இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் மேற்காசியாவில் பதற்றம் நிலவிவருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈராக், சிரியா தங்களது வான்வெளியை மூடின. ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. தெஹ்ரான், டப்ரிஸ், இஸ்பகான் நகரங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. டிரம்ப் பேச்சை மீறியதால் பதற்றம்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈராக், சிரியா தங்களது வான்வெளியை மூடின. நேற்றைய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் தெஹ்ரான், டப்ரிஸ், இஸ்ஃபகான் நகரங்கள் மீது இஸ்ரேல் கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
நேற்று இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஈரான் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் விமானப் படை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. லெபனானை இஸ்ரேல் தாக்குவதை கண்டித்து ஈரான் இஸ்ரேலை தாக்கிய நிலையில் பதில் தாக்குதலை நடத்தி இருக்கிறது இஸ்ரேல்.
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, , ஈரான் நிலப்பரப்பின் மீது இஸ்ரேல் நடத்தும் முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.
இந்தத் தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, “ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டாம், அமைதி காக்கவும்” என்று வலியுறுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் டிரம்ப் பேச்சினை மீறி இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.




