மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: இதமான பேச்சுகளால் சில காரியங்களை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்துக் கொள்வீர். தம்பதிக்குள் மகிழ்ச்சி உண்டு. தந்தையின் உடல்நிலை சீராகும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகி அன்யோன்யம் பிறக்கும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்.
துலாம்: எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக்கூடும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்பீர்.
தனுசு: வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். அலுவலகத்தில் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்தி தேடி வரும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். புது அனுபவம் கிடைக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.
மீனம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு செயல்படுவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும்.
பராபவ – ஆடி 05 | செவ்வாய்க்கிழமை
திதி: அஷ்டமி நாளை அதிகாலை 5.17 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: சித்திரை இரவு 8.49 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: சித்தம் மாலை 6.24 வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: விஷ்டி மாலை 4.36 வரை. பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51.
அஸ்தமனம்: மாலை 6.38.
ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட: எண் 3, 5
பரிகாரம்: பால்
தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை



