நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை அன்று சிறைச்சாலை அதிகாரிகளை இலக்கு வைத்து கைதிகள் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தன்று, சிறைசாலையின் பிரதான நுழைவாயிலில் இருந்த பலகை கதவுக்கு சிறைகைதிகள் சேதம் விளைவித்த போது கைதிகள் வெளியேறுவதை தடுப்பதுக்காக, துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு சிறை கைதிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் வைத்திருந்தமையை காட்டிகொத்தை சம்பவத்தை முன்னிருத்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகள் இரு தரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சம்பவம் இடம்பெற்று முறுநாள் கைதிகள் அதிகாரிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தன்று, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலை நுழைவாயிலில் இருந்த இரும்பு கதவை உடைத்து, பலகை கதவுக்கு சேதம் விளைவித்த போது, அங்கு பணியிலிருந்த அதிகாரி, கைதிகள் வெளிவருவதை தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நில் குறித்த சிறைசாலை அதிகாரியை கொலைசெய்வதாக கைதிகளால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுாக தெரியவந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள், “வெளியில் வைத்து உன்னைக் கொலை செய்வோம்” என அந்த அதிகாரிக்குக் கடுமையான கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், சிறைச்சாலையின் அவசர நிலைமையைக் கருத்திற் கொண்டு குறித்த அதிகாரி அன்றைய தினம் சேவைக்குச் சமுகளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, இக்கலவரத்தை வழிநடத்திய பிரதான சூத்திரதாரியான அறியப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவர் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்குள்ள சக கைதிகளால் அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் காயமடைந்த கைதி எழுந்து நடமாடா முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேஷ் மற்றும் ‘ரொக்கி’ என்ற கைதி உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழுவே இக்கலவரத்தைத் திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. ரொக்கி என்ற கைதி, கலவரத்தின் பின் தமக்கும் இதற்கும் தொடர்பில்லை எனக் காட்டுவதற்காக அதிகாரிகளுடன் இணைந்து கைதிகளுக்கு உணவு வழங்குவதாக தெரிவித்து சாமர்த்தியமாக நடந்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுவதோடு, குறித்த 13 கைதிகளும் தற்போது பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களம் , நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த 22 ரிப்பீட்டர் ரகத் துப்பாக்கிகளையும் 10 டி-58 ரகத் துப்பாக்கிகளையும் தமது பறிமுதல் செய்துள்ளதுடன், எஞ்சிய ஆயுதங்களையும் பொறுப்பேற்கவுள்ளது. அத்துடன், கலவரத்தின் போது காணாமல் போயிருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரகத் துப்பாக்கியொன்றும் சிறைச்சாலை வளாகத்தினுள்ளேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் மரணத்தின் பின் பதவி உயர்வுகளும், தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமன ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ஜெய்லர் எஸ்.எச். சந்திரவம்ச முதலாம் வகுப்பிற்கும், ஏனயை 7 சார்ஜன்ட்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஒரு சில அதிகாரிகளின் இறுதிக்கிரியைகளும் நேற்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



