சென்னை கிண்டியில் குறும்படம் தயாரிப்பதாகக் கூறி 26 வயது இளைஞரிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வர்ஷினி வெங்கட் கிண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்
மேலும், கூடுதலாக ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டுவதாக இளைஞர் புகார் அளித்த நிலையில் வர்ஷினி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட வர்ஷினியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசரின் தகவலின்படி, வர்ஷினி ஒரு இளைஞரிடம் குறும்படம் தயாரிக்கப் போவதாக கூறி 5 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் அதற்கு பிறகு குறும்படம் தொடர்பான விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, கொடுத்த பணத்தை திருப்பி தருபடி அந்த இளைஞர் கேட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தை திருப்பி தருவது தொடர்பாக அந்த நபருக்கும், வர்ஷினிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். இதனால் அந்த இளைஞர் கிண்டி காவல் நிலையத்தில் வர்ஷினி மீது புகார் அளித்துள்ளார். மேலும், இந்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.



