பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: மகளின் திருமணம், மகனின் வேலை என்று அலைச்சல் இருக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். முன்கோபத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு வரக்கூடும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர். குடும்பத்தினரால் செலவுகள் வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பழைய வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
சிம்மம்: சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
கன்னி: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். ஓரளவு லாபம் கிட்டும்.
துலாம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை கவருவீர். பணவரவு உண்டு. கருத்து வேறுபாடு நீங்கி தம்பதிக்குள் நெருக்கம் கூடும். முன்கோபம் குறையும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
விருச்சிகம்: பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர். லாபமுண்டு.
தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தைசீர் செய்வீர். அலுவலகத்தில் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
மகரம்: எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். பூர்வீக நிலம், வீடு விற்பனையாகும். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு வரலாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கும்பம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். உரிய அங்கீகாரம் கிட்டும். வியாபாரத்தில் லாபமுண்டு.
மீனம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்தி தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகள் முடியும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.




