இந்த ஆவணக்கட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை முஸ்லீம்; 1988 ஏப்ரல் 19ம் திகதி இவர்களை ‘முஸ்லிம்கள்’ என்ற தனி இனக்குழுவாக விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர் (LTTE-Muslim Accord, the satanic force, பாகம்- 1, பக்கம்: 747); ஊர்காவல்படை மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மாத்திரமே ஒருமுகப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்படும். முஸ்லிம்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டதென்று (புலிகள் மறுத்துள்ள போதிலும்) அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவை குறித்து எதுவுமே பதிவிடப்படாது என்பதையும் முன்கூட்டிய பறைந்துகொள்கிறேன்.
இதைத் தொகுப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதும் தம்மால் எழுதப்படும் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் தமது தரப்பால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் அனைத்தையும் வேண்டுமென்று மறைத்தே தமிழர் தரப்பு மீதான கொலைப் பழிகளை விரிப்பர். அவ்விரிப்புகளில் நல்லபிள்ளை வேடமிட்டு தாம் முதலில் தமிழரைத் தாக்கவில்லை என்பது போன்றும் தமிழரே சும்மா இருந்த தம்மைத் தாக்கினர் என்பதான தோற்றப்பாட்டையும் உண்டாக்கியிருப்பர். அதாவது மெய்மைக்கு மாறாக பொய்யான தோற்றப்பாட்டை உண்டாக்கியிருப்பர். மேலும், அதில் தமிழர் தரப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்ட கொலைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்த தம்மால் தமிழருக்கு ஏவல்செய்யப்பட்ட படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் எழுதியிரார். ஆகவே காலம் காலமாக இருந்துவந்த இந்த முஸ்லிம் பக்கம் மட்டும் நியாயம் கேட்பு என்பதற்கு மாறாக தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளையும் எடுத்துரைக்க இவ் ஆவணக்கட்டு முயலும்.
மேலும் தமிழர் தரப்பும் இதுநாள் வரை வீரியமாக சிங்களவரின் படுகொலைகளை ஆவணப்படுத்தியது போல் முஸ்லிம்களின் அட்டூழியங்களை ஆவணப்படுத்த சிரத்தை எடுத்ததில்லை என்பது எம்தரப்பின் வலுவீனமே. ஆகவே அக்குறையினை போக்கும் படியாகவும் தமிழர் தரப்பு அனுபவித்த கொடுமைகளை எடுத்துரைக்கவும் இவ்வாவணக்கட்டு எழுதப்படுகிறது.
இதில் எனது சொந்த எழுத்தாக ஆதாரங்களின் துணையோடு எழுதியிருப்பது “முன்னுரை” மாத்திரமே. மேற்கொண்டு பதிவிட இருப்பவை எல்லாம், பல்வேறு நம்பகமான வலைத்தளங்கள், மாதயிதழ்கள், நாளேடுகள் மற்றும் சில குறிப்பிட்ட பன்னாட்டு அமைப்புகளால் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஊர்காவல்படை, & காடையர்கள் பற்றியும் அவர்களால் ஈழப்போர் காலத்தில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றியும் வெளியிடப்பட்ட கட்டுரைகள், செய்திகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவையே ஆகும். சுருகங்கச் சொல்லின் ஒரு தொகுப்பாக இருக்கும்.
இவ் ஆவணக்கட்டானது தொடர்ந்து என்னால் இற்றைப்படுத்தப்பட்டு எமது தமிழ் தேசத்திற்கு இலங்கை முஸ்லிம்களின் இனவெறியால் ஏவல்செய்யப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பான ஒரு பாரிய வரலாற்றுப் பேழையாக, அடுத்தடுத்த தலைமுறைகளின் வரலாற்று அறிவுப்பெட்டகமாக பேணப்படும்.
*****
Edited June 21 by நன்னிச் சோழன்
Like
3
Thanks
3
நன்னிச் சோழன்Grand Master
நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
36.9k
posts
1.6k
Reputation
Gender:Female
Location:அனுமானாக
Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
September 9, 2023
தொடங்கியவர்
கருத்துக்கள உறவுகள்+
முன்னுரை
தமிழீழத்தின் சுதந்திரத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசின் படைத்துறை இயந்திரத்தின் கைகளால் தென் தமிழீழ தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாதவை.
சிங்கள இனவாதிகளால் ஏலவே திட்டமிடப்பட்ட ஒரு மண் பறிப்பு நிகழ்சி நிரலுக்கு ஏற்ப, தமிழரின் ஊர்மனைகள் அழிக்கப்பட்டு மண்பறிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியதால் தமிழரின் ஆட்புலங்கள் திட்டமிட்டு சுருக்கப்பட்டன.
இந்த ஊர்மனைகளில் வாழ்ந்த அல்லது விரட்டியடிக்கப்பட்ட பின் ஊர் திரும்பவிழைந்த தமிழரின் உயிர்கள் சிங்களப்படைகளாலும், சிங்களக் குடியேற்றவாசிகளை கொண்டு உருவாக்கப்பட்ட “ஊர்காவல்படை” என்ற துணைப்படையாலும் காவுகொள்ளப்பட்டன.
இவ்வாறான சூழ்நிலையில் அகப்பட்டு தென் தமிழீழ தமிழ் மக்கள் அல்லுற்றுக்கொண்டிருந்த வேளையில் அழிவு மற்றொரு வடிவத்திலும் வந்து சேர்ந்தது.
தமிழர்களோடு ‘பிட்டும் தேங்காய்ப் பூவும்’ போல முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர் என்ற அரசியல்வாதிகளின் கூற்றானது – குறிப்பாக, தமிழரசுக் கட்சி சார்பில் 1960 & 1968 ஆண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்த அமரர் அல்ஹாஜ் எஸ். சி. எம். மசூர் மௌலானா இவ்வுவமையைப் பாவித்துள்ளார் – பொய்யாகும் வகையில் தமிழர் மீதான முஸ்லிம்களின் தாக்குதல்கள் முற்றிப்போயிருந்தன, குறிப்பாக 1990ம் ஆண்டளவில்.
1985இற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழர்கள் மீது முஸ்லிம்களால் ஆங்காங்கே பெருந் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் முதன்முதலில் செய்யப்பட்டது 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி வீரமுனை (Tamilnation: State and Muslims Desecrate Ancient Tamil Village, K.N.Tharmalingam, Northeastern Herald May/June 2003) ஊரை எரித்தழித்தது ஆகும். இதுபோன்றவற்றில் குறிப்பிடத்தக்கது 1967 ஏப்ரலில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட சாய்ந்தமருது தமிழ்ப் பிரிவு அழிப்பு (Tamilnation: New Year’s Bloody Dawn: Karativu 1985 K.N.Tharmalingam – Northeastern Herald October/November 2003). இவை மட்டுமன்றி இரு தரப்பிற்குமிடையில் காணிச் சிக்கல்கள் என இன்னும் பல சிக்கல்கள் நடந்தேறியிருந்தன. ஆனால் 1985 ஏப்ரலில் நடந்த ‘காரைதீவுப் புத்தாண்டுத் தாக்குதல்’ போன்று சிங்கள அரசின் துணையோடு அவை நடைபெற்றிருக்கவில்லை.
இவ்வாறாக, அவ்வப்போது நடைபெற்றுவந்த உள்ளூர் குமுகாய மோதல்களை ஊதிப்பெருப்பித்து தொடர் இன-மத மோதலாக்கிய பெருமை ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையும் லலித் அதுலத்முதலியையுமே சாரும்.
அமரர் எம்.எச். மொகமது
காரைதீவுப் புத்தாண்டுத் தாக்குதலை சிங்கள அரசின் துணையோடு முஸ்லிம்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர். இவ்வழிப்புக்குத் துணையாக அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனாவால் எம்.எச். மொகமது என்ற முஸ்லிம் அமைச்சரும் அவரின் ஆதரவாளர்களும் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். தாமதமாகினும், இவ்வழிப்பின் போது வெளி மாவட்ட முஸ்லிம்களும் பங்கேற்றிருந்தனர் என்ற தகவலை அமைச்சர் எஸ்.தொண்டமான் புலப்படுத்தினார்
எவ்வாறெயினும் அக்காலத்திலும் ஆங்காங்கே வெகுசில முஸ்லிம்கள் தம்மை மத அடிப்படையில் முஸ்லிமெனாது, பேசும் மொழியால் தமிழராக மட்டும் அடையாளப்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். முதல் இஸ்லாமியத் தமிழ் மாவீரர் லெப். ஜோன்சன் {ஜெயா ஜுனைதீன்}, 2.6.1986 அன்று தலைநகர் திருமலைக்கு அருகிலுள்ள மேன்காமம் என்ற சிற்றூரிலிருந்து பிடித்துச்செல்லப்பட்டு சிங்களக் குடியேற்ற ஊரான தெகிவத்தையிலிருந்த படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 தமிழ்ப் பெண்கள் (ஆகக் குறைந்து ஒராள் ஆடை களையப்பட்டு) குறித்த தகவல்களை மேஜர் கணேஸின் முகாமிற்கு ஓடிவந்து வழங்கிய இளைஞன் (விடுதலைப்புலிகள் குரல் 11) என்பன 1987இற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வுகளில் நானறிந்த குறிப்பிடத்தக்கன ஆகும்.
தமிழ்த் தேசியப் போராட்டத்திற்குள் மதப் பிளவையும் குழப்பத்தையும் நிரந்தரமாக விதைப்பதை நோக்கமாகக் கொண்டு சிங்களத் தலைவர்களால் கேந்திர கொள்கை மொசாட்டின் ஆற்றுகையோடு வகுப்பிக்கப்பட்டது. அவற்றுள் ஒன்றுதான் முஸ்லீம் ஊர்காவலர்களைப் பாவிப்பதாகும் (Tamilnation: The forced evacuation of Muslims in 1989: Some Reflections, Nadesan Satyendra, 1996). அதை முஸ்லிம் குமுகாயத்திற்குள் நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறுவனர் மு. ஹு. மு. அஷ்ரப் முக்கிய பங்கு வகித்தார். அக்கால கட்டத்தில் சிறிலங்கா அரசோடு சேர்ந்தியங்கி வந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதில் முக்கிய பங்காற்றியது
கிழக்கு மாகாணத்தில், 1990களுக்கு முன்னர், அஷ்ரப் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி “இஸ்லாமிய ஜிகாத்” என்ற அமைப்பை நிறுவினார். அதில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் உடன் தொடக்கத்தில் தொடர்பு/உறுப்பினராக இருந்த தமிழீழத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை சேர்த்துக் கொண்டார். பின்னர் மதவெறி மூலம் உந்தப்பட்ட பன்னூறு முஸ்லிம் இளைஞர்கள் தாமாக இணைந்துகொண்டனர்.
இடையில், அஷ்ரபினால் மேற்கோள்ளப்படவிருந்த மற்றொரு நாசத் திட்டத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.
1992ம் ஆண்டில், அஷ்ரப் மீண்டும் ஒரு தமிழின அழிப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவ்வாண்டு சூலை மாதத்தில் தனி முஸ்லிம் படையணி ஒன்றை சிறிலங்கா படைத்துறையில் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் சிறிலங்கா படைத்துறை அதிகாரி ஒருவர் இக்கோரிக்கை கருத்தில் கூட எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று மறுத்துரைத்திருந்தார். அப்போது சிறிலங்காவின் ஒட்டுக்குழுவாக விளங்கிய புளட் அமைப்பினைச் சேர்ந்த சித்தார்த்தன், இவ்வுருவாக்கல் மூலம் அஷ்ரப் புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்க முயல்கிறார் என்று மறுதலித்தார் (முஸ்லிம் ஜிகாத் படையணி: தமிழ்க்குழுக்கள் ஆட்சேபம், 1992/07/31, ஈழநாதம்). இந்த புளட் கும்பலும் (தமிழர்களால் ஆனது), இதே போன்று இன்னொரு கும்பலான ரெலோவும் சிங்களப் படைகளோடு சேர்ந்து தமிழர்களை கொலை செய்தது, 1990களில், என்பது குறிப்பிடத்தக்கது.
இது மறுக்கப்பட்டமையால், பின்னர் மீளவும் 19/10/1992 அன்று மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார் அஸ்ரப். அதில் முஸ்லிம் படைத்துறைப் பிரிவொன்றை அமைக்கத் தவறினால் தாம் தனி போராளிப் படை ஒன்றை அமைப்போம் என்று உரைத்தார். மட்டுமின்றி சிறிலங்காப் படைத்துறையில் முஸ்லிம் பிரிவு அமைக்க தாம் 10 ஆயிரம் முஸ்லிம்களைத் தருவோம் என்றும் அதனை கொண்டு சிறிலங்காப் படைத்துறையில் உள்ள ஆளணி சிக்கல்களைத் தீர்ப்பதோடு புலிகளுக்கு எதிராகவும் போராடலாம் என்றார். அத்துடன் புலிகளுக்கு மொசாட் உதவுவதாக குற்றஞ்சாட்டியதோடு புலிகளுக்கு எதிராக “ஜிகாத்” என்ற புனிதப்போரை அறிவிக்கவும் தயங்க மாட்டோம் என்றார்
இவ்வாறு இஸ்லாமிய ஜிகாத் என்ற பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொண்டவர்கள், பின்னாளில், இந்தியப்படை ஈழ மண்ணிலிருந்து வெளியேறியவுடன், பிரேமதாசா அரசினால் உருவாக்கப்பட்ட ஊர்காவல்படையினுள் உள்வாங்கப்பட்டனர் (உதயன்: 27/05/1995, “ஜிகாத் ” இயக்கம் மீண்டும் தமிழர் விரோத நடவடிக்கை).
இந்த இனமுரண் வளர்ப்பு வேலையானது இந்திய அமைதிப்படையின் கொடூரமான காலகட்டத்திற்குப் பின் உடனடியாக, இரண்டாம் ஈழப்போர் வெடிக்க முன்னர், பிரேமதாசாவால் முன்னெடுக்கப்பட்ட நாச வேலைத்திட்டங்களில் ஒன்றாகும்.
இத் துணைப்படையானது சிறிலங்கா அரசாங்கத்தால் நேரடியாக முஸ்லிம்கள் வாழும் ‘ஊர்களை காக்கப்பதற்கான படை’ என்று பொருள்படத்தக்க “ஊர்காவல் படை” என்ற பெயரில் ஒரு துணைப்படையாக உருவாக்கப்பட்டது ஆகும். இது முதலில் 1985 களில் உருவாக்கப்பட்டு பின்னர் 1987 களில் கலைக்கப்பட்டதொன்றாகும்.
இதன் மூலம் ஜே.ஆர்-முதலி திட்டத்தின் தொடர்ச்சியாக, அதன் அடுத்த கட்டமாக, முஸ்லிம்களை அவர்கள் அரசியல்வாதிகள் மூலம் தமிழர் தம் பகைவர் என்ற கொதிநிலைக்கு 1990 இல் இருந்த பிரேமதாச அரசாங்கம் கொணர்ந்து இருந்தது. இதற்கு அதாவுல்லா போன்ற அடுத்த கட்ட தலைவர்களும் இவ்வினமுரணை வளர்ப்பதில் முன்னின்று செயல்பட்டார்கள்.
முஸ்லிம் ஊர்காவல்படைக்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சிறிலங்காப் படையப் புலனாய்வுப் பிரிவினதும், சிறப்பு அதிரடிப்படையினதும் ஒத்துழைப்புகளும் ஆயுதப் பயிற்சி மற்றும் ஆயுதங்களும் கிடைக்குமாறும் சிறிலங்கா அரசு வழிவகை செய்து வளர்த்தெடுத்தது.
இந்தப் படைக்குத் தேவையான ஆயுதங்கள் சில நேரங்களில் அதாவுல்லாவிற்குச் சொந்தமான ஊர்திகளில் கொண்டுசெல்லப்பட்டு வழங்கப்பட்டன.
இரண்டாம் ஈழப்போரின் தொடக்க ஆண்டான 1990 இல் முஸ்லிம் காடையர்களாலும் (மதவெறி பீடித்த முஸ்லிம்கள்) முஸ்லிம் ஊர்காவற்படையினராலும் (முன்னர் ஜிகாத்) கொலைவெறித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இவர்களை சிங்கள சிறப்பு அதிரடிப்படை பின்னின்று இயக்கியது.
இந்தச் சிறப்பு அதிரடிப்படையிலும் பல முஸ்லிம்கள் இணைந்து தமிழர் மீதான தாக்குதல்களை முன்னின்று நடாத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதல்கள் சிங்கள இனவாதத்தின் தமிழர் மீதான கோரங்களுக்கு நிகரான ஒரு கட்டுமான-இனப்படுகொலையின் முஸ்லிம் மதவாத பயங்கரவாதத்தின் பாணியாக இருந்தது. இதன் காரணமாக தென் தமிழீழம் வாழ் தமிழ் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின், தென் தமிழீழத்தின், இன விகிதாச்சாரத்தை மறுவடிவமைப்பதில் முஸ்லிம் பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களும் சிங்களவரின் பேரினவாத வன்முறைச் சம்பவங்களும் முக்கிய பங்கு வகித்தன. இந்த மாற்றத்தால் 1948 க்கு முன்னர் தமிழர்கள் அறுதிப் பெரும்பான்மை என இருந்த நிலையிலிருந்து மூவின சமநிலை என்ற நிலைக்கு இம்மாகண சனத்தொகை மாற்றங்கண்டது.
முஸ்லிம் மதப் பயங்கரவாதம் மூலம் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் பெரிய முஸ்லிம் ஊர்களுக்கு அருகில் இருந்த சிறிய தமிழ் ஊர்களில் வாழ்ந்த தமிழர்களை கொன்று/விரட்டி விட்டு அதன் காணிகளில் நிலப் பரப்புகளை தமது ஊர்களோடு இணைத்துக்கொண்டனர். அதில் வசித்த தமிழர்கள் கொல்லப்பட்டதனாலோ விரட்டியடிக்கப்பட்டதனாலோ மீளத் திரும்பேலாமல் செய்யப்பட்டனர். இச்செயலிற்கு சிறிலங்காவின் சிங்கள அரசும் துணை நின்றது. இதன் மூலம் தமிழரின் இனப்பரம்பல் குறைக்கப்பட்டது.
முஸ்லிம் ஆயுதக் குழுவினர் சிங்களப் படையினரின் துணையோடு, குறிப்பாக சிறப்புப் பணிக்கடப் படை (STF) என்ற சிறப்பு அதிரடிப்படை, தமிழர்களின் ஊர்மனைகளை மண்ணாக்கியதோடு சொத்துக்களை எல்லாம் நாசப்படுத்தினர். அத்தோடு தாங்கள் தாக்கும் ஊர்களில் வாழும் தமிழ் மக்களை கொன்று குவித்ததோடன்றி அங்கு வாழும் தமிழ்ப் பெண்களை காட்டுத்தனமாக வன்புணர்வு செய்து கொடூரமான முறைகளில் கொலை செய்தனர். அகதி முகாம்கள் என்ற போர்வையில் சிங்கள அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாம்களுக்குள் புகுந்து தமிழர்களை கட்டுக்கட்டாகப் பிடித்துச்சென்று கொன்றொழித்தனர். இக்கொலைகளில் பெரும்பாலானவை சாட்சியங்கள் கிடக்காதவாறு துடைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான முஸ்லிம் பயங்கரவாதத்தின் படுகொலைகளால் தமிழர்கள் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வீடுவாசல்களைத் துறந்து மரங்களுக்குக் கீழும், மதகுகளுக்குக் கீழும், படுவான்கரைக் காடுகளிலும், ஆற்றங்காரை ஓரங்களில் சிறு குடிசைகள் அமைத்தும் தப்பியொட்டி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் ஒருநேர உணவிற்கே வழியின்றியும் சிலர் இரவு வேளைகளில் ஊர்மனைகளுக்குச் சென்று தேங்காயையும் மாங்காயையும் எடுத்து வந்து உண்ணும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தனர். (‘துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம்’ & ‘இப்படித்தான் தென்தமிழீழம் விடுதலைப்போருக்கு விலை செலுத்துகிறது’ ஐப்பசி-கார்த்திகை 1990, விடுதலைப்புலிகள்)
1732 ச. மைல் பரப்பளவான அம்பாறை மாவட்டத்தில் 1200 ச. மைல்களை சிங்களவர்கள் வன்வளைத்துவிட்டார்கள், 1990 வரையில் (‘துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம்’, ஐப்பசி-கார்த்திகை 1990, விடுதலைப்புலிகள்). அம்பாறையின் ஏனைய இடங்களில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஏனைய இடங்களில் வாழும் தமிழர்கள் 80,000 பேரை பயங்கரவாதம் மூலம் விரட்டி வந்தனர், 1991 வரையில்.
1990களில், ஒரு கட்டத்தில், முஸ்லிம் ஊர்காவல் படையினரின் கொலைவெறிக் கோரத் தாக்குதல்கள் ஓய்ந்தாலும், பின்னாளில் ஜெனீவா போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் மீண்டும் முளைவிட்டது. அது ஏற்கனவே செயலுற்றுக்கொண்டிருந்த ஏனைய ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து இயங்கத் தொடங்கியது. இத்தகவலானது 2006ம் ஆண்டு இரண்டாம் மாதத்தில் ஜெனிவாவில் வைத்து ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெருத்த சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
ஆனால் இவ்வறிக்கையின் முழு விரிப்பும் புலிகளால் ஏனோ பொதுவெளியில் – ஊடகங்களுக்கு – வெளியிடப்படவில்லை. கசிந்த குறிப்பிடத்தக்க தகவல்களை சண்டே லீடர் வாரயேடு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் வெளியிட்டது. இத்தகவலையெடுத்து பல்வேறு தமிழ் நாளேடுகள் வெளியிட்டிருந்தன.
இவ்வறிக்கையில், குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம், நூர்தீன் ஷரோம், பஷீன் ஷரோம், குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழுக்கள் என்ற முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் முழு விரிப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது (தினக்குரல் வழியாக யாழ் கருத்துக்களம் 2: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 19/03/2006).
தென் தமிழீழத்தில் ஜிகாத் குழுக்களின் முதன்மைத் தளங்களாக மூதூர், கிண்ணியா, தோப்பூர், ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, அக்கரைப்பற்று போன்ற சிறிலங்காப் படைகளின் வன்வளைப்பிற்குட்பட்ட பரப்புகள் விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது (தினக்குரல் வழியாக யாழ் கருத்துக்களம் 2: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 19/03/2006).
மேலும், அம்பாறை மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவருடன் இந்த ஆயுதக் குழுக்கள் கமுக்கமாக செயற்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இவ்வறிக்கையில் இவர்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதப் பயிற்சி வழங்கியோர் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்ததாக கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிகாத் அமைப்புடன் தொடர்புடைய பல முக்கிய முஸ்லிம் பயங்கரவாதிகள் 2006ம் ஆண்டிற்கு முன்பு இஸ்லாமிய மதக் கல்வியைப் பெறுகிறோம் என்ற போர்வையில் பாக்கிஸ்தானிய புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் பாக்கிஸ்தானுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பாக்கிஸ்தானின் மலைச் சாரல்களில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் உள்வாங்கப்பட்டு ஆயுதப் பயிற்சியை அவர்களிடத்தில் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2006ம் ஆண்டில் சிறிலங்காவிற்கான அரசதந்திரியாக பணியாற்றிய பாக்கிஸ்தான் உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் ஜிகாத் ஆயுதக்குழுவிற்கு பயிற்சி அளித்து ஒருங்கிணைத்து உதவியதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது (வீரகேசரி வழியாக யாழ் களம் 2: புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு, 12/03/2006).
முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கும் பாக்கிஸ்தானுக்குமான தொடர்பை பின்னாளில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் மூலமும் உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
விக்கிலீக்ஸின் தகவலின் படி, தமிழீழத் தலைநகர் திருகோணமலையில் நொக்ஸ் குழு (மதிப்பிற்குரிய ஆங்கிலேயன் ஒருவரின் பெயரால் பெயரிடப்பட்டது), ஒசாமா குழு, ஜெட்டி குழு (Jetty==இறங்குதுறை. இதில் துறைமுகத்தில் வேலை செய்யும் முஸ்லீம்களே பெருவாரியாக இடம்பெற்றிருந்தனர்.) ஆகியன செயற்பட்டன. அம்பாறையில், முஜாகிதீன் குழு செயலுற்றது. 2006இன் நிலைமையின் படி 150 ஆயுததாரிகள் இதில் உறுப்பினராய் இருந்துள்ளனர். இந்த ஆளணி எண்ணிக்கையானது ஒசாமா குழுவை விட அதிகமாகும். இந்தக் குழுக்களிடம் புலிகளிடமிருந்து பிரிந்து சென்று தேச வஞ்சகமிழைத்த கருணா குழுவினது ஆயுதங்கள் இருந்தனவாம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் திரு. ரவூப் ஹக்கீம் | இப்படமானது இவர் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றஞ்சாட்டல்களுக்கு மறுப்புத் தெரிவித்து சிங்கள அரசைக் காப்பாற்ற அல் ஜெசீரா தொலைக்காட்சியில் நேர்காணல் வழங்கிய போது எடுக்கப்பட்டதாகும்.
இவ்வாறாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் குறித்த ஆதாரங்கள் தவிபு ஆல் முன்வைக்கப்பட்ட போதிலும் அப்படி எதுவும் இல்லையென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அடியொட்ட மறுத்துரைத்தார். ஆயினும் பஃவ்ரெல் (PAFFREL) அமைப்பு தம்மிடம் இதற்கான ஆதரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதென்று தினக்குரல் 19/03/2006 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இதே ஹக்கீம் தான் 2002ம் ஆண்டு சூன் 23ம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை அக்குழுக்களின் பெயரைக் குறிக்காமல் ஒப்புக் கொண்டார் (புதினம்: கிழக்கில் உதயமாகிறது “ஜிகாத்” குழு!, 28/03/2006) என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இந்த முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் செயற்பாடுகளால் தமிழர்கள் எண்ணற்ற வேதனைகளை அனுபவித்தனர். எனினும் தென் தமிழீழம் வாழ் தமிழ் மக்கள் இக்கொடுமைகளையெல்லாம் தாங்கியபடியே மனவுறுதி தளராமல் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பங்களித்தனர்.
முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வீரமுனையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான கண்கண்ட மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு:
இதில் தோன்றி நல்லவர் வேடமிட்டு முஸ்லிம்கள் செய்த படுகொலையை மறைத்து ஏதோ முஸ்லிம்களின் தமிழர் மீதான தாக்குதலானது காத்தான்குடி நிகழ்விற்குப் பிறகு தான் தொடங்கியது போன்று தவறுத்தகவல் அளிக்கும் கோவிந்தன் கருணாகரம் எ ஜனா (ரெலோ) என்பவர் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காப் படைத்துறையுடன் இணைந்து மட்டக்களப்பில் பெருமளவான படுகொலைகளில் ஈடுபட்டவராவர். இவர் தொடர்பில் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலைத் தொகுத்து கோர்வையாக கீழே தந்துள்ளேன்
குறிப்பாக, 01/12/1990 அன்று வன்புணர்ச்சிக்குள்ளாகி படுகொலையான மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியின் வணிகவியல் பிரிவு மாணவியான ஆரையம்பதியைச் சேர்ந்த நல்லதம்பி அனுஷ்யா (05/04/1972 – 01/12/1990) என்ற விஜி அவர்களின் படுகொலையுடன் தொடர்புடையவன் ஜனா ஆவான்; அமரர் விஜி அவர்கள் பரதநாட்டியத்திலும் மெய்வல்லுநர் போட்டிகளிலும் சிறந்து விளங்கியதோடு மிகவும் வடிவானவருமாவார். இவர் கல்லடியில் தங்கியிருந்து படித்து வந்தார். தன் விடுமுறைக் காலங்களின் போது தனது சொந்த ஊரான ஆரையம்பதிக்கு வந்து போவது வழக்கமானதொன்றாகும். அவ்வாறு வந்து செல்லும் வேளையில் அவரை கண்ணுற்ற ரெலோ காவாலிகள் அவரை அடைய வேண்டுமென்ற இச்சையால் இவரது தாய் மாமனான மூதூர் முற்றுகையின் போது மேஜர் கஜேந்திரனுடன் வீரச்சாவடைந்த 2ம் லெப். கோபி (நாகமணி ஆனந்தராசா) அவர்களைக் காரணம் காட்டி இரவில் வந்து தொல்லை கொடுத்துச் சென்றனர். இதனால் இவர் இரவு நேரங்களில் அருகிலிருந்த தோழியின் வீட்டில் சென்று தங்கியிருந்தார். அப்போதொருநாள் இரவு அன்னாரை ரெலோ காவாலிகளான ராபர்ட் (சாவொறுப்பு), வெள்ளையன் (சாவொறுப்பு), லோகேஸ்வரராஜா எ ராம், அன்வர் (சோனக இனக்குழுவைச் சேர்ந்தவன்/ சாவொறுப்பு) மற்றும் இந்த ஜனாவின் தம்பியான கோவிந்தன் கருணாநிதி எ ரெலோ மாமா (30.10.2017 அன்று லண்டனில் பார்வை இழந்த நிலையில் இயற்கையால் சாவடைந்தான்) ஆகியோர் அவரது தோழியின் வீட்டில் வைத்து கடத்திச் சென்று வன்புணர்ச்சி செய்த பின்னர் படுகொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிச் சென்றார்கள். கடத்தப்பட்டவுடன் அன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ரெலோ பொறுப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்டப் பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டுவந்தவனுமான இவனிடம் சென்று கேட்ட போது தாங்கள் கைது செய்யவில்லை என்று கூறி மழுப்பினான், அன்னாரின் குடும்பத்தாரிடம். இதில் இன்னும் கொடுமையென்னவெனில் இவரது சடலத்தை எடுக்க வேண்டுமெனில் அவர் ஒரு புலி உறுப்பினர் என்று கையெழுத்து வைத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு சிங்கள அரசு தரப்பிலிருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டமையே ஆகும். இத்தனைக்கும் இவர் எந்தவொரு இயக்கத்தையும் சாராதவராவார்.
அத்துடன் 22.10.1990 அன்று படுகொலையான “நாட்டுப்பற்றாளர்” சின்னத்துரை பூரணலட்சுமியின் படுகொலைக்கு உத்தரவிட்டவனும் இவனே ஆவான்; இவரை அவனது உத்தரவிற்கு அமைவாக அன்னாரின் வீட்டிற்கு வந்து கிழவி ரவி, வெள்ளை (சாவொறுப்பு), மற்றும் ராபட் (சாவொறுப்பு) ஆகியோரைக் கொண்ட ரெலோ கும்பல் சுட்டுத் தள்ளியது.
மேலும் ஜனா நேரடியாகவே தன்கையால் 2ம் லெப். கலா (பொன்னம்பலம் சதானந்தரத்தினம்) என்ற தமிழீழ விடுதலை வீரனை 19.04.1988 அன்று செட்டிபாளையத்தில் வைத்து சம்மட்டியால் கொன்றான் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றைய சாட்சியான கோவிந்தபிள்ளை தியாகராஜாவும் ஒன்றும் குறைந்தபண்டம் அல்ல. இவரும் ஒரு முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் உறுப்பினர் ஆவார். இந்த இரு தேச வஞ்சக கும்பல்களும் சேர்ந்து மட்டக்களப்பில் சொந்த இனத்தையே குழிபறிக்கும் வகையில் ஆடிய வேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
தமிழீழம் ஓர் மத சார்பற்ற நாடாகும். ஆனால் அங்கு எல்லோருக்கும் மத சுதந்திரம் உண்டு. அதே வேளை மத வெறியர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.
இலங்கையில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனிச்சிறப்புடைய மதக் கலாச்சாரப் பண்புகளைக் கொண்ட இனக்குழு என்பதனையும், தமிழீழத்தில் வாழும் முஸ்லிம்கள் முழுமையான உரிமையுடன் வாழ வேண்டும் என்பதையும் எமது அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று முஸ்லிம்கள் தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள். தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக முஸ்லிம்களைச் செயற்பட வைப்பதில் சிறீலங்கா அரசும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.
தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தால் தமிழீழப் போராட்டத்தை அழிப்பது சுலபம் என சிறீலங்கா நினைக்கின்றது.
தமிழீழப் போராட்டம் அழிக்கப்பட்டால் முஸ்லீம்களின் உரிமைக்கான குரலும் அழிந்து போகும் என சரியாகக் கணித்து செயற்படுகின்றது.
கிழக்கில் இருந்து கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் உரிமைக்காக போராடப் போவதாக உருவாக்கப்பட்டது, முஸ்லிம் காங்கிரஸ்.
ஆனால் அதன் தலைமையின் நலன் முழுவதும் சிறிலங்காவில் (கொழும்பில்) தங்கி இருக்கிறது. அவர்களது குறுகிய வழியில் பதவிகளை தலைமையைப் பெறும் எண்ணத்தையும் கொழும்பில் தங்கிநிற்கும் நிலையையும் பயன்படுத்தி தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பதில் சிங்கள அரசு வெற்றிகண்டுள்ளது. தமிழீழத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடு குறித்து ஓரளவு பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சிறிலங்காவிலோ, தமிழீழத்திலோ முஸ்லிம்கள் தமது உரிமைகளுக்காகப் போராடியது கிடையாது.
சிறீலங்காவால் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒடுக்கப்பட்டார்கள்.
தமிழர்கள் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடினார்கள். ஆனால் முஸ்லிம்களோ தமிழர், சிங்களவர் என்ற முரண்பாட்டைப் பயன்படுத்தி வாழ முயன்றார்கள்.
தாங்கள் தமிழர்களும் அல்ல, சிங்களவர்களும் அல்ல, முஸ்லிம்கள் எனவும், அராபியர்கள் எனவும் இனம் காண முயன்றார்கள்.
அதன் மூலம் சிங்கள தேசத்திடம் அற்ப சலுகைகளை பெறலாம் என நம்பினார்கள், சில சலுகைகளையும் பெற் றார்கள்.
உண்மையில் இத்தீவில் வாழும் முஸ்லிம்களில் 95% வீதமானோர் தமிழர்கள்.
இங்கு வாழும் முஸ்லீம் மக்களின் வாழ்க்கை முறையில் எத்தகைய அராபிய பண்பாட்டையும் காணமுடியாது.
ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் அரபு மொழி தெரியாது. அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த எந்த ஊருக்கும் அரபுப் பெயர் கிடையாது.
இன்று சிறிலங்காவிலும், தமிழீழத்திலும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்றார்கள்.
இதற்கு முக்கிய காரணம் கலாச்சாரமே.
முஸ்லிம் பெண்கள் வெளியே சென்று மற்றைய சமூகத்தினரோடு கலந்து வாழாததால் வீட்டு மொழி தாய்மொழித் தமிழ் பிள்ளைகளால் தொடர்ந்து பேசப்படுகிறது.
இப்படியாக தமிழ் மொழி சிறீலங்காவில் அழியாமல் காப்பாற்றப்பட்டது. ஆனால் அரபு மொழி பேணப்படவில்லை.
இவை முஸ்லிம்கள் தமிழர்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டப்போதுமானவை.
சிங்களவர்களிடம் சலுகைகளைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் தமது வரலாற்றை மறைத்து நிற்பதை நாம் பார்க்கிறோம்.
கொழும்புத் தலைமைகள் அல்லது அங்கு வணிக மற்றும் நலன்களைக் கொண்ட தலைமைகளே, முஸ்லிம் மக்களை வழிநடாத்தும் பள்ளிவாசல்களைக் கட்டுப்படுத்துகின்றன.
மார்க்கம் என்பதன் பெயரால் அறியாமையில் வாழும் பல முஸ்லிம் மக்கள் இத்தலைமைகளால் பிழையாக வழிநடாத்தப்படுகின்றார்கள்.
33% முஸ்லிம் மக்கள் வாழ்ந்த புத்தளம் இன்று சிங்களவர்களிடம் பறிபோயிற்று.
46.1% முஸ்லிம்கள் வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தில் 1732 சதுர மைலில் 1200 சதுர மைலுக்கு மேல் சிங்களவர்களிடம் பறிபோயிற்று.
விகிதாசார அடிப்படையில் தேர்தல் என்பதின் பெயரால். முஸ்லிம் மக்களின் பிரதிதிதித்துவம் குறைக்கப்பட்டது.
முஸ்லிம்களிடமிருந்து வர்த்தகம் திட்டமிட்டு சிங்களவர்களால் கைப்பற்றப்பட்டது.
இதற்கு ஓர் சிறந்த உதாரணம். புத்தளத்தில் பழைய பேருந்து நிலையத்தில் முஸ்லிம் மக்களின் வர்த்தகத்தை உடைக்க புதிய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அங்குள்ள கடைகள் சிங்களவருக்கு கொடுக்கப்பட்டமை யாகும்.
