கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரான துராஹ் ராஜூ சுப்ரமணியம் என்பவர் வேலைவாய்ப்புகள் என்ற பெயரிலான டெலிகிராம் குழுவின் மூலம் சிங்கப்பூரில் சட்டவிரோத பொருட்களை பெற்றுவந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக அரசு அதிகாரிகள் போல் நடித்து நடத்தப்பட்ட மோசடியில் சிக்கிய பெண் ஒருவரிடம் இருந்து 1600 தங்கக் கட்டிகளை துராஹ் பெற்றுக்கொண்டுள்ளார்.
பிறகு அந்த தங்க கட்டிகளை தன்னை அனுப்பியவர்களிடம் ஒப்படைத்துள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது சுப்ரமணியம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் இரண்டு மாதம் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் வைரத்தை திருடி வசமாக சிக்கிய 2 இந்தியர்கள்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சைனாடவுன் நகைக்கடையில், போலி வைரத்தை வைத்து, 4.95 கேரட் அசல் வைரத்தை திருடியதாக 2 இந்திய சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா தப்பிச் செல்ல முயன்ற இருவரும் விமான நிலையத்தில் பிடிபட்ட நிலையில், ஒருவருக்கு 2 ஆண்டு 2 மாதம் சிறைத் தண்டனை, மற்றொருவரின் வழக்கு விசாரணையில் உள்ளது.



