மீண்டும் ஸ்டார்ஷீல்ட்’ செயற்கைக்கோள் சேவை உக்ரைனுக்கு

 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராணுவப் பிரிவான ஸ்டார்ஷீல்ட்  செயற்கைக்கோள் இணைய அமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த வேகக் கட்டுப்பாடுகள் காரணமாக உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் பாதிக்கப்பட்டன. அதிக வேகத்தில் செல்லும் ஆளில்லா விமானங்களின் தொடர்புத் தட்டச்சுகள் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்தச் சேவை மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னறிவிப்பின்றி விதிக்கப்பட்ட இந்தத் தடைகளால் களத்தில் பல தாக்குதல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளித்த தொழிலதிபர் இலான் மாஸ்க், ஸ்டார்ஷீல்ட் அமைப்பு அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதற்கான பயன்பாட்டு விதிகளைப் பென்டகனே தீர்மானிப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், வெள்ளை மாளிகை அதிகாரிகள் இந்தத் தடையை தாங்கள் பிறப்பிக்கவில்லை என மறுத்துள்ளதால், சிக்கலுக்கு யார் காரணம் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. வணிக ரீதியிலான ஸ்டார்லிங்க் சேவை தற்காப்புப் பணிகளுக்கு மட்டுமே உரியது என்றும், தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அதைப் பயன்படுத்த முடியாது என்றும் மாஸ்க் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது சேவை மீட்டெடுக்கப்பட்ட போதிலும், இந்தத் தடடீர்க்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உக்ரைன் பாதுகாப்புத் துறை அமெரிக்கா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எல்லைப் பகுதியில் ட்ரோன் செயல்பாடுகளைத் தடையின்றித் தொடர மாற்றுத் தகவல் தொடர்பு அமைப்புகளையும் உக்ரைன் ராணுவம் ஆய்வு செய்து வருகிறது.