இதை எதிர்த்த முஸ்லிம்களைப் பெரிய பள்ளி வாசலுக்குள் வைத்து சிங்களப் படை சுட்டுக் கொன்றது. இவற்றை எதிர்த்து முஸ்லிம்கள் போராடவில்லை. பதிலாக, முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அற்ப சலுகைகளுக்காக சிங்கள அரசுகளுடன் சேர்ந்து. அழிக்க முனைகின்றனர்.
தமிழீழப் போராட்டத்தால் கிழக்கில் 50, 000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுவது தடுக்கப்பட்டது.
விகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர் என சில சலுகைகளை சிறிலங்கா வழங்க முன்வந்தது.
முஸ்லிம்கள் தமது உரிமை பற்றிப் பேசும் பலத்தைப் பெற்றனர்.
இப்போராட்டத்தோடு இணைத்து நின்று போராடாமல், போராட்டத்திற்கு எதிராகவே முஸ்லிம் மக்கள் செயற்பட்டனர்.
1983 ல் இருந்து தமிழீழப் போராட்டம் கூர்மை அடையத் தொடங்கியதும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பிரித்து அழிக்கும் திட்டத்தை சிறீலங்கா செயற்படுத்தத் தொடங்கியது.
தமிழர், சிங்களவர் முரண்பாட்டில் வாழ நினைக்கும் முஸ்லிம்களை சிறிலிங்கா பயன்படுத்தியது.
முஸ்லிம் ஊர்காவல் படைகளை உருவாக்கியது. தனது கைக்கலிகளைக் கொண்டு தமிழ், முஸ்லிம் சமூகக் கலவரங்களைத் தூண்டியது.
விசேட அதிரடிப்படை, முஸ்லீம் ஊர்காவற்படையின் துணையுடன் பல தமிழ் கிராமங்களில் கிராமியப் படுகொலைகளை நடாத்தியது.
தமிழ்க் கிராமங்களிலலிருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் குறைந்த விலைக்கு தமது நிலங்களை விற்றனர் அல்லது விட்டுச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
சிறிலங்கா எதிர்பார்த்தது போல தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு நிலை உடைக்கப்பட்டது.
சிறீலங்காப் படையில் அல்லது காவல்துறையில் சேரும் தமிழர்கள் துரோகிகளாக கருதப்பட்டதால் தமிழர்கள் அதில் சேர்வதைத் தவிர்த்தனர்.
ஆனால் முஸ்லிம்கள் தாம் தனித்துவமானவர்கள் எனக் கூறிக்கொண்டு அதில் சேர்ந்தனர். இந்த முரண்பாட்டையும் சிறீலங்கா பயன்படுத்தத் தவறவில்லை.
தமிழ், முஸ்லிம் மக்களின் உறவுநிலை மிகப் பாதிப்படைத்த நிலையில் நாம் முஸ்லிம் மக்கள் சார்பாக ஓர் வேலைத் திட்டத்தை 21.4.1988ல் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியூடாக முன் வைத்தோம்.
முஸ்லிம்கள் ஒன்றிணைந்த தாயகத்தில் 30% குறைவில்லாத வகையில் மாகாண சபையில் பிரதிநிதித்துவம் பெறவும் அமைச்சரவையில் இடம்பெறவும் உரித்துடையவர்கள்.
எதிர்காலக் காணிப் பங்கீடு முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தில் 35% குறைவில்லாத வகையிலும், மன்னார் மாவட்டத்தில் 30% குறைவில்லாத வகையிலும், வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 5% குறைவில்லாத வகையிலும் இருக்க வேண்டும்.
முஸ்லிம் மக்களுக்கு இஸ்லாமிய பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
தமிழீழத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் விகிதாச்சாரத்தின் படி பொதுத்துறை வேலை வாய்ப்புக்கான உரிமையை முஸ்லிம் மக்கள் கொண்டிருப்பர்.
முஸ்லிம் மக்களின் தனித்துவத்தின் உரிமைகள், அக்கறைகள் என்பவற்றை பாதிக்கக்கூடிய எதுவித சட்டவாக்கங்களும் அவற்றிற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் 3/4 பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி தமிழீழத்தில் நிறைவேற்றப்படலாகாது என்னும் வகையில் பல விடயங்களில் இணக்கம் கண்டோம்.
ஓர் சுமூகமான சூழ்நிலை உருவாகத் தொடங்கியது.
முஸ்லிம் மக்கள் மனதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தினால் தான் தமது நிலங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்ற உணர்வு வளரத் தொடங்கியது.
பல வழிகளில் நாம் முஸ்லிம் மக்களை அணுகிப் பேசினோம். சாதாரண முஸ்லிம் மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டு போராட்டத்தை ஆதரிக்கும் செயலில் இறங்கத் தொடங்கினர்.
கொழும்பில் தங்கி நிற்கும் முஸ்லிம் தலைமைகள் தமது தலைமைக்கு ஆபத்து வருவதை உணர்ந்து கொண்டனர்.
தமது நீண்டகால திட்டங்கள் உடைந்து போவதைக் கண்டது சிறீலங்கா.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து தமிழ், முஸ்லிம் மக்கள் உறவை, தமது குறுகிய நலனுக்காக உடைக்க வேண்டிய அவசியம் இவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டது.
முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு என்னும் பெயரில் இந்தியப்படையுடனும் பின்னர் சிறிலங்காவுடன் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஓர் சமூக விரோதக் கும்பலை, முஸ்லிம் மத வெறியை வளர்த்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முஸ்லிம் உறுப்பினர்களையும் ஆதரவளர்களையும் கொலைசெய்தனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அராபிய நாடுகளில் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.
விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை கொல்கின்றார்கள் எனக் கூறி பணம் திரட்டி தமது சு௧போக வாழ்க்கைக்கு பயன்படுத்தினர்.
தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டு தமிழீழப் போராட்ட வெற்றிகளில் பங்கு வேண்டும் என நியாயமற்ற தீர்வுகளை நிபந்தனைகளோடு வைத்தனர்.
மீண்டும் தமிழீழ-சிறிலங்காப் போர் ஆரம்பித்த போது, சிறீலங்காவுடன் சேர்ந்து பெருமளவில் தமிழ் மக்களைக் கொலை செய்தனர்.
பல பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர்.
கிழக்கில் இவர்களின் செயலால் 4 இலட்சம் தமிழ் மக்கள் அகதிகள் ஆகினர். கொல்லப்பட்ட 4000ற்கும் மேலான மக்களில் 2000ற்கும் மேற்பட்டோர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர்.
அம்பாறையில் 80,000 கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டு விரட்டப்பட்டனர். பல கிராமியப் படுகொலைகள் நடந்தன.
வடக்கில் இருந்த 600,000ம் மக்களில் 30,000ம் பேர் போர் ஆரம்பித்ததும் சிறீலங்காவுக்கு பாதுகாப்புத் தேடிச் சென்றனர்.
மிகுதிப் பேர் அவர்கள் பாதுகாப்புக் கருதி அனுப்பிவைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ஒரு முஸ்லீம் கூட கொல்லப்படவுமில்லை, ஒரு முஸ்லிம் பெண்கூட பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கும் கிழக்கும் இணைந்த நிர்வாகத்தில் கிழக்கில் 33% இருக்கும் முஸ்லிம் மக்களின் வீதம் 18 வீதமாக மறைந்துவிடும். இணைந்த நிவாகத்தால் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.
இணைந்த நிர்வாகத்தில் வடக்கில் 4.7% இருக்கும் முஸ்லிம்கள் வீதம் 16 வீதமாக உயருவது பற்றியும் இலங்கைத்தீவில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வீதம் 2.1 ஆகும். இது இணைந்த நிர்வாகத்தில் 18% உயருவதையும் யாரும் பேசுவதில்லை.
அம்பாறையில் இருக்கும் 1,01,754 முஸ்லிம் மக்கள் குறித்து பெரிதும் பேசும் முஸ்லிம். தலைமை கண்டியில் வாழும் முஸ்லிம்கள் வாழும் 1,25,646 முஸ்லிம்கள் குறித்தும் கொழும்பில் வாழும் 1,68,956 மக்கள் குறித்து எதுவும் பேசுவது கிடையாது.
உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தராமல் அதைக் குழப்பும் இவர்களது தன்மை இதனால் தெளிவாகும்.
முஸ்லிம் மக்களின் உரிமைக்காக தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளனர்.
1976ம். ஆண்டு மாசி 2ம் தான் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் சிறீலங்கா காவற்துறையால் 7 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது யாருமே அது குறித்துப் பேசாதபோது தழர்கள் தான் அது குறித்துப் பேசினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் உள்ள தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல முஸ்லிம்களுக்காகவும் தான் போராடினார்கள்.
தமிழ் மக்களோடு தமிழீழ விடுதலைப் புலிகளோடு சேராது முஸ்லிம் மக்கள் போராட்டக் காலத்தில் பிரிந்து நின்றதன் மூலம் வரலாற்றுத் தவறையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களையும் அழிப்பதன் மூலம் வரலாற்றுத் துரோகத்தையும் செய்துள்ளனர்.
தாம் தமிழர் அல்ல, சிங்களவர் அல்ல என தனித்து நின்ற காலம் போய் இப்போது, தம்மை அராபியர்கள் என இனம் காண முயல்கின்றனர்.
இவர்கள் அராபியர்களும் இல்லை, சிங்களவரும் இல்லை. தமிழர்கள் தான்.
இவர்கள் தமது தவறைத் திருத்தாது தமிழ் மக்களுக்கு எதிராக தமிழீழ போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு சிங்கள தேசத்திடம் சலுகைகள், பெறும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
சிங்கள தேசம் இவர்களைப் பயன்படுத்திய பின் இவர்களை அழிக்கத் தயங்காது.
இந்த நிலை தொடருமாக இருந்தால் இலங்கைத் தீவில் தங்களது தனித்துவங்களை இழந்த ஒரு உதிரிகள் கூட்டமாகத்தான் முஸ்லிம்கள் வாழு வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம்.
முஸ்லீம்களால் ஒரு நெருக்கடி
கிழக்கில் மட்டும் 4,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில் 2,000 மக்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று ஒரு புதிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதுவரை நாளும் சிங்களப் பேரினவாதத்தால் நசுக்கப்பட்டுவந்த தமிழர்கள் – இன்று – முஸ்லிம் காடையர்களின் கொலைவெறிக்குள்ளும் அகப்பட்டு சொல்லொணாத் துயர்களை அடைந்து வருகின்றனர். தங்கள் ஆக்கரமிப்புக்கெதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழீழ முஸ்ஸிம்கள் எந்தவிதமான தீர்க்க தரிசனப் பார்வையும் இராது சிங்களப் பேரினவாதத்திற்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய செயல்கள் தமிழீழத்தில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பான எமது நிலைப்பாட்டில் நாம் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.
கடந்த ஆனிமாதம் 11ஆம் தொடங்கிய (11.06.1990) தமிழீழ – சிறிலங்கா போரைத் தொடர்ந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் கும்பல்களினால் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
மிருகத்தனமான முறையில் தமிழ்ப்பெண்கள் முஸ்லிம் காடையர்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாகின்றனர்.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதமில்லாது. காட்டுமிராண்டித்தனமாக வெட்டியும், குத்தியும் கொல்லப்படுகின்றார்கள்.
கொல்லப்படும் தமிழர்களின் தலைகள் கொய்யப்பட்டு சாக்கினுள் கட்டி கடலினுள் வீசப்படுகிறது.
படுகொலை செய்யப்படும் இளைஞர்களினதும், இளைஞிகளினதும் சடலங்கள் சோடிசோடியாகக், கட்டி ஆற்றில் எறிந்து மிலேச்சத்தனமான இரசனைகளை முஸ்லிம் காடையர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
பாண்டிருப்பு, கல்முனை, வீரமுனை, சொறிகல்முனை…. இவைபோன்று அம்பாறை மாவட்டத்திலிருக்கும் பல தமிழர் கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு அங்கே முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கி மண்ணை அபகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
தீவிர மதவெறிபிடித்த முஸ்லிம் காடையர்களின் வெறிச்செயல்களினால் கிழக்கு மாகாணத்தின்… (தென் தமிழீழம்), பெரும் பகுதியில் தமிழர்கள் சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு விட்டார்கள்.
தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் முழுமையாக இணைத்து போராட்டத்தை நடாத்த வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் சமூகத்துடன் சுமூகமான உறவை ஏற்படுத்தவும், தனித்துவமான அவர்களுடைய மத கலாச்சாரங்களைப் புரிந்து கொண்டு பல்வேறு விதமான எதிர்ப்புகள், சக்திகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் மக்களை அணிதிரட்ட முயன்றோம்.
அரசியல் அமைப்பு வாயிலாக – எந்தக் காலத்திலுமே நிலைத்திருக்கக் கூடிய விதத்தில் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக முடிவெடுத்து அதைப் பகிரங்கமாக அறிவித்து அதன்படி செயற்பட்டும் வந்தோம். ஆனாலும், பள்ளிவாசல்களின் நிர்வாகத்தை தனது கைக்குள் வைத்திருந்த பணப் பலம்மிக்க முஸ்லிம் காங்கிரசின் தலைமை முஸ்லிம்களுக்கு சுலபமான மதவெறியூட்டியதுடன் தனது ஆயுதக்குழுவை தமிழர்கள் மீது ஏவிவிடச் சத்தர்ப்பத்கை எதிர்பார்த்திருத்தது.
சிறீலங்காப் படைகளுடன் போர்தொடங்கி சிலநாட்களில் தமிழர் பகுதிகளை நோக்கி சிங்களப்படை நகரத் தொடங்கியதும் சிங்களப்படையுடன் சேர்ந்து “ஜிகாத்” என்ற பெயரில் முஸ்லிம் காங்கிரசின் சமூக விரோதக் குழுவினர் தமிழ் மக்களை படுகொலை செய்யத் தொடங்கினர். தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கத் தொடங்கினர்.
நாட்கள் செல்லச் செல்ல இந்தப்படுகொலையிலும் சூறையாடல்களிலும், பாலியல் வன்முறைகளிலும் முஸ்லிம் இளைர்களில் மிகப்பெரும்பாலானோர் ஈடுபடத்தொடங்கினர்.
சிறீலங்கா அரசின் தூண்டுதலின் பேரில் முஸ்லிம் காங்கரசினால் ஊர்காவற்படைகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு நவீன ரக ஆயுதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வயது வேறுபாடின்றி இந்த ஆயுதங்களை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழ் இனப்படுகொலையில் ஈடுபடத் தொடங்கினர். அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளிலிருந்த பல தமிழர் கிராமங்கள் கொலைக்களங்கள் ஆகின.
சிங்களப் படைகளுடன் சேர்ந்து கொண்ட இவர்களது வெறித்தனத்தால் கிழக்கு மாகாணத்தில் பல இலட்சம் மக்கள் அகதிகளானார்கள்.
அங்கே, கொல்லப்பட்ட 4000ற்கும் மேலான தமிழர்களில் சுமார் 2000பேர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் மட்டும் கொல்லப்பட்ட சுமார் 2500 தமிழர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். அங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.
இதே சமயம் எமது இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இயக்கத்தை விட்டோடி சிங்களப் படைகளுடன் சேர்ந்து எமது முகாம்களைக் காட்டிக் கொடுத்தனர். எமது ஆயுதங்களில் சில பறிபோகவும், எமது போராளிகள் சிலர் கொல்லப்படவும் எமது போராளிகள் பலர் படுகொலை செய்யப்படவும் காரணமாக இருந்தார்கள்.
சிங்களப்படைகளைவிட முஸ்லிம்களாலேயே தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகின்றனர்.
கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்களுள் பெரும்பாலானவை இன்று ஊர்காவற்படைகளும் சிங்கள இராணுவமும் சேர்ந்த ஒரு படைமுகாமைப் போலவே விளங்குகின்றன.
இத்தகைய நிகழ்வுகள் முஸ்லிம் மக்கள் நாம் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதையச் செய்துவிட்டன.
இருந்த பொழுதிலும் எமது இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற வடமாகாணத்தில் எந்த ஒரு முஸ்லிமும் கொல்லப்படவுமில்லை எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படவுமில்லை.
சிங்கள இனவாதப் பூதத்தைத் திருப்திப்படுத்தி அற்ப சலுகைகளைப் பெறுவதற்காக அயலவர்களான தமிழர்களைக் கொன்றொழித்த முஸ்லிம்கள் – நாளை அதே சிங்கள இனவாதப் பூதத்தால் விழுங்கப்படப்போகிறார்கள்.
உலக சரித்திரத்தில் நடந்த கொடூரமான போர்களின் போதும் எழுச்சியுற்ற விடுதலைப் போராட்டங்களை அடக்கி அழிக்கவும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், கொடூரமானவை.
உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரிகளாக இருந்தவர்கள் – தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளில் துப்பாக்கி சன்னங்களையோ, வெடிகுண்டுகளையோ பயன்படுத்தாமல் மிகப் பெரிய மனித அழிவுகளைச் செய்தார்கள்.
அவற்றைப் போலவே இன்றும்…..
2ம் உலகப்போரிலும், அதற்கு முன்னரும், பின்னரும் உலகில் நிகழ்த்தப்பட்ட மனித அழிப்புகளை இன்றைய தென் தமிழீழம் அச்சொட்டாக நினவுபடுத்துகிறது.
இப்படித்தான் தென் தமிழீழம் விடுதலைப் போருக்கு விலை செலுத்துகின்றது.
இரண்டாம் உலகப் போரின் போதும், அதன் பின்னரும் கோரமான சம்பவங்கள், அவலக் காட்சிகள் என வரலாற்று ஆசிரியகளினால் குறிப்பிடப்படும் சம்பவங்களை ஒத்த மிருகத்தனமான காட்சிகளை, இன்று தென் தமிழீழப் பகுதிகான மட்டக்களப்பு, அம்பாறை, திருக்கோணமலை கண்டு வருகின்றன.
உலகிலிருந்த யூத இனத்தைப் பூண்டோடு ஒழிக்க முயற்சித்த கிட்லரின் படைகள், வழக்கமாக வைத்திய பரிசோதனைகள், ஆய்வுகளுக்காக எலிகளைப் பயன்படுத்தும் முறைமகளைத் தவிர்த்து, எலிகளுக்குப் பதிலாக கைதாகியுள்ள யூதர்களைப் பயன்படுத்தும்படி கட்டளையிட்டார்கள்.
