திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்தல் நகர் மையவாடி வீதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (04) வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
காபர்ட் வீதிக்கான செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது, வீதியின் ஓரத்தில் புதைக்கப்பட்டிருந்த இந்த வெடிக்காத கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அடைக்கப்பட்டிருந்த போத்தல் ஒன்றினுள் மற்றுமொரு கைக்குண்டு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




