இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் இருந்து Cognizant, Infosys, Tcs, Wipro, HCL Capgemini ஆகிய நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுளது. Microsoft, Adobe ஆகிய நிறுவங்களும் இந்த நடவடிக்கையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்திய செய்திகள்
அமெரிக்க தொழிலாளர் துறையின் செயலாளர் கீத் செண்டர்லின் இந்த நிறுவனங்கள் தொடர்பான, புதிய மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை செயல்படுத்துவது இடைநிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார், நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் என்பது அமெரிக்காவில் பணியாற்றும், வெளிநாடு உழியர்களுக்கு குறிப்பாக ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அடிப்படையில் கிரீன் கார்டு பெறுவதற்கான முக்கியமான முதல் கட்டமாகும்.
இந்த சான்றிதழ் இல்லாமல் அடுத்த கட்டமாக ஐ114 நடைமுறைக்கு செல்ல முடியாது, அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் வகையில் வெளிநாடு ஊழியர்களை பயன்படுத்தியதாகவும், விசா நடைமுறைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், அமெரிக்க அதிகாரிகள் குற்றசாட்டுகளை வைத்துள்ளனர், குறிப்பாக Microsoft மற்றும் Adobe நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நிறுனங்களில் பணிபுரியும் வெளிநாடு ஊழியர்களின் புதிய கிரீன் கார்ட் விண்ணப்பங்கள் தாமதமாக கூடும், அதே நேரத்தில் இந்த நடவடிக்கை ஹெச்1பி விசாவை நேரடியா ரத்து செய்வதாக பொருள் அல்ல எனவும் முக்கியமாக நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்ட நடைமுறையையே பாதிக்கிறது.