இதையொத்த சம்பவமொன்று 13.09.1990 அன்று திருக்கோணமலையிலுள்ள பச்சனூர், இருதயபுரம் அகதி முகாமில் இடம்பெற்றுள்ளது.
தாங்கள் உருவாக்கிய புதிய வகை மிதிவெடிகளின் சக்தியை கண்ணெதிரிலேயே பரீட்சித்துப் பார்க்க இராணுவத்தினர் விரும்பினார்கள். எனவே இந்த அகதி முகாமுக்கு முன்னால் மிதிவெடிகளைப் புதைத்துவிட்டு, அதற்கு மேலால் நடந்து செல்லும்படி அங்கிருந்த இரண்டு தமிழ்ச் சிறுமிகளுக்கு இராணுவத்தினர் உத்தரவிட்டனர். விளைவு…. பத்து வயதுச் சிறுமி ஒருத்தி காலை இழந்தாள். பின்னால் வந்த ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி இரண்டு கண்களையும் இழந்தாள்.
வரலாற்றின் சோகங்கள்:
1942ம் ஆண்டு சித்திரை 23ம் இங்கிலாந்துப்படையின் “யோக்சயர்” காலாட்படையின் இரண்டாவது பிரிவினர் பர்மாவிலுள்ள ரங்கூனிலிருந்து 50 மைல் தொலைவில் இருந்த சிறு கிராமமொன்றில் மாலை நேரத்தில் தங்கியிருந்தபோது, திடீரெனக் கிராமத்தின் ஒரு புறத்திலிருந்து புகை மண்டலம் எழுவதைக் கண்டனர். (அப்போது ரங்கூன் ஐப்பானியப் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது) உடனே இதை அவதானித்த ஆங்கிலேய இராணுவம் “பிறிஸ்பற்றிக்” என்ற படை அதிகாரியின் தலைமையில் அவ்விடத்தை நெருங்கினர்.
அங்கே வீடொன்று தீப்பிடித்து எரித்து கொண்டி ருந்தது. தமது வருகையை ஜப்பானியப் படையினருக்கு பூடகமாக அறிவிக்கவே வீட்டினை எரித்துப் புகையினைக் கிழப்புகின்றார்கள் எனச் சந்தேகித்து, அப்படை அதிகாரி அக்கிராமத்திலிருந்த ஆண்கள் அனைவரையும் அழைத்து வந்து அவர்களைக் கொன்று குவித்தார்கள்.
பைலோ ரஷ்யாவிலுள்ள “கத்தீன்” செக்கோசிலவாக்கியாவிலுள்ள “லிடிஸ்” பிரான்சிலுள்ள “ஒறாடொர்” ஆகிய கிராமங்கள், யுத்த வரலாற்றில் கிட்லர் வாதிகள் இழைத்த கொடுஞ் செயல்களுக்கு அடையாளச் சின்னங்களாக விளங்குகின்றன. அக் கிராமங்களில் வாழ்ந்த சகலரும் கிட்லர் வாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். (1985, சோவியத்நாடு இதழ் 9)
11/09/1990 அன்று மட்டக்களப்பிலுள்ள தன்னாமுனை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் ஆகிய தமிழர் பகுதிகளைச் சிங்களப் படையினரும், முஸ்லிம் ஊரர்காவற் படையினரும் சுற்றி வளைத்தன. பால்குடிக்கும் குழந்தையிலிருந்து குடுகுடு கிழவர்கள் வரை ஆண்கள், பெண்கள் அனைவரும் சுட்டும் வெட்டியும் குத்தியும் கொல்லப் பட்டனர். இதில் மொத்தம் 217 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதே போன்று அம்பாறை மாவட்டத்திலிருந்த சவளக்கடை, புதுக்குடியிருப்பு, பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர்…. திருக்கோணமலை மாவட்டத்திலிருந்த இலக்கந்தை, கூனித்திவு, சம்பூர் மூதூர், கட்டைபறிச்சான் போன்ற இடங்களில் தமிழர்கள் குவியல் குவியலாகக் கொன்றொழிக்கப்பட்டனர். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இப்படுகொலைகள் இடம்பெற்றதற்கான சான்றுகள் ஏதாவது அகப்பட்டு, அது சரித்திரத்தில் பொறிக்கப்பட்டுவிடக் கூடிய நிலைமைகள் ஏற்படாமல் மிகக் கவனமாகத் திட்டமிட்டு இப்படுகொலைகள் செய்யப்பட்டுள்ளன.
யூதர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களிலிருந்து கூட்டங்கூட்டமாக அவர்களைக் கொண்டுசென்று அறைகளுக்குள் அடைத்து விசவாயுக்களைச் செலுத்தி அவர்களைக் கொன்றதாக வரலாறு குஊறுகின்றது. இவ்வகையில் “கெஸ்டபோ” சிறைச்சாலை பிரபல்யம் பெற்றிருந்தது. யூதர்களைக். கொல்வதற்காக குண்டுகளைப் பயன்படுத்துவது வீணானது என்றே நாஜிக்கள் கருதினர்.
இதேபோன்ற நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வந்தாறுமூலை, சித்தாண்டி ஆகிய இடங்களில் அமைந்திருந்த அகதிகள் முகாமில் இடம்பெற்றுள்ளன.
5.9.90 அன்று வந்தாறுமூலை பல்கலைகழகத்துள் அமைந்திருந்த அகதிகள் முகாமினுள் புகுந்த சிங்களப்படைகளும் முஸ்லிம் காடையர்களும், இளவயதினரைத் தேர்ந்தெடுத்து 142 தமிழர்களைக் கைது செய்தனர். இவர்களில் 6 பேரின் கைகளில் வகை- 56 ரக துப்பாக்கிகளைக் கொடுத்து புகைப்படம் பிடித்தனர். பின்னர் இந்த 6 இளைஞர்களின் கழுத்தில் சைக்கிள் ரயர்களை மாட்டி உயிருடன் எரித்தனர். ஏனையவர்கள் தடயங்கள் இல்லாதவாறு அழிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கொலை செய்வதற்காக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதை விட கத்தி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் திருமணமானவர்கள்.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்ற சமூக சேவையாளர் முன்னிலையில் இச்சம்பவம் இடம்பெற்றும் இப் படுகொலைகளைப் பகிரங்கப்படுத்துவதில் இவர்கள் சிரத்தை காட்டவில்லை. மேற்குறித்த வந்தாறுமூலை பல்கலைக்கழகப் படுகொலை நடந்த பின்னரும், இதே முகாமில் மீண்டும் 27.9.90 அன்று 8 பேர் இவ்வாறு கைது செய்து அழிக்கப்பட்ட னர். பெருமளவு தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தாலும், முஸ்லீம் காடையர்களினாலும் இவ் அகதி முகாமிலிருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்டு பாலியல் வன்முறைக்குட்படுத்திய பின் கொல்லப்பட்டுள்ளனர்.
வந்தாறுமூலை பல்கலைக்கழக அகதி முகாமில் சுமார் 52,000 தமிழ் அகதிகள் தங்கயிருத்தனர்.
துயரம் நிறைந்த பகுதி:
இதன் காரணமாக ஏற்பட்ட இடநெருக்கடி, சுகாதாரப் பற்றாக்குறை காரணமாக வயிற்றோட்டம் கண்டு 32 சூழந்தைகள் உட்பட 40 பேர் மரணமாகியுள்ளனர்.
குறிப்பாக, அகதி முகாமை அண்மித்திருந்த வீடுகளுக்குச் சென்றவர்கள் காணாமல் போயுள்ளனர். கைது செய்யப்பட்ட தமது பிள்ளைகளை, கணவன்மாரைத் தேடிச் சென்ற பெற்றோரும், மனைவிமாரும் காணாமற் போயுள்ளனர்.
சித்தாண்டி முருகன் கோயில், சவளக்கடை, கல்லாறு, தம்பலகாமம் ஆலய இடங்களிலிருத்த அகதி முகாம்களிலும் இவ்வாறான துயரங்கள் நடந்துள்ளன.
திருக்கோணமலை பகுதியிலிருந்த தம்பலகாமம் அகதி முகாமிலிருந்து கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர்கள் பற்றி அவர்களின் உறவினர்கள். அப்பகுதி இராணுவ அதிகாரிகளுள் ஒருவரான “சுரேஸ்காசிம்” என்பவரைக் கேட்டபோது “கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி மட்டும் கேட்க வேண்டாம்” என்று புன்னகைத்தபடி பதிலளித்தாராம். இந்த சுரேஸ்காசிம் தான் 85, 86 ம் ஆண்டு காலப்பகுதியில் திருக்கோணமலை – அம்பாறை மாவட்டங்களில் நடந்த படுகொலைகளில் பிரதான பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு மாசி மாதம் 19 ஆம் திகதி நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட உடும்பன்குளம் படுகொலையில், சுரேஸ் காசிம் என்ற இந்த முஸ்லிம் இராணுவ அதிகாரியின் பங்கும் இருந்தது.
தென் தமிழீழத்தின் மையப் பகுதியான மட்டக்களப்பு மாவட்டம் இன்று அகதிகளால் நிரம்பி வழிகின்றது. அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றும் திட்டத்தை மிகத் தீவிரமாகச் சிங்கள அரசுடன் சேர்ந்து முஸ்லிம் கும்பல்களும் செயற்படுத்துவதினால் தம்பிலுவில், திருக்கோவில், காரைதீவு ஆகிய பகுதிகளுக்குள் அடைபட்ட தமிழர்களைத் தவிர ஏனையோர் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்துள் தஞ்சம் புகுந்துவிட்டனர். இவர்கள் மட்டக்களப்பு வாவிக்கு மேற்குப்புறமாக உள்ள பகுதிகளிலேயே (படுவான்கரை) தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை திருக்கோணமலை மாவட்டத்திலிருந்து அகதிகளானோரில் கணிசமானவர்கள் மட்டக்களப்பு – இருக்கோணமலை மாவட்டத்தின் எல்லையாக விளங்கும் வெருகலிலும், மற்றும் கதிரவெளி, வாகரை போன்ற பகுதிகளிலும் தற்போது வசித்து வருகின்றனர்.
வாழைச்சேனை தொடக்கம் மருதமுனை வரையிலான பிரதான பாதையை அண்டிய பகுதிகளில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய முஸ்லிம் கிராமங்களைத் தவிர ஏனைய தமிழ்க் கிராமங்கள் அனைத்தும் இன்று காலியாகவே உள்ளன. இப்பகுதி மக்கள் காட்டுக்கரைகளிலும், ஆற்றங்கரை ஓரங்களில் சிறுகுடிசைகளை அமைத்தும் மரநிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு, கல்முனை, 3ம் குறிஞ்சி, வீரமுனை, அட்டைப்பள்ளம் போன்ற பகுதிகளில் இன்று தமிழர்கள் இல்லை அவர்கள் முஸ்லிம் ஊர்காவல் படைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதனால் தங்களது இருப்பிடத்துக்கு திரும்புவது பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையிலுள்ளன.
அம்பாறை மாவட்டத்தைச் சுற்றிவரப் பல பகுதிகளில் இராணுவ, ஊர்காவற்படை முகாங்கள் போடப்பட்டுள்ளதால் அங்கே இராணுவ பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. அப்பகுதிகளில் முஸ்லிம் ஊர்காவற் படையினரே தமிழின அழிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தீவிர மத வெறிப் பிரச்சாரம் மேற்குறித்த நிலைமைக்கு முக்கிய காரணமாகவுள்ளது.
இதுவரை காலமும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அவ்வப்போது முரண்பாடுகள் தோன்றினாலும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது மிகக்குறைவு, ஆனால் இம்முறை சிங்கள இராணுவத்துக்கு இணையாக முஸ்லிம் காடையர்களும் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். பாதிக்கப்படும் பெண்கள் அனேகமாக உயிருடன் திரும்புவதில்லை.
கல்முனையில் இராணுவ பயங்கரவாதத்திலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்த 14 வயது தமிழ் இளைஞி ஒருத்தி சிங்களப் படைகளிடம் சிக்கி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டாள். பின்னர் இவள் முஸ்லிம் ஊர்காவற்படையிடம் கொடுக்கப்பட்டாள். ஒரு கல்லை நட்டு நிர்வாணமாகவே அதை மூன்று முறை சுற்றும்படி ஊர்காவற்படையால் பணிக்கப்பட்டாள். அவ்விதமே சுற்றி வந்ததும் “இஸ்லாமிய மார்க்கத்தில் விபச்சாரிக்குரிய தண்டனை இதுதான்” எனக் கூறிக்கொண்டு பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட அந்த இளைஞியை கல்லால் எறிந்து கொன்றார்கள். மட்டக்களப்பு பிராந்திய அரசியல் பொறுப்பாளர் கரிகாலனின் கூற்றுப்படி என்றுமில்லாதவாறு இன்று தென் தமிழீழத்தில் தமிழ் இனப்படுகொலை நடைபெறுகின்றது. இம்முறை சிங்களப் பேரினவாதிகளுடன் முஸ்லிம் வெறியர்களும் இணைந்துவிட்டார்கள்.
இதுவரை மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 4000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாவிரக்கணக்கானோர் காணாமல்போயுள்ளனர், ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக நிலையங்கள் கொள்ளை இட்டபின் தகர்க்கப்பட்டுவிட்டன. பல தமிழர் கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்திலுள்ள சில தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கும்பல்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
தமிழ்பெண்களை பாலியல் வன்முறைக்குட்படுத்துவதில் சிங்கள இராணுவத்தையும் மிஞ்சும் வகையில் காடையர்கள் வெறித்தனம் காட்டுகின்றனர். திருக்கோணமலை அரசியல் பொறுப்பாளர் ரூபன் சொல்கிறார்: இராணுவ பயங்கரவாதம் ஒருபக்கம் முஸ்லிம் கும்பல்களின் அராஜகம் இன்னொருபுறம் இருக்க தென் தமிழீழ மக்கள் பட்டினி அரக்கனுடனும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மாங்காயும் தேங்காயும் தான் இவர்களின் பிரதான உணவு. இந்த உணவையும் பெறுவதற்கு உயிரைக் கையில் பிடித்தபடி இரவில் கிராமங்களுக்குச் சென்று சேகரித்து வந்து உண்கின்றனர். அகதி முகாங்களிலுள்ள சிறுவர்களைப் பார்க்கும் போது வெளிநாட்டு சஞ்சிகைகளில் வரும் எத்தியோப்பிய சிறுவர்களைப் போன்று எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கின்றனர். கிட்லரின் தடுப்பு முகாம்களைப் போலவே சிறிலங்கா அரசு அமைக்கும் அகதி முகாம்களும் உள்ளன.
அகதி முகாங்கள் என்ற ஒன்றே தென் தமிழீழத்தில் இல்லை. தடுப்பு முகாங்களைத் தான் சிறிலங்கா அரசு அவ்விதம் அழைக்கின்றது. அத்தடுப்பு முகாங்களிலிருந்து கொண்டு செல்லப்படும் தமிழர்களைக் கொன்று குவியலாகப் போட்டுவிட்டு ரயர் போட்டு எரிப்பது சாதாரண விடயம்.
அண்மையில் (23/10/1990) திருக்கோணமலை மாவட்டத்திலுள ‘கிளப்பன்பேக்’ அகதி முகாமிலிருந்து சிங்கள இராணுவத்தாலும் முஸ்லீம் ஊர்காவற்படையாலும் அழைத்துச் செல்லப்பட்ட 23 தமிழர்கள் உவர்மலையில் வைத்துக் கொல்லப்பட்டார்கள்.
இதே போன்று பச்சலூர் அகதி முகாமிலிருந்தும் 25/08/1990 அன்று 42 தமிழர்கள் சிங்களப்படைகளாலும் முஸ்ளிம் ஊர்காவற்படைகளினாலும் அழைத்துசெல்லப்பட்டு கொன்று புதைக்கப்பட்டனர். இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர்.
தென்தமிழீழத்திலிருந்து தமிழர்களை முற்றுமுழுதாக வெளியேற்றி அதைச் சிங்கள மயமாக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்துகின்றது. அதற்காக மாபெரும் மனிதப்படுகொலையைப் புரிகின்றது. இந்தப் படுகொலைகளில் பெரும்பாலானவை வெளியுலகத்திற்குத் தெரியாதபடி மறைக்கப்பட்டுவிட்டன.
இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் எமது மக்களுனேயே வாழ்ந்த முஸ்லிம்களும் தமிழினப்படு கொலைகளில் இறங்கயிருப்பதுதான்.
ஆனாலும் இத்துரோகத்தனத்தின் மத்தியிலும் இன அழிப்புகளுக்கு முகம்கொடுத்தபடி தென் தமிழீழத்தில் விடுதலைத் தீ முன்னைவிட இன்று கொழுந்து விட்டெரிகின்றது.
தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழர்களைப் போன்றே முஸ்லிம்களும் அரசியல் – பொருளாதார – சமூக ரீதியில் சிங்களப் பேரினவாதத்தால் அடக்கப்படுகின்றனர், இவ் அடக்குமுறையிலிருந்து விடுதலை அடைவதற்காக தமிழ் பேசும் மக்கள் தங்கள் தாயக பூமியில் ஒரு தனியரசை அமைக்க ஆயுதப் போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சி
இப்போராட்டத்தில் முஸ்லிம் மக்களை இணையவிடாது தடுப்பதில் சிங்களப் பேரினவாதம் பல சூழ்ச்சிகளையும் , சதிகளையும் செய்து வருகின்றது.
இவ்வித சதி அரசியலில் ஈடுபடுவதற்குப் பிரதான காரணம் ஒன்றுண்டு.
அதாவது , தமிழ் – முஸ்லிம் மக்களின் இணைவு போராட்டத்திற்கு அதிக வலிமை சேர்க்கும் என்பதுடன், உலக முஸ்லிம் நாடுகளின் ஆதரவையும் உதவியையும் போராட்டம் பெறுவதானது அதன் வெற்றியை உறுதிப்படுத்திவிடும். இவை சிங்களப் பேரினவாதத்தின் நோக்கங்களுக்குக் குந்தகமாக அமையும்.
ஆகவேதான், முஸ்லிம்களை இப் போராட்டத்திலிருந்து பிரித்து வைக்கச் சிங்களப் பேரினவாதம் காலங்காலமாகப் பல சூழ்ச்சிகளைச் செய்துவருகின்றது.
சிங்களப் பேரினவாதத்தைப் பொறுத்தவரை தென் தமிழீழத்தை அதாவது கிழக்கு மாகாணத்தைத் தமிழர்களிடமிருந்து அபகரித்து அதைச் சிங்களமயமாக்குவதுதான் அதன் பிரதான இனவாதத்திட்டமாகும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து நின்றால், சிங்களப் பேரினவாதத்தின் எண்ணம் ஈடேறமாட்டாது.
