை பெருக்க திட்டம் போடுவீர்கள். கால நேரம் பார்க்காமல் பாடுபடுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: அவசரமான நேரத்தில் நண்பரின் உதவி தள்ளிப் போவது. மனைவியின் பேச்சு மனதை சங்கடப்படுத்துவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 திட்டமிட்ட வேலையை உடனே செய்து விட வேண்டும். 2 பணம் பரிவர்த்தனைகளில் நிதானம் வேண்டும். 3 வேலை இடத்தில் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! நல்ல பலன்கள் நடக்கும் நாள். நீங்கள் திட்டம் போட்ட செயல் தடையில்லாமல் நடக்கும். வியாபாரத்தில் செய்த நுட்பங்கள் பலன் கொடுக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் பேச்சும் செயலும் செல்வாக்கை கொண்டு வரும். அரசியல் வட்டாரத்தில் பழக்கம் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யப்படும். எதிர்ப்புகள் மறைந்து போகும். பதவி உயர்வு கிடைக்கலாம். விருப்பப்பட்ட வேலை மாறுதல் உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான காரியம் நடக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று உங்கள் பலம்: எதிர்ப்புகளைத் தாண்டி போராடி வெல்லும் மன தைரியம் இருப்பது. எந்த காரியத்திலும் தயங்காமல் இறங்குவது. இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் சம்பந்தமில்லாத சர்ச்சைகள் ஏற்படுவது. மற்றவர்களின் பேச்சால் மன நிம்மதி இழப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் 2 பணத்தை கண்ட இடத்தில் வைக்க கூடாது. 3 வேலை இடத்தில் தேவையில்லாமல் பேசக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 30 – புரட்டாசி – பராபவ வருடம் சனி நாள் சனி திதி சப்தமி (up to October 18, 8:28 am) நட்சத்திரம் மூலம் (up to 9:47 am) பூராடம் (up to October 18,12:48 pm) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 10:45 – 11:45 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11:45 am / 9:30 – 10:30 pm இராகு காலம் காலை 9.00 – 10.30 எமகண்டம் மதியம் 1.30 – 3.00 குளிகை காலை 6.00 – 7.30 சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் சந்திராஷ்டமம் மிருகசீரிடம் சூரியோதயம் 6:03 AM சூரிய அஸ்தமனம் 5:45 PM சந்திரோதயம் Oct 17 11:31 AM சந்திர அஸ்தமனம் Oct 17 11:00 PM