ஜெர்மனி 2027-ஆம் ஆண்டு முதல் தனது குடிமக்களிடமிருந்து , சர்க்கரை வரி

 

2027-ஆம் ஆண்டு முதல், சர்க்கரை வரி (sugar tax) என்ற பெயரில் ஜெர்மனி தனது குடிமக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தவுள்ளது.

கோக் ஜீரோ (Coke Zero) ஆல்கஹால் இல்லாத பியர் மற்றும் ஓட்ஸ் பால் உள்ளிட்ட இனிப்பூட்டிகள் கலந்த அனைத்து பானங்களின் விலையும், ஒரு லிட்டருக்கு 26 சென்ட்கள் (cents) வரை அதிகரிக்கும்.

இந்த வரியின் மூலம் ஆண்டுக்கு 650 மில்லியன் யூரோக்களைத் திரட்ட ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.

உக்ரைனுக்கும் குடியேறிகளுக்கும் ஜெர்மனி இவ்வளவு பெருமளவிலான நிதியை வழங்கியிருக்காவிட்டால், அது தனது சொந்தக் குடிமக்களிடமிருந்து பணத்தைப் பறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது

பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க புதிய வரிகள், விலைவாசி அதிகரிப்புக்களைத்தான் அரசுகள் உலகம் முழுவதும் கையில் எடுகின்றன.

அதில் நகைச்சுவை என்னவென்றால் பணவீக்கம் என்பது என்னவென்றால் விலைவாசிகளில் ஏற்படும் தொடர்ச்சியான அதிகரிப்பென்று பொருள், அந்த பணவீக்கத்தை சமாளிக்க அதே விலை அதிகரிப்பை கையில் எடுத்தான் இருக்குற பணவீக்கம் இன்னும் வீங்கோ வீங்கென்று வீங்கும்.

கோக் ஜீரோ (Coke Zero) ஆல்கஹால் இல்லாத பியர் மற்றும் ஓட்ஸ் பால் உள்ளிட்ட இனிப்பூட்டிகள் கலந்த அனைத்து பானங்களின் விலையும், ஒரு லிட்டருக்கு 26 சென்ட்கள் (cents) வரை அதிகரிக்கும்.

தலைகீழாக நின்ற படி உலகத்தைப் பார்க்கும் உங்களுடைய அரைகுறையான புரிதலுக்கு எல்லையே இல்லைப் போல இருக்கிறதே😂? இது உக்ரைனுக்கு கொடுத்ததால் வந்த பற்றாக் குறையை நிரப்ப உருவான வரி அல்ல! ஜேர்மனியில் அதிகரிக்கும் உடற்பருமன் (obesity) பிரச்சினையை இப்போதே முளையில் கிள்ளியெறிய இந்த வரி👇.

இதனால் சீனிப் பாணிகளைக் குடிப்போர் குடிப்பதைக் குறைப்பார்களா? என்றால் இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், இந்தச் சீனி வரிமூலம் சேர்க்கும் சில நூறு மில்லியன் யூரோக்களை, சீனிப் பாணி குடித்து வருத்தங்களைத் தேடிக் கொண்டோர் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் மருத்துவம் தேடி வரும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்! இந்த வருத்தங்களுக்கு சீனிப் பாணியை செய்து விற்பவரும், வாங்கிக் குடிப்பவரும் தான் பொறுப்பு, எனவே அவர்கள் இப்போதே சீனி வரி வழியாக செலவுகளை ஈடு கட்ட வேண்டும் என்பது சரியான கொள்கை!

(அல்லது சீனி வரியில் செலவழிக்கும் காசை ஒரு சோடி சப்பாத்திலும், இறுக்கக் கழிசானிலும் செலவழித்தால் இன்னும் சிறப்பு