எனவே முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து பிரித்துத் தன்னுடன் இணைத்து, தமிழர்களுக்கெதிராகப் போர்புரியச் சூழ்ச்சிகள் செய்தது.
தனது சூழ்ச்சி வலைக்குள் முதலில், கொழும்பில் நலன்களைக் கொண்டிருந்த முஸ்லிம் தலைவர்களையும் – முஸ்லிம் மதபீடத்தையும். வீழ்த்தி, அதன்மூலம் முஸ்லிம் மக்களையும் தனது சதிவலைக்குள் சிக்கவைக்க முயன்றது.
இச்சூழ்ச்சிகளையும் சதிகளையும் நாம் முன்னரே நன்கு அறிந்திருந்தோம். இதனால், இச்சூழ்ச்சிகர அரசியலைப்பற்றி தமிழ் மக்களுக்கு விளங்கவைத்ததுடன் முஸ்லிம்களையும் சதிக்குள் வீழாது தடுக்க அரும்பாடுபட்டோம்.
ஆனாலும், சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சி வலைக்குள் முஸ்லிம்கள் கண்ணை மூடிக்கொண்டு வீழ்ந்துவிட்டனர்.
இந்திய அரசின் சூழ்ச்சி
1987ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகத் தலையிட்ட இந்திய அரசும், முஸ்லிம் – தமிழ் முரண்பாட்டை மேலும் வளர்த்து விடும் முயற்சிகளில் ஈடுபட்டது.
சிங்களப் பேரினவாதம் கருதியதைப்போன்றே, தமிழ் முஸ்லிம் மக்களின் இணைவு தனது தேசிய பிராந்திய நலன்களுக்குக் குந்தகமாக அமையும் என, இந்திய ஏகாதிபத்தியமும் கருதியது. தமிழீழமக்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டம் வலுவடைவதை அது விரும்பாது. ஏனெனில் இப் போராட்டப் அதன் தேசிய பிராந்திய நலன்களுக்கு முரணானது என, இந்திய ஏகாதிபத்தியம் கருதுகின்றது. எனவே, சிங்களப் பேரினவாதம் முஸ்லிம் மக்கள் மத்தியில் வளர்த்த தமிழ் விரோதப்போக்கை மேலும் தீவிரமாக்க, அது நடவடிக்கை எடுத்தது. தமிழர் விரோத சக்திகளான முஸ்லிம் காங்கிரசிற்கும் ஜிகாத் அமைப்பிற்கும் ஆயுதங்களை வழங்கி, தமிழ் மக்களுக்கும் போராட்டத்திற்கும் எதிராக முஸ்லிம்களை ஆயுதமயமாக்கியது.
அதேசமயம் தன்னுடன் ஒட்டிக் கொண்டிருந்த தமிழ் துரோகக் கும்பல்களை முஸ்லிம் மக்கள் மீது ஏவி விட்டு தன்னை நடுநிலைவாதியாகவும், சமாதான விரும்பியாகவும் காட்டிக்கொண்டது.
சதி வலைக்குள் சிக்கிய முஸ்லிம்கள்
இந்தச் சூழ்ச்சிகர அரசியலைப் புரிந்துகொள்ளாத முஸ்லிம்கள், தமிழர்களைத் தமது எதிரிகளாகக் கருதத்தொடங்கினர்.
ஆனாலும், புலிகளாகிய நாம் இந்த நெருக்கடி நிலையை அவதானமாகவும் பொறுமையாகவும் கையாண்டோம்.
இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்ட பின்னர் சிங்கள – இந்திய அரசுகளின் சதி வலைக்குள் சிக்குண்ட முஸ்லிம் மக்களை மீட்டெடுக்க, எமது இயக்கம் அரும்பாடுபட்டது; எமது அரசியல் வேலைகளில் பெரும்பங்கை நாம் இதற்காகவே செலவிட்டோம்.
ஆனால், சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலிகளாக இருந்த முஸ்லிம் அரசியல் – மதத் தலைமைகள், முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ் மக்களையும் போராட்டத்தையும் எதிரியாகக் காட்டியபடி வெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டன.
இந்த நிலை படிப்படியாக வளர்ந்து, சிங்களப் படைகளுடன் போர்தொடங்கிய 1990 யூன் 10ஆம் திகதிக்குப் பின்னர், ஆயுதம்தாங்கிய முஸ்லிம் காடையர்களும் – ஊர் காவற்படையினரும் தமிழர்களை இனப்படுகொலை செய்யத் தொடங்கினர்.
சிங்களப் பேரினவாதத்தினதும் இந்திய ஏகாதிபத்தியத்தினதும் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம் மக்கள் முழுமையாகவே பலியாகிவிட்டார்.
எமகாதகர்கள் பாத்திரத்தில் முஸ்லிம்கள்
இதனால், இன்று தென் தமிழிழம் கொலைக்களமாக மாறிவிட்டது. இதுவரைகாலமும் ஆக்கிரபாளர்களான சிங்கள ஆயுதப்படைகளும் சிங்களக் குடியேற்றவாசிகளும், ஆங்காங்கே எமகாதகர்கள் பாத்திரத்தை வகித்துவந்தனர். இப்பொழுது, தமிழர்களுடன் காலங்காலமாகக் கூடி வாழ்ந்த முஸ்லிம்களும் – அப்பாத்திரத்தை அங்கு பங்கு பிரித்து விட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் வாழும் மக்கள் மீது எதிரி இராணுவம் என்ன செய்யுமோ அதையெல்லாம், முஸ்லிம் வெறியர்களும் – முஸ்லிம் ஊர்காவற்படையினரும் தமிழ் மக்கள் மீது காட்டிக்கொண்டிருக்கின்றனர்.
படுகொலை, பாலியல் வன்முறை, கொள்ளை, தீயிட்டழித்தல், கலாசாரச் சின்னங்களை அழித்தல், பொருளாதார நிலையைச் சிதைத்தல் என்று சிங்களப் பேரினவாத அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகச் செய்து வரும் இன அழிப்பு வடிவங்களை, சிங்கள ஆயுதப்படையின ருடன் சேர்ந்து முழு அளவில், முஸ்லிம் வெறியர்களும் தமிழ மக்கள் மீது புரியத் தொடங்கிவிட்டது.
தென் தமிழீழத்தைப் பொறுத்தவரை இன்று சிங்கள ஆயுதப்படைகளுக்கு அஞ்சுவதை விட முஸ்லிம் வெறியர்களுக்கே தமிழீழ மக்கள் பெரிதும் அஞ்சுகின்றனர்.
தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளில் சிங்கள ஆயுதப் படையினர் ஈடுபடுவதைவிட அதிகளவிலும், கொடூரமான முறைகளிலும் முஸ்லிம் வெறியர்களே ஈடுபடுகின்றனர் என்ற துக்ககரமான – வெறுக்கத்தக்க உண்மையை, நாம் ஒப்புக்கொள்கின்றோம்.
அத்துடன் தமிழர் கிராமங்களுக்குள் புகுந்து பெருமளவில் படுகொலைகளைச் செய்து, கிராமங்களைத் தீயிட்டழித்து, தமிழர் நிலங்களை, வீடுகளை சொத்துகளைக் கைப்பற்றி, ஒரு எதிரிப்படைகளைப் போல தென்தமிழீழ முஸ்லிம் காடையர்கள் செயற்பட்டுவருவதை யாரும் மறுக்க முடியாது.
முஸ்லிம்களால் படுகொலைகள்
தென் தமிழீழ மக்கள் இன்று ஒரே தடவையில் இருமுனைகளிலிருந்து எதிரிப் படைகளைச் சந்திக்கின்றனர்.
ஒருபக்கம் சிங்கள ஆயுதப்படை யினரையும் – சிங்களக் குடியேற்ற வாசிகளையும், மறுமுனையில், ஆயுதந்தாங்கிய முஸ்லிம் காடையர்கள் – முஸ்லிம் ஊர் காவற்படையினரையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
1990ஆம் ஆண்டு யூன் மாதம் சிங்கள ஆயுதப்படையினருடன் மூண்ட இரண்டாம் கட்டப் போரைத்தொடர்ந்து இன்றுவரை, கொடூரம்மிக்க – மனிதாபிமானமற்ற ஒரு எதிரி இராணுவத்தைப் போன்றே பெரும்பாலான தென் தமிழீழ முஸ்லிம்கள் செயற்பட்டு வருகின்றனர்.
இந்த இரண்டு வருடப் போரிலும் கொல்லப்பட்ட சுமார் 10,000 தமிழர்களில் அரைப்பங்கினர் முஸ்லிம் வெறியர்களினாலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
அதுவும் தென் தமிழீழத்தின் அம்பாறை மாவட்டத்தில் கொல்லப்பட்ட தமிழர்களில் முக்காற் பங்கினர் ( 3/4 ) . முஸ்லிம் வெறியர்களினாலேயே – கொல்லப்பட்டுள்ளனர் என்ற கசப்பான உண்மை, வரலாற்றில் மறைக்கப்பட முடியாதது. அம்பாறை மாவட்டத்தில் 6,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 5,000 பேர் முஸ்லிம் வெறியர்களினாலேயே கொல்லப்பட்டனர். (கணக்கு விபரம் சரியாகத் தெரியவில்லை. சில வேளை இதைவிட அச்சமூட்டும் வகையில், கொல்லப்பட்டவர்களின் தொகை அதிகமாக இருக்கலாம். காணாமல் போனவர்களும் பலர்.)
இம்மாவட்டத்தின் பழந்தமிழ்க் கிராமங்கள் பல முஸ்லிம் வெறியர்களினால் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டன. இன்று அவை முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களாக மாறிவருகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர் கிராமங்களைக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தில் இன்று ஐந்து இடத்தில் மட்டும் தான் தமிழர்கள் வாழ்கின்றார்கள் .
இவைகூட அகதிமுகாம்களாகவே இருக்கின்றன. இதில் கேவலம் என்னவென்றால் இவ்வகதி முகாம்கள் முஸ்லிம் வெறியர்களினால் தாக்கப்படாமலிருக்க, சிங்கள இராணுவம் அகதிமுகாம்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான்!
வெறிபிடித்த ஓநாய்களிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்க சிங்கம் காவலிருக்கின்றது. வேடிக்கையாக இருந்தாலுங்கூட இதுதான் அங்கு உண்மை நிலை.
ஏன் இந்தத் துயரம் நிகழ்ந்தது?
காலங்காலமாகத் தமிழர்களுடன் கூடிவாழ்ந்த முஸ்லிம்கள், ஏன் திடீரென தமிழர்களின் எதிரிகளாக மாறினார்கள்?
ஏன் இந்த மிலேச்சத்தனமான பாலியல் வன்முறைகளிலும், காட்டு மிராண்டித்தனமான படுகொலைகளிலும் முஸ்லிம்கள் ஈடுபடுகின்றார்கள்?
தமிழர்கள் முஸ்லிம் மக்களைச் சிங்கள ஆயுதப்படையினருக்குக் காட்டிக் காட்டிக் கொடுத்தார்களா? அல்லது முஸ்லிம் பெண்களைப் பாலியல் வன்முறைக்குட்படுத்திப் படுகொலை செய்தார்களா?
அல்லது முஸ்லிம்களின் நிலங்களைப் பறித்து, அவர்களின் கலாசாரச் சின்னங்களைத் துடைத்தெறிந்து, தனித்துவத்தைச் சிதைக்க முயன்றது தமிழர்களா? அல்லது தமிழ்மக்களின் தேசிய இயக்க மாகிய புலிகள் இயக்கம் அரசியல் ரீதியாக முஸ்லிம் மக்களுக்குத் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைக் காட்டி முஸ்லிம்களை இம்சித்ததா? எதுவுமேயில்லை.
அப்படியாயின் தமிழர்களைப் பொது எதிரியைப்போன்று கருதி, உண்மையில் பொது எதிரியான சிங்களப் பேரினவாத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து, முஸ்லிம் மக்கள் தமிழர்களை ஏன் அழிக்கின்றார்கள்?
இதில் துயரம் என்னவென்றால், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் தமிழர்களை எதிரிகளாகம் கணித்து வன்முறைகளில் ஈடுபடுவதுதான்.
தமிழ் – முஸ்லிம் மக்களிடையே காலத்திற்குக்காலம் பொருளாதாரக் காரணிகளாலும், குழல் பிட்டு போன்ற வாழிடம் காரணமாகவும் இடையிடையே சிறியளவில் முரண் பாடுகள் தலை தூக்குவதும் அது சில சமயங்களில் கைகலப்புகள், குழுச்சண்டைகளாக மாறுவதும், பின்னர் சமரசத்திற்கு வந்து அமைதி திரும்புவதும் பழைய வரலாறு.
1983 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத சக்திகள் தமிழ் மக்களுக்கெதிராக ஒரு படுகொலையை ஏவி விட்டதும், அதன் எதிர் விளைவாக பெருமளவில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போரில் இணைந்து கொண்டதும், அதனால் சிங்கள – தமிழ் தேசிய இன முரண்பாடுகள் மேலும் கூர்மையடைந்ததும் எல்லோரும் அறிந்ததே.
சிங்களக் குடியேற்றவாசிகள் காட்டுமிராண்டித்தனமாக தமிழர்களைத் தாக்கி அழிக்கத் தொடங்கினர்.
இக்காலப் பகுதியில் தமிழர்களுக்கெதிராக சிங்கள ஆயுதப்படை பகிரங்கமாக ஏவிவிடப்பட்டது. இந்த யதார்த்த நிகழ்வுகளுக்குப் பின்னர், தமிழ் – முஸ்லிம் மக்களிடையே சிறியளவில் முரண்பாடுகள் ஏற்படும் போதும் அம்முரண்பாடுகள் பெரியளவில் மோதலாகவும் வெடிக்கத் தொடங்கியது. முன்னரைப் போலல்லாது குறித்த இக்காலகட்டங்களில் முரண்பாடுகள் எழும்போது தமிழ் மக்களைத் தாக்க முஸ்லிம் மக்கள் முண்டியடித்தபடி திரண்டெழுத்தனர்.
இதற்குக் காரணம் தமக்குப் பக்க பலமாகவும் தமிழர்களுக்குப் பாதகமாகவும் சிங்கள ஆயுதப்படைக்களும், சிங்களக் குடியேற்றவாசிகளும் இருப்பதை முஸ்லிம்கள் வெளிப்படையாகக் கண்டு உணர்ந்து கொண்டதுதான்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு என்ற தமிழ்க் கிராமம் 1985 ஆம் ஆண்டு, அதைச் சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களால் தாக்கி எரியூட்டப்பட்டது. இது தான் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் புரிந்த முதலாவது பாரிய தாக்குதற் சம்பவமாகும்.
சிங்களக் காவற்துறையும், ஆயுதப்படைகளும் தமிழர்களுக்கெதிரான இந்த வன்முறைகளைக் கண்குளிர்ச்சியுடன் பார்த்து நின்றனர்.
இதைத் தொடர்ந்து மஞ்சந்தொடுவாய் என்ற தமிழ்க் கிராமத்தைக் காத்தான்குடி முஸ்லிம்கள் தாக்கியபோது அவர்களுடன் கூட வந்த சிறீங்காவின் விசேட அதிரடிப் படையினர், புலிகளைக் கூட்டி வந்து முஸ்லிம்களைக் கொல்லும்படி, பாதிக்கப்பட்டு ஓடிக் கொண்டிருந்த தமிழர்களுக்கு ஆலோசனை கூறினர்.
ஆனால் புலிகளாகிய நாம் சிங்களப் படையினரின் நயவஞ்சக நோக்கத்தைத் தமிழ் மக்களுக்குத் தெளிவுப்படுத்தியதுடன், இம்மோதலை எமது மக்கள் மத்தியிலான ஒரு உள் முரண்பாடாகவே கருதி, கலவரத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த அவதானமாகச் செயற்பட்டோம் .
புலிகளாகிய எமது நிலைப்பாடு என்ன?
முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரத்தில் பங்குகொண்ட தமிழர்களை நாம் கைது செய்தோம். (இவர்கள் அனைவரும் இக்கலவரத்தில் முஸ்லிம்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் முஸ்லிம்களை – ஆயுதம்கொண்டு தாக்க எத்தனித்த ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற அன்றைய “விடுதலை இயக்கங்களை” அவ்வாறு செய்யவிடாது தடுத்தோம்.
ஆனால் , தமிழர்கள் மீது வன்முறை செய்த முஸ்லிம்களைத் தெரிந்திருந்தும் நாம் கைது செய்யவில்லை. காரைதீவு தொடக்கிவைத்த கலவரம் ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை ஆகிய பகுதிகளிலும் பரவி தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்களின் வீடுகள், தீயிலிடப்பட்டன. அங்கேயும் சிங்களப் படையினர் மகிழ்ச்சியுடன் பார்த்து இரசித்து, முஸ்லிம் காடையர்களை ஊக்குவித்துக்கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய முஸ்லிம் கிராமங்களை அண்டியிருந்த சிறிய தமிழ்க் குடியிருப்புகள் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. ஆனால், பெரிய தமிழ்க் கிராமங்களுக்கு அருகில் இருந்த சிறிய முஸ்லிம் குடியிருப்புகள் தாக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏனெனில் அத்தகைய முஸ்லிம் கிராமங்களை எமது போராளிகள் பாதுகாத்தனர். ஆனால் பெரிய முஸ்லிம் கிராமங்களுக்கு அருகில் இருந்த தமிழர் கிராமங்களுக்கு , நாம் எந்தவித பாதுகாப்பு வசதிகளும் செய்யவில்லை.
1990 – ஆம் ஆண்டு யூன் மாதத்திற்கு முன்னர் தமிழ் முஸ்லிம் மோதல்கள் இடம்பெற்ற போதெல்லாம், புலிகளாகிய நாம் முஸ்லிம்கள் பக்கம் நின்றுதான் பிரச்சினைகளைப் பார்க்கவும் – தீர்க்கவும் முயன்றோம்.
அதன் காரணமாக தமிழ் மக்களின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டோம். தமிழர்களைத் தாக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக புலிகள் இயக்கம் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தி காரைதீவு, மஞ்சந்தொடுவாய்த் தமிழர்கள் அக்காலகட்டத்தில் புலிகள் இயக்கத்திற்கெதிராக ஊர்வலம் போனார்கள்.
