!
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய் ஜூன் 22 அன்று தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரை உலகப் பிரபலங்கள் பலரும் அவருக்குத் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் பிறந்தநாளுக்குத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்த முன்னணி நடிகை தத்ரிஷா, இந்த முறை ஜூன் 22 அன்று பகலில் எந்தவொரு பதிவும் வெளியிடாதது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை அன்ஃபாலோ (Unfollow) செய்துவிட்டார் என்றும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் சில வதந்திகள் வேகமாகப் பரவின. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் இது குறித்து தீவிரமாக விவாதித்து வந்த நிலையில், நேற்று (ஜூன் 23) மதியம் த்ரிஷா வெளியிட்ட ஒரு சர்ப்ரைஸ் பதிவு ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பிரத்யேகப் புகைப்படம் ஒன்றை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தில், அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கேக் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றிய மற்றொரு கேக்கின் முன்பு முதலமைச்சர் விஜய் கேஷுவலான உடையில் புன்னகையோடு நிற்கிறார். அவருக்கு அருகில் நின்று த்ரிஷா அவரைப் பார்த்தபடி மகிழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த த்ரிஷா, அனைத்தையும் அர்த்தமுள்ளதாக்கும் அந்த மனிதருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 00.00) என்று மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் ‘00.00’ என்று அவர் குறிப்பிட்டிருப்பது, நள்ளிரவு 12 மணிக்கே தான் முதல் ஆளாக வாழ்த்தியதை உணர்த்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
விஜய்யின் தவெக கட்சி மாநாடு, முதலமைச்சராகப் பதவியேற்ற விழா மற்றும் அண்மையில் சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி எனத் த்ரிஷா தொடர்ந்து விஜய்யுடன் பொதுவெளியில் இணைந்து காணப்பட்டது ஏற்கனவே பேசுபொருளாக இருந்தது. த்ரிஷா உண்மையில் விஜய்யை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவே இல்லை என்பதால் ‘அன்ஃபாலோ’ வதந்தி பொய்யானது என உறுதியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த நள்ளிரவு கேக் வெட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.




