யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தனது மருத்துவ அறிக்கையில் இந்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார். தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள எண்ணிக்கை
சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை இரவு 9.30 மணி நிலவரப்படி 400ஐ தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது.



