உலகின் மிக சிறந்த மற்றும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்களின் பட்டியலில், டென்மார்க் நாட்டின் தலைநகரம் முதலிடம் பிடித்துள்ளது. 2026-ல் சர்வதேச அளவில் மிகச் சிறந்த மற்றும் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களில், டென்மார்க் தலைநகரமான கோபன்ஹேகன் (Copenhagen) பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில், 2-ஆவது ஆண்டாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முதலிடம் பிடித்து உள்ளது. 2025-ஆம் ஆண்டில் வியன்னாவை (Vienna) பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்த இந்நகரம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தற்போதைய பட்டியலில் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா 2-ஆம் இடமும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் 3-ஆம் இடமும் பிடித்து உள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி நகரம் இந்த பட்டியலில் 120-ஆவது இடத்தையும், மும்பை 121-ஆவது இடத்தையும், சென்னை 123-ஆவது இடத்தையும், பெங்களூரு 127-ஆவது இடத்தையும் பிடித்து உள்ளன.இந்திய அரசியல்
இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள கோபன்ஹேகன் நகரம் மொத்தம் 100-க்கு 98 புள்ளிகளைப் பெற்றது. குறிப்பாக மதிப்பீட்டுப் பட்டியலின் ஐந்து பிரிவுகளில் மூன்றில் அதாவது ஸ்திரத்தன்மை, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்த நகரம் முழு மதிப்பெண்களைப் பெற்றது. அத்துடன், சுகாதாரம் மற்றும் கலாச்சாரம்-சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளிலும் முறையே 96 மற்றும் 95 எனச் சிறப்பான புள்ளிகளைப் பெற்றது. அதே போல தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையே மிகச்சிறந்த சமநிலையை (Work-life balance) வழங்கும் நகரங்களில் டென்மார்க் தலைநகரம் முதன்மையானது.