இக்கலவரம் முடிந்தபின் காத்தான்குடியில் முதன் முதலாக, ஆயுதம் தாங்கிய கார்காவற்படையை முஸ்லிம்கள் அமைத்தனர் .
இது தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய ஒரு முஸ்லிம் குழுவை அமைத்ததற்கு ஒப்பாகும். இவ் ஊர்காவற்படைகள் படிப்படியக தென் தமிழீழத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம் கிராமங்களில் அமைக்கப்பட்டு, முஸ்லிம்கள் ஆயுதமயமாக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கெதிரான ஆயுத வன்முறையில் முஸ்லிம்கள் படிப்படியாக ஈடுபடத்தொடங்கினர். இவர்களுக்கு உரிய ஆயுதங்களைச் சிங்கள அரசு கொடுத்துவந்தது.
எமது போராட்ட நடவடிக்கைகள் தென் தமிழீழத்தில் முடுக்கி விடப்பட்ட போது ( 1984 – 1985 ) காட்டிக்கொடுப்போரையும் , கடும் குற்றம் புரிந்தவர்களையும் , சமூக விரோதிகளையும் மரண தண்டனைக்குட்படுத்தினோம்.
ஆனால், காட்டிக் கொடுப்போராகவும், சமூக விரோதிகளாகவும், முஸ்லிம் இளைஞர்கள் இருக்கும் போது அவர்களுக்கெதிராக நாம் எந்த நடவடிக்கையும் எடுக்காது அக்குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கும் பொறுப்பை அவ்வப்பகுதி பள்ளிவாசல்களிடமே விட்டோம். ஆனால் பள்ளிவாசல்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல சந்தர்ப்பங்களில் தென் தமிழீழத்தில் எமது போராளிகள் முஸ்லிம் கிராமவாசிகளினால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் அல்லது காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனர்.
யாரோ ஒருவரால் அல்லது ஒரு குடும்பத்தால் இரகசியமாக ஒரு போராளி காட்டிக் கொடுக்கப்படுவது என்பது வேறு கிராம மக்களே சேர்ந்து போராளியை இராணுவத்திடம் பிடித்துக்கொடுப்பதென்பது வேறு.
இரகசியமான காட்டிக்கொடுப்புகள் எங்கும்தான் நிகழ்கின்றன. அது ஒரு கோடரிக்காம்பின் வேலை. ஆனால் கிராமமக்கள் பலர் சேர்ந்து ஒரு போராளியைப் பிடித்து எதிரி இராணுவத்திடம் கொடுப்பதென்பது அக்கிராமம் எதிரியா? நண்பனா? என்பதைப் பொறுத்திருக்கின்றது.
இவ்விதமாக போராட்டத்திற்கும் தமிழ் மக்களுக்குகெதிராக முஸ்லிம் கிராமங்கள் சில செயற் பட்டுவந்தபொழுதிலும் கூட , நாம் முஸ்லிம்கள் தொடர்பாக மென் போக்கைக் கடைப்பிடித்தும் அதிகளவு சலுகைகளையும், விட்டுக் கொடுப்புக்களையும் செய்தும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களையும் போராட்டத்துடன் இணைத்துச் செல்ல அரும்பாடுபட்டோம் .
இந்தியப் படையிடமிருந்து ஆயுத உதவிகள்
இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் திகதி, இந்தியப் படைகள் தமிழீழத்தை ஆக்கிரமித்தன.
சிங்களப் பேரினவாத அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்ததைப் போல, முஸ்லிம் தலைமைகள் இந்திய இராணுவ பீடத்துடனும் ஓட்டிக் கொன்ளத் தொடங்கின. இந்திய அரசிடமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டது.
இந்த ஆயுதங்கள் சிங்களப் படையுடன் போராட அல்ல, தமிழ் மக்களைப் போன்று இனரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த போதிலும் கூட, முஸ்லிம்கள் ஆயுதமேந்திச் சிங்கள அரசிற்கு எதிராகப் போராடியதாக வரலாறே இல்லை. அப்படியாயின் அவர்கள் யாருக்கு எதிராகப் போராட ஆயுதங்களைப் பெற்றார்கள்? சந்தேகமேயில்லை. தமிழர்களைக் கொன்று குவிக்கத்தான் சிங்களப்படையினரிடமிருந்தும், இந்திய அரசிடமிருந்தும் ஆயுதங்களைப் பெற்றார்.
ஆனால், இந்தியப் படையினர் மத்தியிலிருந்த முஸ்லிம் விரோதப்போக்காலும், இந்திய இராணுவத்துடன் ஓட்டிக் கொண்டிருந்த தமிழ்த் துரோகக் கும்பல்களின் முஸ்லிம் விரோதப் போக்காலும், தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடாது அடங்கியிருந்த முஸ்லிம் வெறியர்கள் இந்தியப் படையின் வெளியேற்றத்தின் பின்னர், மீண்டும் சிங்களப்படைகளுடன் கூட்டுச்சேர்ந்தனர்.
இந்திய இராணுவத்தை வெளியேற்ற சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்ட காலத்தில் ( 1989 – 1990). முஸ்லிம் மக்களைப் போராட்டத்தின்பால் வென்றெடுக்க, நாம் பகிரத முயற்சிகளைச் செய்தோம்.
போராட்டத்திற்குத் தேவையான நிதியை வரி மூலமும், வற்புறுத்தல் மூலமும் வசதி படைத்த தமிழர்களிடமிருந்து பெற்றுவந்த அதேவேளை, முஸ்லிம் சமூகத்திலிருந்து இந்நிதியை நாம் பெறவேயில்லை. ஒரு சில சம்பவங்கள் அப்படி நடந்திருந்தாலும் கூட அவை உடனடியாகவே எமது தலைமைப்பீடத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு, நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இவ்விதம் தாராள மனப்பான்மைகள், மென்போக்குகள், விட்டுக் கொடுப்புகள், சகிப்புத்தன்மைகள் போன்ற அணுகுமுறைகள் மூலம் முஸ்லிம் மக்களை அணிதிரட்ட நாம் எடுத்த முயற்சிகள் முடிவில் படுதோல்வியே அடைந்தன.
1990 இல் வெடித்த போருக்குப் பின்
சிறீலங்கா அரசுடனான பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் சிறிது சிறிதாக 1990 யூன் 10 ஆம் திகதி போராக வெடித்தது.
மட்டக்களப்பு – அம்பாறையில் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டைகள் நடந்தன.
ஆனால் நாம் யாருமே எதிர் பாராதவகையில், பொத்துவில் பகுதியில் வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் முஸ்லிம் வெறியர்களினால் வேட்டையாடப்படத் தொடங்கினர். தமிழ் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டு, சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு, தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் வெறியர்களினால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர்.
பொத்துவிலில் தொடங்கிய முஸ்லிம் இனவாதம் அம்பாறை மாவட்டமெங்கும் பரவி, தமிழ் மக்களைக் கொன்றொழிக்கத் தொடங்கியது.
இது எமக்குப் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுத்தது. சிங்களப்படைகளுடன் பெரியளவில் போர் நடந்து கொண்டிருந்தபடியால், முஸ்லிம் வெறியர்களிடமிருந்து தமிழ்க் கிராமங்களை எம்மால் பாதுகாக்க முடியாமற் போய்விட்டது.
இப்பொழுது தென் தமிழீழ மக்கள் சிங்கள ஆயுதப்படைகளினாலும் – சிங்களக் குடியேற்றவாசிகளினாலும், முஸ்லிம் வெறியர்களினாலும் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர் .
1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் தென் தமிழீழத்தில் முஸ்லிம்-தமிழ் மோதல் நடக்குமானால், குறித்த சில கிராமங்களுக்கிடையே நடப்பதுதான் வழமை.
ஆனால் 1990 ஆம் ஆண்டு யூன் மாதம் 10 ஆம் திகதி சிறீலங்காப் படைகளுடன் போர் தொடங்கியதும, தென் தமிழீழத்தில் வாழ்ந்த மிகப் பெரும்பாலான முஸ்லிம்கள் வெறிகொண்டு – மிலேச்சத்தனமான வழிமுறைகளில் – தமிழர்களை வேட்டையாடத் தொடங்கினர். அம்பாறை தமிழர்களின் மயானம் ஆகியது. குறிப்பாக பாலியல் வன்முறைகளில் காட்டுமிராண்டிகளின் நிலைக்கு முஸ்லிம் வெறியர்கள் சென்றனர். இதில் வேதனையானதும் வெட்கம்கெட்டதுமான விடயம் என்னவென்றால் , கடத்திவரப்படும் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் கிராமங்களுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கேயே பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுவதாகும். அம்முஸ்லிம் கிராமத்திலிருக்கும் ஆண் – பெண், பெரியோர், சிறியோர், படித்தோர் – பாமரர் அனைவரும் அறிந்த நிலையிலேயே இம்மிலேச்சத்தனம் நடைபெறுகின்றது. இது பெண்களை உயர்வாகப் போற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் முஸ்லிம் மதக்கலாசாரத்திற்கு, மிக இழிவைத் தேடிக் கொடுக்கும் அநாகரிகச் செயல்கள் ஆகும்.
அம்பாறை மாவட்டம் இலங்கைத் தீவிலேயே முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் நடாத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தால் அதிக நிலப்பரப்புகளையும், பொருளாதார வாய்ப்புகளையும், உரிமைகளையும் இழந்தது தமிழர்கள் அல்ல; முஸ்லிம் மக்கள் தான்.
ஆனால் அத்துமீறி குடியேற்றத் திட்டங்களைத் தடுத்து நிறுத்த நாம் எடுத்த ஆயுத நடவடிக்கைகளினால், சிங்களப் பேரினவாதிகளின் நில அபகரிட்பு நோக்கம் பல இடையூறுகளைச் சந்தித்தது. இதனால் நன்மையடைந்தது தமிழர்களைவிட முஸ்லிம்கள் தான், ஆனால் இவ்வளவு தூரம் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிங்களப் பேரினவாதிகளை நண்பர்களாகவும், முஸ்லிம்களின் உரிமைக்காகவும் போரிட்டு எண்ணற்ற தியாகங்கள் புரிந்து வரும் தமிழர்களை எதிரிகளாகவும் முஸ்லிம்கள் கணிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து சுமார் 75 ,000 தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். சுமார் 6,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 5,000 பேர் முஸ்லிம் வெறியர்களினாலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று தென் தமிழீழம் முழுவதுமே சிங்களப் பேரினவாதிகளினதும் முஸ்லிம் வெறியர்களினதும் சிறையாகவே இருக்கின்றது அதற்குள் அகப்பட்டுள்ள தமிழர்கள் அவர்கள் வீடுகளில் வாழ்ந்தாலும் சரி – அகதிமுகாம்களில் வாழ்ந்தாலும் சரி – கைதிகளைப் போன்றே வாழ்ந்து வருகின்றார்கள்.
பெரும்பாலும், இம்மக்களது தலைவிதி முஸ்லிம் வெறியர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
அகதி முகாம்களுக்குச் சிங்களப்படையினருடன் செல்லும் முஸ்லிம்களே, யாரைக் கைது செய்வது எனத் தீர்மானிக்கிறார்கள்.
தென் தமிழீழத்திலுள்ள அகதி முகாம்களில் உதாரணமாக கிளப்பன்பேக் (திருமலை), வந்தாறுமூலை பல்கலைக்கழக அகதிமுகாம்களில் நடைபெற்ற கைதுகளுக்கும் கொலைகளுக்கும் சூத்திரதாரிகள் முஸ்லிம் வெறியர்களாகவே இருக்கின்றனர்.
முஸ்லிம் மக்கள் உணர வேண்டிய உண்மை!
தமிழர்களை அழிப்பதன் மூலம் தங்களது சுதந்திரம், தனித்துவம், இறைமை பாதுகாக்கப்படும் என முஸ்லிம்கள் கருதுகிறார்கள் போல் தோன்றுகிறது. அதன்மூலம் தான் முஸ்லிம் மக்களுக்கு நிரந்தரப் பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் நம்புகிறார்கள் போலும்.
இங்கே புலிகளாகிய நாங்கள் கூறவிரும்புவது என்னவென்றால், எதிரி யார்? நண்பன் யார்? என்பதைத்தான்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது அரசியல் எதிர்காலமும் பொருளாதார சுபீட்சமும், தமிழீழத்தில் தான் இருக்கப்போகின்றது.
தமிழீழம் தான் முஸ்லிம்களின் தாயகமுமாகும்.
தமிழ்த் தேசிய இனத்தின் ஓர் அங்கமான முஸ்லிம்கள் தமிழர்களின் விரோதிகள் அல்ல. இவர்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ வேண்டியவர்கள்.
தமிழ்மக்கள் முஸ்லிம் மக்களின் விரோதிகளுமல்லர்; பகைவர்களுமல்லர்.
முஸ்லிம்களின் உண்மையான விரோதிகள் சிங்களப் பேரினவாதமும் இந்திய ஏகாதிபத்தியமுமேயாகும்.
இந்த உண்மையை உணர்ந்து. முஸ்லிம்கள் தமது தமிழர்விரோத உணர்வைக் கைவிடவேண்டும்; தமிழர்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதில் தான் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலமே தங்கியுள்ளது.
மன்னம்பிட்டி ஒரு சிறிய கிராமம். பொலநறுவை மாவட்டத்தின் எல்லையோடு அது அமைந்துள்ளது. பிரதான வீதியில் ஒரு பக்கம் சிங்களக் கிராமத்தையும், அடுத்த பக்கம் ஒரு முஸ்லிம் கிராமத்தையும் கொண்டிருந்த தமிழ் ஊர் அது. 1992 ஆம் ஆண்டின் துவக்கப் பகுதியில் ஓர் இரவு. சனங்கள்கள் உறங்கினார்களோ இல்லையோ ஊர் பேச்சுமூச்சற்றுக் கிடந்தது. சிங்கள – முஸ்லீம் காடையர்களோடு, இராணுவத்தினர் இரு பக்கங்களாலும் நுழைந்தனர். துப்பாக்கிகளைவிட அவர்களுக்கு அதிகம் பிடித்தமான சுத்திகள், பொல்லுகள், வாள்கள், அலவாங்குகள் கைகளில் கிடந்தன. நாய்களின் வெறித்தனமான குரைப்பு ஊரைத் துடித்தெழச் செய்தது.
அன்று நடந்த கோரத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்றும் மீளாத ஒரு சிறுவன் எரிந்து சாம்பரான அந்த இரவின் கதையைச் சொன்னான் –
தாய்மாரைக் கட்டிப்பிடித்தபடி ஆழ்ந்து தூங்கிய பச்சிளங் குழந்தைகளை, கால்களில் படித்து பிடுங்கி இழுத்தார்கள். பதறி எழுந்து “ஐயோ!…… என் குழந்தை ……” அன்னை சொல்லி முடிக்கமுன், வீறிட்டுக்கத்திய மழலையின் பிஞ்சு முகத்தைச் சுவரோடு ஓங்கி அறைந்து சிதறடித்து, “இந்தா… பிடி……” எனத் தாயின் மடியில் எறிந்துவிட்டுப் போனார்கள்.
கணவனைத் தூக்கி இழுத்து பெற்றோலைத் தலையில் ஊற்றித் தீப்பெட்டியைத் தட்டியபோது, “ஐயோ…அவரை விடுங்கோ..” எனக் கதறியோடிவந்து கட்டிப்பிடித்த துணைவியையும் சேர்த்துக் கட்டி, “நீயும் அவரோடயே போ……” என்று தீ மூட்டிய வெறியர்கள், மரண ஓலமிட்டு – துடித்துத் துடித்து மெல்ல அடங்கி கருகி முடியும்வரை கும்மாளமிட்டுச் சிரித்தார்கள்.
பயந்தொடுங்கி, பெற்றோருக்கிடையில் பதுங்கி ஒளித்த பெண்பிள்ளைகளை வெளியில் இழுத்தார்கள். பெற்றவர்கள் பார்த்து நிற்கவே, உடைகளைக் கிழித்தெறிந்தார்கள். உடல் சோர்ந்து, உணர்வு சோர்ந்து, உயிர் சோர்ந்து சாகும்வரை அவர்கள்மீது காமவெறியாடிய காடையர் கூட்டம் போகும்போது பிள்ளைகளின் பிணத்தைத் தூக்கிப் பெற்றவர்களின் கையில் கொடுத்துவிட்டு, எக்காளச் சிரிப்போடு வெளியேறியது.
மூன்று நாட்கள் நரவேட்டைக்குப் பிறகு – வயல்கள், வீடுகள், குடிசைகள், ஆலயம், பாடசாலை என – அந்தச் சின்னக் கிராமம் முற்றிலுமாகக் கருகிப்போய்க் கிடந்தது. மனித சஞ்சாரமே அற்று மன்னம்பிட்டி வெறிச்சோடிப் போயிருந்தது. வீதிகளில் இழுபட்ட பிணங்களை நாய்கள் நரிகளோடு, பறவைசுளும் உணவாக்கின. துல்லியமான புள்ளிவிபரங்கள் இல்லையாயினும், கொல்லப்பட்டவர்களது தொகை 250 இற்கும் அதிகம் என்பது பிழைக்காது. இத்தொகை 450- 500 வரைகூட இருக்கலாம். 1500 குடும்பங்கள் வரை வாழ்ந்த அந்தக் கிராமத்தின் அத்தனை குடிகளும் விரட்டியடிக்கப்பட்டனர்.
பாடசாலையின் தளபாடங்களை முஸ்லிம் சிங்கள அயல் கிராமங்கள் பங்கிட்டுக்கொண்டன. வீடுகளை உடைத்து கதவுகள், சாளரங்கள், ஓடுகளைச் சேதாரமில்லாமல் கழற்றி பத்திரமாக எடுத்து, பக்கத்துக் கிராம வீடுகளுக்காக வாகனங்கள் ஏற்றிச் சென்றன. மேனி உருக்கிச் சேனை செய்து எம்மக்கள் சேர்த்து வைத்த நெல்மூடைகள், உழவு இயந்திரத் தொடுப்பிகளில் அடக்கி அப்புறப்படுத்தப்பட்டன. கொண்டுசெல்ல வசதியற்று எஞ்சிய பொருட்கள் எல்லாம் நெருப்புக்குக் கொடுக்கப்பட்டன. அறுவடைக்குத் தயாராயிருந்த வயல்களின் வரம்புகளைத் தாவிக்கடந்த படை வண்டிகள், ‘சூடடித்து’ விட்டுப்போயின.
பரிபூரணமான ஒரு ஊரழிப்பு நடந்து முடிந்தது.
மன்னம்பிட்டி ஒரு உதாரணம் மட்டும் தான்.
