அர்ஜென்டினாவின் லா ரியோஹா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதை அணைப்பதற்காக, மேற்கு சான் வான் மாகாணத்தில் இருந்து தீயணைப்புத்துறை ஹெலிகாப்டர் புறப்பட்டது. பெல் ரகத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர்,
எதிர்பாராத விதமாக இஷிகுவாலாஸ்டோ பூங்கா அருகே விபத்துக்குள்ளானது. இதில் தீயணைப்பு வீரர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



