மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 26-ஆகஸ்ட் 2026

 

மேஷம்:அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். முன்கோபம் நீங்கும். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவி யை நாடுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர்.சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும். பிள்ளைகளால் கையிருப்பு கரையும். யாரையும் நம்பி வேலையை ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பழைய நினைவுகளில் மூழ்குவீர். சிலர் நன்றி மறந்து பேசுவர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கன்னி: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரலாம். மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வார்கள். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

 

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

விருச்சிகம்: பணவரவு திருப்தி தரும். சோர்வு நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

தனுசு: வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர் அறிமுகமாவார். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

மகரம்: கையிருப்பு கரையக் கூடும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். மனைவி, பிள்ளைகளின் உடல்நிலை பாதிக்கலாம். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். புதிய பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கும்பம்: எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் இன்று வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.

மீனம்: ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

ஆவணி 09 | புதன்கிழமை

திதி: திரயோதசி திதி காலை 8 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: திருவோணம் நள்ளிரவு 12.48 வரை. பிறகு அவிட்டம்.

நாமயோகம்: சௌபாக்யம் காலை 7.58 வரை. பிறகு சோபனம்.

நாமகரணம்: தைதுலம் காலை 8மணி வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5

யோகம்: சித்தயோகம் நள்ளிரவு 12.48 வரை. பிறகு பிரபலாரிஷ்ட யோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

அஸ்தமனம்: மாலை 6.23.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்வளர்: பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 7

பரிகாரம்: பால்