மடக்கும் வசதி கொண்ட போல்டபிள் ப்ரோ மேக்ஸ் மாடல் வெளியீடு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ, 18

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் நேற்றிரவு அறிமுகப்படுத்தப்பட்டன. முதல் முறையாக மடக்கும் வசதி கொண்ட போல்டபிள் ஐபோனையும் ஆப்பிள் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர ஐபோன் அறிமுக விழாவை நேற்று நடத்தியது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுக விழா கலிபோர்னியாவில் நேற்றிரவு நடந்தது.

கடந்த 1ம் தேதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) பதவியேற்ற ஜான் டர்னஸ் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. இந்த விழாவில் ஆப்ஆப்பிள் புதிய தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) ஜான் டர்னஸ் புதிய மாடல்களை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் டுயோ எனப்படும் மடிக்கக்கூடிய ஐபோன் ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.

அதே போல் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர் போட்களையும் அவர் அறிமுகப்படுத்தினார். மடி விழாவில் ஜான் டெர்னஸ் பேசுகையில், ஆப்பிள் ஐபோன் 18, அதிநவீன செயல்திறன் மற்றும் மேம்பட்ட கேமரா வசதிகளுடன் வெளிவந்துள்ளது. ஐபோன் ப்ரோ மாக்ஸ் பெரிய திரை மற்றும் நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி கொண்டது.
பயன்படுத்தப்பட்டுள்ளன.கேமரா தரம் மற்றும் பேட்டரி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 18 ப்ரோ ஆரம்ப விலை 1199 டாலர்கள், 18 ப்ரோ மேக்ஸ் ஆரம்ப விலை 1299 டாலர்கள், போல்டபிள் ஐபோன் அல்ட்ரா ஆரம்ப விலை 1,999 டாலர்கள் என்றார்.