திருக்கோணமலைத் துவக்கத்தில் சாம்பல்தீவிலிருந்து, மட்டக்களப்பின் வாகரை, வாழைச் சேனை, கிரானுக்கூடாக அம்பாறைத் தொங்கலில் வீரமுனைவரை இதுதான் நடந்தது; இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. எந்தக் கிராமமும் எந்த நேரத்திலும் வேட்டை சிங்கள தேசத்துப் படைகளின் கைகளில், எங்கள் தாயகத்தின் தென்பிராந்தியம் துவண்டு போய்க் கிடக்கின்றது.
கல்லாறைச் சேர்ந்த அவருடைய பெயர் இராசன். அவர் ஒரு கடற்றொழிலாளி. ஒரு நள்ளிரவுப் பொழுதில் வந்தவர்கள் தட்டி எழுப்பிக் கூட்டிப் போனார்கள். தேடாத இடமில்லை; தேடியும் ஆளில்லை: என்றானபின் ஒரு நாள் – “75,000 ரூபா. பணத்தோடு வந்து ஆளைக் கூட்டிச்செல்லவும்.” ரெலோ முகாமிலிருந்து தகவல்வந்தது. இருந்ததையெல்லாம் ‘ வித்துச் சுட்டும்’ சேர்ந்தது 15, 000 ரூபா மட்டும்தான். “இதை வச்சுக்கொண்டு ஆளை விடுங்கோ” என்று மன்றாடிக் கெஞ்சியவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, “நீங்கள் போங்கோ; ஆளை அனுப்பிவிடுகிறம்” என்றான் ஒரு ரெலோக்காரன். வாரமொன்று போயும் வராத ஆளைத் தேடி ‘ரெலோ’ முகாம் போய் ஏனென்று கேட்டபோது, “நீங்கள் பணம் கொடுத்தது யாருக்கென்று எனக்குத் தெரியாது. பிடித்து வந்தது நான்தான். சொல்லி அனுப்பியதைப் போல 75,000 ரூபா தந்துவிட்டு ஆளைக்கொண்டு போங்கோ” என்றான் அங்கிருந்த இன்னொரு ‘ரெலோ’க்காரன். போனவர்கள் விக்கித்துப் போனார்கள். கத்தினார்கள்; கதறினார்கள்; ஒவ்வொரு சதம் காசுக்கும் பாடுபடும் தங்கள் வறுமை நிலையைச் சொல்லி அழுதார்கள். கரைந்து போனது கண்ணீர்தான்; அந்தக் கல்நெஞ்சங்களில்லை. திரும்பிப் போகும் போது. “75,000 ” – ஞாபகப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.
ஊர்க்காரரிடம் கடன் வாங்கி, உறவுக்காரரிடம் கடன்வாங்கி, கையிலிருந்த காணியையும் விற்று, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் விற்று குறிப்பிட்ட தொகையோடு முகாமிற்கு ஓடினார்கள். எண்ணி வாங்கிக்கொண்ட ‘ரெலோ’க்காரன், “வீட்டுக்குப் போங்கோ; ஆள் வருவார்” என்றான். நம்ப முடியவில்லைத் தான்; மாற்று வழியுமில்லையே. நாள் நகர்ந்தது; ஆனால், ஆள் வரவில்லை. வராத ஆளைத்தேடி முகாமிற்கு ஓடினார்கள். அலுவலக மேசையில்- எதையோ – எழுதிக்கொண்டு “வேலையில் மூழ்கிப்போய் இருப்பவராய்” இருந்த ‘ ரெலோ’ அதிகாரி, குனிந்த தலை நிமிராமல் எழுதிக் கொண்டே சொன்னார் – “நாங்கள் அவரை அனுப்பவேண்டிய இடத்திற்கு அனுப்பீட்டம். நீங்கள் அவருக்குச் செய்ய வேண்டியதுகளைச் செய்யுங்கோ!”
இது ஒரு உதாரணம்
அவருடைய பெயர் இராசையா. கொக்கட்டிச் சோலை முனைக்காட்டைச் சேர்ந்தவர். 7 பிள்ளைகளின் தந்தையான அவருச்குச் சிறிய கடை ஒன்றிலிருந்து மட்டும்தான் வருமானம். ரெலோ கும்பல் ஒரு லட்சம் ரூபா கேட்டது; மிரட்டியது. வேறு வழியற்ற நிலையில் குறித்த தொகையைச் செலுத்தினார்: பற்றுச்சீட்டும் பெற்றிருந்தார். இன்னொரு இரவு – திரும்பவும் வந்து – அவரைப் பிடித்துக்கொண்டு போனவர்கள், இம்முறை பணத்தோடு, அவரது மகளையும் கொண்டுவரச் சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார்கள். நிலைமை சிக்கலானது. ‘ரெலோ’க் காரர்கள் அடிக்கடி வந்தார்கள்; “சொன்னவற்றைக் கொண்டு வா” மிரட்டினார்கள். – பெரிய இழுபறி நடந்தது. வெளிநாடுகளுக்கோ, அல்லது வேறு மாவட்டத்திற்கோ ஓடி விடுமாறு ஊரவர்கள் ஆலோசனை சொன்னார்கள். ஆனால், எதுவரினும் எம் நிலம் விட்டு அசையோம், என அங்கேயே குடியிருந்தது குடும்பம். இராசையா அவர்களையும், துணைவியாரையும். மகளையும், இரண்டு மகன்களையும் தவிர ஏனையவர்களை மட்டுமே அவர்களால் உயிரோடு காக்க முடிந்தது.
இது இன்னொரு உதாரணம்.
இதேபோன்று ஆயிரக்கணக்கில் நடந்த சம்பவங்களின் துயரங்களை இந்தப் பிராந்திய மக்கள் கதைகதையாகச் சொல்கின்றார்கள். ஆட்களைக் கடத்திப் பணயம் வைத்துப் பணத் தைக் கேட்பதும், முடிவில் – ஆட்களையும் கொன்று பணத்தையும் கொள்ளையிடுவதும் வழமையாகிவிட்டது. எங்காவது ஒரு இடத்தில் இது எந்நாளும் நடக்கும்; தொகை மாத்திரம் மாறுபடும். கடத்துகின்றவனின் தேவைவைக்கேற்பவும், கடத்தப்படுகின்றவர்களின் பொருளாதாரப் பின்னணியைப் பொறுத்தும் – தீர்மானிக்கப்படும் பணயத்தொகையின் அளவு – ஐம்பதாயிரத்திலிருந்து இலட்சக்கணக்கில் உயர்ந்து செல்லும்.
மாலை 6.00 மணிக்குப் பிறகு, “வீடுகளுக்கு வெளியே தலைக்கறுப்புத் தெரியக் கூடாது” என்பது இங்கு சட்டம்; கட்டளை. என்னதான் உயிர்போகிற காரியமாக இருந்தாலும், மீறினால் உயிர்போகும். கருக்கல் பொழுதுகளில் போனவர்கள் ” காணமல் போனவர்களாய்” போய்விடுவார்கள்; அல்லது, கண்ட துண்டமாகக் காலையில் மீட்கப்படுவார்கள். ‘மயான அமைதி’ என்பதின் மிகச்சரியான அர்த்தத்தை தென் தமிழீழத்து இரவுகளில் உணரலாம். இரவின் நிசப்தம் பயங்கரமானதாக இருக்கும். எந்த வீட்டிற்குள்ளும் எந்த நேரத்திலும் அவர்கள் நுழைவார்கள். அங்கிருக்கும் எவரையும் எந்தக் காரணத்தைச் சாட்டியும் இழுத்துச் செல்வார்கள். அப்படிக் கொண்டு செல்லப்பட்டவர்கள் வந்ததில்லை; வருவார்கள் என்ற நம்பிக்கை வீட்டிலுமில்லை.
” ஊரவங்க ஆராவது அவசரத்துக்கு வந்து கூப்பிட்டாலே, ‘ அவங்க தானோ?’ எண்டு நெஞ்சு விறைச்சுப் போகும். எங்காச்சும் நாய் குலைச்சாலோ ‘அவங்க தான் வர்றாங்களோ?’ எண்டு பயம்மா இருக்கும்… நம்ம சனங்கள் நிம்மதியாத் தூங்கி நாலு வருசமாச்சு மகனே” என்றார், வந்தாறுமூலையைச் சேர்ந்த நான்கு போராளிகளின் தாய் ஒருவர்.
‘பெண்டுகள் சேனை’யைச் சேர்ந்த – பூநகரிச் சமரில் களப்பலியாகிவிட்ட ஒரு புலிவீரனின் – தாயார் சொன்னார், “விடியத்தால பாத்தா, ஆரிடையெண்டு அறியேலாத விதமா மனுசப் புணங்கள் தெருவோரத்திலையோ, ஆத்து மேட்டிலையோ கெடக்கும். தலையிருக்காது, கண்ணிருக்காது மண்டையப் பொளந்திருப்பாங்க ச்சீ…. … அது ஒரு நரக வாழ்க்க…….’
எந்த நேரத்தில் எவருக்கு என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடியாது. எப்போதும், எவரும், என்ன விதமாகவும் கொல்லப்படுவார்கள். காலையில் கண்டு கதைத்துவிட்டுப் போனவர், மதியத்திற்குள் கழுத்தறுபட்டுக் கிடப்பார். கொல்லப்படுவதற்குக் காரணங்கள் சொல்லப்படுவதில்லை. வேறிடமென்றால் செத்துக்கிடக்கும் தெரு நாயை அப்புறப்படுத்தக்கூட ஆளிருக்கும். ஆனால் இங்கு … ஊரோரம் இரண்டு உடல்கள் கிடப்பதை எல்லோரும் காணுவார்கள்: நரி, காகம், நாய்கூடத் தின்றுவிட்டுப் போகும். ஆனால், யாரும் தொடமுடியாது. உரித்தானவர்கள் மட்டுமே எடுத்துச்சென்று, வீட்டார் மட்டுமே சடங்கு செய்து, ஊரார் கூடாமல் அடக்கம் செய்ய வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர் எட்டிப்பார்த்தால்கூட, “இந்தக் கண்ணாலதானே பார்த்தாய்” என்று தோண்டி எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்; அல்லது “இந்தக் கையாலதானே தூக்கினாய் ” என்று வெட்டிக்கொண்டு போய்விடுவார்கள்.
“பொம்பிளைப் பிள்ளையள வீடுகளில் வைச்சிருக்கிறதைப் போல பயங்கரம் வேறையில்ல மகன். அது பெரிய சீரழிவு” என்று … சினந்துகொண்டார், பெரிய கல்லாறைச் சேர்ந்த இரண்டு பெண் போராளிகளின் தாய் ஒருவர்.
பாடசாலை முடிகிற நேரம் இலக்கத்தகடில்லாத ஒரு வெள்ளை நிற ‘வான்’ வீதிக்கு வரும். சிங்கள – முஸ்லிம் ஆயுதபாணிகளோடு துரோகக் கும்பல் ஆட்களும் உள்ளே இருப்பார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து வீடு செல்லும் பெண் பிள்ளைகள் தெரிவுசெய்து தூக்கிப் போடப்படுவார்கள். வீதியால் வரும் இளவயதுப் பெண்களைப் பார்த்து, முகாம்களின் வாசலில் பல்லிளித்துக் கொண்டு நிற்கும் கூட்டம் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து இழுத்துக்கொண்டு போகும். வீதிச் சோதனைக்காக நிறுத்தப்படும் பயணி ஊர்திகளிலிருந்து பெண்கள் இழுத்திறக்கப்படுவார்கள். இவற்றுக்கெல்லாம் ஏன்? எதற்கு? – எங்கே? என்ற கேள்விகளுக்கு இடமில்லை. அப்படிக் கொண்டுசெல்லப்படுபவர்களில் அநேகமானவர்கள் வருவதில்லை; வந்தவர்களுக்கு மனநிலை சரியில்லை. இன்னும் சிலர் – உடைகளற்ற உடலில் நகங்களும், பற்களும் பதிந்த கொடூரமான காயங்களோடு – ஊருக்கு வெளியே உயிரற்று மீட்கப்பட்டார்கள்.
பெற்றவர்களுக்கு முன்னால், கணவன்மார்களுக்கு முன்னால் உடன் பிறந்தவர்களுக்கு முன்னால், ஊரவர்களுக்கு முன்னால்கூட, காடையர் கூட்டத்தின் காமவெறிக்குப் பலியாக்கப்பட்ட பெண்பிள்ளைகள் பலர். வெலுக்காக் கண்டிக்கு அருகில் மூங்கில்மலை சுற்றிவளைக்கப்பட்டபோது, திருமணமாகி ஒரு வாரம்கூட ஆகியிருக்காத சின்னவன் – கமலா தம்பதிகளில், கணவனுக்கு முன்னால் மனைவிக்கு நடந்தது, அவற்றுள் ஒரு சம்பவம்.
தென் தமிழீழத்தின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும், மிகப் பெரிய துயரம் படிந்து கிடக்கின்றது. அங்கு வாழும் ஒவ்வொரு தமிழனுக்குப் பின்னாலும், சொல்லில் அடங்காத சோகம் இருக்கின்றது.
மன்னம்பிட்டியிலிருந்து வெள்ளை வானில் ஏற்றிச் செல்லப்பட்டு, உமித்திடலில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கணக்கற்ற தமிழர்கள் –
கொக்கட்டிச்சோலை உடும்பன்குளத்தில் கல்லில் வைத்துப் படுக்கச் சொல்லி, தலையில் பாறாங்கல்லால் அடித்துச் சிதறடிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள்-
‘ரெலோ’க் காரர்கள் பிடித்துக்கொடுத்துப் பார்த்து நிற்க, முஸ்லிம் காடையர்கள் பாலியல் வன்முறையால் உயிர்பிரியச் செய்த, ஆரையம்பதியைச் சேர்ந்த விஜி என்ற 9 ஆம் வகுப்பு மாணவி –
செங்கலடியிலிருந்து புல்லுமலைக்கு நகர்ந்த சிங்களப்படை வெலுக்காக்கண்டிக்குள் நுழைந்த போது,”ஆமி வாறான்” என்ற குரல் கேட்டு “ஆமியா… .. .. ..” என ஏங்கிய போது மூச்சு நின்ற பூரணிக் கிழவி.
அக்கரைப்பற்று சின்னப்பள்ளி எனுமிடத் தில், முஸ்லிம்கள் காரில் கட்டி இழுத்து நாராய்க் கிழித்த தனபால்-
பெரியகல்லாறு தேவாலயத்திற்கு முன்னால் சதைக்கும்பமாக வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த 35 ஆண்களுக்குள் அடங்கிய, இரு கண்களும் பார்வையிழந்த ஒரு தந்தை
கன்னன்குடாவுக்கு அருகில் கடுக்காமுனை எனும் இடத்தில் கிணற்றுக்குள் இறக்கிவிட்டு கல்லுகளால் தூக்கி எறிந்தே கொலை செய்யப்பட்ட பேர்தெரியாத 4 இளைஞர்கள் –
ஊரைவிட்டு ஓடும்படி சிங்களப்படை மிரட்டியபோது, காலாதி காலமாக நான் குடியிருந்த நிலத்தை விட்டு- கணவனோடு நான் களித்து வாழ்ந்த குடிசை விட்டு – எழேன் என்றதற்காக, படுத்தபடுக்கையிலேயே சாக்குக் கட்டுகளைப் போட்டு, மண்ணெய் ஊற்றி, குடிசையோடு எரித்துச் சாம்பராக்கப்பட்ட 80 வயது மணி ஆச்சி –
இலுப்பையடிச் சேனையில் திருமணமாகிய அடுத்த நாளே, ஒன்றாகச் சேர்த்துக் கட்டி விட்டு ரயர் மாலை போட்டுக் கருக்கப்பட்ட புதுத்தம்பதிகள் –
மட்டக்களப்பு நகரிலிருந்து, இலக்கத்தகடில்லாத வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு கண்களைத் தோண்டிவிட்டு, சாக்குகளில் கட்டி ஆற்றுக்குள் போடப்பட்ட ஏராளமான மாணவர்கள்-
கல்முனையில் – தாங்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிவிட்டு, நகரின் மத்தியில் உடைகளைந்து நிற்க வைத்து, முஸ்லிம்கள் கற்களால் எறிந்தே தங்கள் மதமுறைத் தண்டனையை நிறைவேற்றிய 16 வயதுச் சிறுமி –
இடித்துக் கொல்லக் கலைத்து வந்த கவச வண்டிக்குத் தப்ப ஓடுகையில், சில்லுக்குள் அகப்பட்ட சேலையை அவிழ்த்துவிட்டும் ஓடும் போது, நடுவீதியிலேயே கவச வண்டியால் துரத்தி ஏற்றி நசுக்கப்பட்ட பாடசாலை ஆசிரியை –
உடும்பன்குளத்தில், புல்லுமலையில், மகிழடித்தீவில், காத்தான்குடியில், அம்பாறை ‘சென்ரல் காம்ப் ‘ பில், வீரமுனையில், களுவாஞ்சிக்குடியில், பனிச்சங்கேணியில், முதலிக் குளத்தில், திருக்கோவிலில், கிளிவெட்டியில், திருக்கோவிலில், சாய்ந்தமருதுவில், சாம்பல்தீவில் என ஒவ்வொரு கிராமத்திலும் – 100, 200, 300 என – கூட்டம் கூட்டமாகவும், சிறுசிறு தொகைகளிலும், தனித்தனியாகவும் படுகொலைசெய்து குவிக்கப்பட்ட ஏறக்குறைய 15,000 வரையிலான எமதினிய மக்கள் – இவர்கள் எல்லோரும் எங்கள் தாயகத்துக்கு உரமாகப்போனவர்கள்.
படுவான்கரையைச் சேர்ந்தவரும், லொறி ஓட்டுநரும் இரண்டு பிள்ளைகளைப் போராட அனுப்பிவிட்ட தந்தையுமான ஒருவர் கீழே உள்ளதைச் சொன்னார் –
“40 வருடங்களாக நாங்கள் முயற்சி செய்துவிட்டோம்: முடியவில்லை. அதைவிட மேலாக – இந்த நான்கு வருடங்களுக்குள் நிறையத் துன்பப்பட்டுவிட்டோம்; நன்றாகப் படித்து விட்டோம். இனி எப்போதும் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வதைப்பற்றி நாங்கள் சிந்திக்கவே முடியாது.”
