சியூட்டாவிற்குள் பெருமளவில் மக்கள் எல்லையைக் கடந்து வருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளற்ற ஷெங்கன் திட்டத்தின் கீழ் ஸ்பெயினுடனான தனது எல்லை ஏற்பாடுகளை இடைநிறுத்துவதாக இத்தாலி அறிவித்துள்ளது.
பாரிஸுடன் உடன்பாடு
இத்தாலிக்கு ஸ்பெயினுடன் தரைவழி எல்லை இல்லை என்றாலும், இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே விமானம் அல்லது படகு மூலம் பயணம் செய்பவர்களைப் பாதிக்கும்.
பிராங்கோ – இத்தாலிய தரைவழி எல்லையில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த பாரிஸுடன் உடன்பாடு எட்டியுள்ளதாகவும் இத்தாலியின் உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