தொகுப்பாளர் குறிப்பு: இத்தாக்குதல் தொடர்பான விரிவான தகவல்கள் முஸ்லிம்களால் எழுதப்பட்ட “ஈழத்தின் இன்னுமொரு மூலை” (ஓகஸ்ட், 1992) என்ற நூலின் மூன்றாவது அலகில் உள்ளது. அவ்வலகில் வீரமுனை எரிக்கப்பட்டது சரியென்ற வாதத்தில் முஸ்லிம்களால் எழுதப்பட்டிருப்பது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி வளர்ப்பது போலுண்டு. எனினும் அப்போது இது இனச்சிக்கலென்ற வகையில் எரிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தமிழர் தரப்பில் ” வி. கி. இராசதுரை” என்பார் “தீயுண்ட வீரமுனை” (1954) என்ற நூலில் இக்கலவரம் தொடர்பில் கவிபாடியுள்ளார்.
கல்முனை பிரதான வீதியை ஒட்டியதாக அரசடி ஐயனார் கோயில், பிள்ளையார் கோயில் (தற்போது எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுள்ளது) இருந்தன. கல்முனை ஸாகிராக் கல்லூரிக்குச்செல்லும் பாதையை ஒட்டி பிரதான வீதியி லிருந்து உள்ளே விஷ்ணு ஆலயமும் அதற்குரிய வளவும் இருந்தன. 1967 கலவரத்தில் இவை எல்லாமே தமிழர்களால் இழக்கப்பட்டன. இக் கலவரத்தில் ‘கரவாகு’ கிராமத்தில் மூன்று இந்துக்கோயில்கள் எரியூட்டி அழிக்கப்பட்டன.
இந்தப் பின்னணியிலேதான் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு கல்முனைப் பட்டினச பையை இரண்டாகப் பிரித்துத் தெற் கிலுள்ள கல்முனைக்குடிக் கிராமத்தையும் அயலிலுள்ள சாய்ந்தமருதுக் கிராமத்தையும் இணைத்து 100% முஸ்லீம்களைக் கொண்டதொரு தனியான உள்ளூராட்சி அலகாகவும், வடக்கிலுள்ள கல்முனையை அயலிலுள்ள பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு கிராமங்களுடன் இணைத்துத் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தனியானதொரு உள்ளூராட்சி அலகாகவும் ஆக்கித் தரும்படி 1960 களிலிருந்தே கல்முனைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
1967 இல் கல்முனையில் நிகழ்ந்த மேற்குறிப்பிடப்பட்ட கலவரத்தின் பின்னர், கல்முனைத் தமிழர்களின் சார்பில் காலஞ்சென்ற தோ.அந்தோனிப்பிள்ளை (தோ.அந்தோனிப் பிள்ளை மாஸ்டர்) தலைமையிலான ‘கல்முனை முன்னேற்றச் சங்கம்’ 14.04.1967 திகதியிட்டு அப்போ தைய ஸ்தலஸ்தாபன அமைச்சர் (உள்ளூராட்சி அமைச்சர்) – தமிழரசுக் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியுடனான கூட்டரசாங்கத்தில் அமைச்சராக இணைந்திருந்த செனட்டர் அமரர் மு.திருச்செல்வம் அவர்களிடம் மேற்குறிப்பிட்டவாறு கல்முனைப் பட்டினசபையை இரண்டாகப் பிரித்துத் தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு உதவுமாறு கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். மு.திருச்செல்வம் அவர்களிடம் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்தும் இந் நியாயமான கோரிக்கை நிறை வேற்றப்பெறவில்லை.
அதிகாரத்தில் இருந்தபோதும் கூட தமிழரசுக்கட்சி இதில் அக்கறையற்று இருந்தமை கிழக்கு மாகாணத் தமிழர்கள் மீது குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மீது அக்கட்சிக்கு ஆத்மார்த்தமான அக்கறை இருக்கவில்லை என்பதன் வெளிப்பாடேயாகும். அதிகாரம் இருந்தும் அமைச்சர் அவ்வாறு செய்யாமல் விட்டதற்குக் காரணம் எதிர்காலத்தில் வழமைபோல் தமிழரசுக்கட்சி கல்முனைத்தொகுதியிலே நிறுத்துகின்ற முஸ்லீம் வேட்பாளரை வெல்லப் பண்ணுவதற்காகவும் (தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றிவைத்தால் தங்கள் கட்சியின் முஸ்லீம் வேட்பாளரின் வெற்றியை அது பாதிக்கும் என்பதால்) அதன் மூலம் பாராளுமன்றத்தில் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே. ஆனாலும் 18.02.1968 இல் கல்முனைத்தொகுதியில் நடை பெற்ற இடைத்தேர்தலில் அத்தொகுதியில் தமிழரசுக் கட்சி நிறுத்திய முஸ்லீம் வேட்பாளர் மசூர் மௌலானாவை ஆதரித்து அப்போது தமிழரசுக்கட்சியும் இணைந்திருந்த பிரதமர் டட்லி சேனநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சர் பட்டாளம் தமிழரசுக்கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தும்கூட அத்துடன் அமிர்தலிங்கம் உட்பட முக்கிய தமிழகக்கட்சித் தலைவர்கள் கல்முனையில் முகாமிட்டுப் பிரச்சாரம் செய்தும்கூட தமிழரசுக்கட்சி வேட்பாளரான மசூர் மௌலானாவினால் வெற்றிபெற முடியவில்லை. இத் தேர்தலில் அதாவது கல்முனைத் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் எம்.சி.அகமட் அவர்களே வெற்றியீட்டினார்.
எந்தத் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்து கல்முனைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழரசுக் கட்சி தட்டிக் கழித்ததோ அந்த வெற்றி கல்முனைத் தொகுதியிலே இந்த இடைத் தேர்தலில் மட்டுமல்ல அதற்குப் பின் வந்த எல்லாப் பாராளு மன்றப் பொதுத் தேர்தலில்களிலுமே தமிழரசுக்கட்சிக்கு எட்டாக் கனியாகியது. குறிப்பாக 1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் டாக்டர் உதுமாலெவ்வை தோல்வியுற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் அகமட் அவர்களே மீண்டும் வெற்றி பெற்றார். தமிழரசுக் கட்சியின் அரசி யல் எப்போதும் இப்படித்தான் சாண் ஏறி முழம் சறுக்கும் அரசியல்.
மேலும் இக்கலவரம் நடந்த காலத்தில் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி மட்டுமல்ல அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் கூட ஆளும் கட்சியான யூ.என். பியுடன் இணைந்து அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த போதிலும்கூட கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குத் தகுந்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும் தவறியிருந்தன. பாராளுமன்ற நலன்கள் சார்ந்த தங்கள் கட்சி அரசியலைக் கொண்டு செல்வதற்காக முஸ்லீம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வதுதான் இன்றுபோல் அன்றும் தமிழ்த் தேசிய அரசியல் செய்யும் இக்கட்சிகளுக்குத் தேவையாயிருந்தன.
இந்தச் சந்தர்ப்பத்தில் கல்முனைக் கலவரத்திற்குக் காரணம் தமிரசுக்கட்சியின் தவறான கொள்கைகளே என்று அமரர் செனட்டர் எம்.மாணிக்கம் (முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் (1989) அமரர் சாம்.தம்பிமுத்து அவர்களின் துணைவியார் கலாமாணிக்கம் அவர்களின் தந்தை] அப்போதைய ‘செனட்’ சபை யில் கூறிய கூற்றின் உண்மையை இன்று கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. அவரது விபரமான உரை 21.04.1967 daily Mirror பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
1968ல் பெப்ரவரியில் நடைபெற்ற கல்முனைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் அரசுக்கட்சியில் நிறுத்தப்பெற்ற முஸ்லீம் வேட்பாளரை ஆதரித்து வாக்களித்த தமிழர்கள் மட்டுமல்ல தமிரசுக் கட்சி வேட்பாளர் மருதமுனையைச் சேர்ந்த எஸ்.மசூர் மௌலானாவை ஆதரித்த மருதமுனை முஸ்லீம்களும் கூட கல்முனைக்குடி, சாய்ந்தமருது முஸ்லீம்களால் அச்சுறுத்தப்பட்டார்கள். கல்முனையில் கலவரங்கள் ஏற்படவும் தமிழ் முஸ்லீம் உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாயிருந்தது முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப் பட்டினசபையின் உருவாக்கமும் அப்பட்டினசபை மேற்கொண்ட தமிழ் விரோதப்போக்குமே ஆகும்.
*****
தொகுப்பாளர் குறிப்பு: இந்த இனவன்முறையின் போது கல்முனை கரவாகுவில் ‘வம்முறு சயிது’ என்ற முஸ்லிம் காடையனின் தலைமையில் இயங்கும் குழுவைவைக் கொண்டு தமிழர்களை விரட்டியடித்தனர், முஸ்லிம்கள். இக்குழுவிற்கு அகமட் எம்பி வழி காட்டினார். சித்திரை புத்தாண்டைக் கூட கொண்டாட விடாமல் இரவோடு இரவாக தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பைச் சேர்ந்த குணசேகரன் வீரக்கொடி என்பவர் கல்முனைக்குடி முஸ்லிம்கள் பற்றி தெரிவித்த கருத்து:
“எனது பூட்டன் சம்புநாதர். இவரை சம்பர் என்றும் அழைப்பார்கள். இவர் காலத்தில்தான் காடாக கிடந்த கரவாகு வட்டை காணியும், தற்போது கல்முனை என்று அழைக்கப்படும் இடமும் வோச்சி துரை என்று அழைக்கப்படும் வெள்ளைக்கார அதிகாரியால் காடு வெட்டி வயல்வெளி உருவாக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் கரவாகு என்னும் பெரிய தமிழ் கிராமம் இருந்தது. கரவாகு கிராமத்தில் எனது தாயின் பாட்டனார் முத்துக்குட்டி ஆச்சாரி அவர்கள் ஓரளவு ஆங்கிலம் கதைக்க தெரிந்தவர் – வெள்ளைக்கார துரை கூறுவதை தமிழில் மக்களுக்கு எடுத்துரைப்பவர். காடுகள் வெட்டி கூலிக்கு வேலை செய்ய வந்த முஸ்லிம்கள் குடியேறிய இடம்தான் கல்முனைக்குடி. போக்குவரத்து மார்க்கம் தாளவட்டுவான் சந்தியில் இருந்து கிட்டங்கி துறைக்குச் சென்று, அங்கிருந்து வள்ளம் மூலமாக மட்டக்களப்புக்கு செல்வார்கள்.”
அம்பாறையில் அரச பயங்கரவாதம்
1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் நாள் முற்பகல் பதினொருமணி.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவிலை அண்டியுள்ள தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் ஆகிய தமிழ் விவசாயக் கிராமங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. பரந்த வயல்வெளிகளில் ஏழை விவசாயக் குடிமக்கள் உற்சாகத்துடன் தமது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
தம் இரத்தத்தை வியர்வையாக்கி இவ்வளவு நாள் தாம் மேற்கொண்ட கடின உழைப்புக்கு கிடைத்த பலனையிட்டு அவர்களின் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி. அறுவடை செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்கதிர்க் குவியல்களைப் பிரித்து அவற்றில் இருந்து நெல்மணிகளை வேறாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அமைதி தவழும் அந்தச் சூழலில் ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கு மேற்பட்ட ஏழை விவசாவிகள். சற்று நேரத்தில் அங்கு நிகழப்போகும் அனர்த்தங்களைப் பற்றி ஏதுமறியாது தம் கருமத்தில் மூழ்கியிருந்தனர்.
இதே நேரம் –
அம்பாறை இராணுவமுகாம் –
இனத்துவேஷமும், இரத்தவெறியும் கொண்ட அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி மத்தியூ பெரேராவின் கண்களில் இரத்தவெறி தாண்டவமாடிக்கொண்டிருந்தது.
அவன் இடர் உத்தரவொன்றைப் பிறப்பிக்கிறான்.
உத்தரவைப் பெற்றுக்கொண்ட இன்னொரு இனவெறி மிக்க கொடியவனான ரம்பொடையைச் சேர்ந்த 25 வயதான லெப்டினன்ட் சந்திரபாலா உடனடி நடவடிக்கையில் இறங்குகிறான். சந்திரபாலா தலைமையில் 85 பயங்கரவாதிகளைக் கொண்ட குழு ஒன்று முற்றிலும் ஆயுதபாணிகளாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கவசவண்டிகளில் தாவி ஏறுகிறது. கவசவண்டிகள் இயக்கப்படுகன்றன. ஒன்றன்பின் ஒன்றாக ஆறு கவசவண்டிகளும் புழுதியைக் கிளப்பியபடி தங்கவேலாயுதபுரம் நோக்கி விரைகின்றன.
கைகளில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் பச்சைச்சட்டை பயங்கரவாதிகள் கவச வண்டிகளிலிருந்து குதிக்கின்றனர். அப்பாவித் தமிழ் விவசாயிகன் அரச பயங்கரவாதிகளால் சுற்றிவளைக்கப்படுகின்றார்கள்.
இதனை சற்றும் எதிர்பாராத விவசாயிகள் பரபரப்படைகிறார்கள். அவர்கள் மனதில் பெரும்பீதி, பயம்.
அவர்களை அறியாமலே கைகள் மேலே உயருகின்றன. சிலைபோல அசையாது அப்படியே உறைந்துபோய்விடுகிறார்கள்.
முன்னே சென்றுகொண்டிருந்த இராணுவ பயங்கரவாதிகள் அம்மக்களை பின்தொடருமாறு கட்டளை பிறப்பித்துக்கொண்டே அருகேயுள்ள காட்டுப் பிரதேசத்தை நோக்க நடக்கின்றனர்.
நெஞ்சிற்குள் ஏதோ ஒன்று உறுத்த, இரத்தம் உறைந்த நிலையில் என்ன நடக்குமோ என்ற பீதியுடன் அந்த மக்கள் அவர்களைப் பின்தொடர்கின்றனர். ஏனைய இராணுவத்தினர் அப்பாவி மக்கள் மீது தமது துப்பாக்கிகளை குறிபார்த்தவாறு பின்தொடர்கின்றனர்.
அடர்ந்த காட்டினுள் கொண்டு செல்லப்பட்ட அப்பாவி மக்கன் வரிசையாக நிறுத்தப்படுகின்றனர்..
இச்சந்தர்ப்பத்தில்….
காமவெறிபிடித்த இராணுவத்தினரால் பல பெண்கள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
விபரீதம் நிகழப்போவதை அந்த உள்ளங்கள் உணர்ந்து கொள்கின்றன.
இயந்திரத் துப்பாக்கிகள் மக்களைக் குறிபார்த்து சுடும்நிலைக்கு கொண்டுவரப்படுகின்றன.
அம்மக்களை மரணபீதி ஆட்கொள்கிறது.
அவர்கள் ஓட முயற்சிக்கின்றனர்… ஆனால் கால்கள் மறுக்கின்றன.
அரச கைக்கூலிகளின் விரல்கள் இயந்திரத் துப்பாக்கிகளின் விசைவில்களை அழுத்துகின்றன.
அந்தக் கணமே இயந்திரத் துப்பாக்கிகள் சடசடக்கின்றன…
அந்தோ! எமது மக்கள் – தமிழீழ மண்ணின் மைந்தர்கள் – பிணமாகின்றனர். தமிழனாக பிறந்துவிட்ட ஒரே ஒரு காரணத்திற்காக அந்த அப்பாவி ஏழை விவசாயிகள் கொன்று குவிக்கப்படுகின்றனர். எங்கும் மரண ஓலம். அந்த ஓலத்தினால் காடே அதிர்கின்றது.
ஆண்கள், பெண்கள், வயோதிகர், சிறுவர் என்ற எந்த வேறுபாடுமின்றி அனைவரும் இனவெறி கொண்டவர்களின் இரத்தப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.
உடல்கள் சல்லடையாக்கப்படுகின்றன.
முகங்கள் சிதைக்கப்படுகின்றன; தசைகள் அறுபடுகின்றன, இரத்த ஆறு பெருக்கெடுக்கிறது.
ஒன்றல்ல; இரண்டல்ல; 103 உயிர்கள் பலியாகின்றன. பிணக் குவியல்களுக்கடையே எக்காளமிட்டுச் சிரிக்கிறது, அரச கூலிப்படை.
இழுத்துச் செல்லப்பட்ட இளம் தமிழ்ப்பெண்கள் …. மிருகத்தனமான முறையில் கற்பழிக்கப்படுகின்றனர். மாறி மாறிக் கற்பழித்து தமது காமப்பசியை தீர்த்துக்கொண்ட காமுகர்களால் அப்பெண்கன் கோரமான முறையில் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
அரச பயங்கரவாதிகள் மீண்டும் வயலினுள் நுழைன்றனர். அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நெற்கதிர்க் குவியல்கள் இறந்தவர்களின் சடலங்கள் மீது பரப்பப்படுகிறது. அவற்றின் மேலே பெற்றோல் ஊற்றப்பட்டு தீ மூட்டப்படுகிறது. அடுக்கி வைக்கப்பட்டிருத்த தெற்கதிர்க் குவியல்களும் உழவு இயந்திரங்களும் தீக்கிரையாகின்றன.
தங்கவேலாயுதபுரம் எரிகிறது.
சிறிது நேரத்திற்கு முன்னம் சுறுகறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தத் தமிழ்க் கிராமம் பிணக்காடாக மாறிவிட்டது.
எங்கும் கருகிய, அரைகுறையாக எரித்த உடல்கள். மிகப்பெரிய நரவேட்டையை வெற்றிகரமாக முடித்துவிட்ட மகிழ்ச்சியில் அரச கூலிப்படை அங்ருந்து புறப்பட்டுச் செல்கிறது.
மறுதாள் இலங்கை வானொலி ‘லங்காபுவத்தை’ மேற்கோள் காட்டிக் கூறியது,
1986ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள உடும்பன்குளம் எனும் சிறிய கிராமத்தில் – வயலில் வேலை செய்து கொண்டிருந்த 60ற்கும் மேற்பட்ட தமிழ் விவசாயிகள் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இப்படுகொலையானது அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழர்களை மிரட்டி அவர்களை அங்கிருந்து விரட்டியடித்து அம்மண்ணை அபகரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.
தங்கவேலாயுதபுரம் — பறிபோய்க் கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ்க் கிராமங்களில் ஒன்று. இந்தப் புராதனக் கிராமத்தை அணைத்திருத்த உடும்பன்குளம் வயல் நிலங்களில் விளைந்த நெற்கதிர்களின் கலகலப்பு ஒலித்துக் கொண்டிருந்தது.
வருடத்தின் பெரும்பகுதி வெறுமையாகவே இருக்கும். உடும்பன்குளம் மாரி காலத்தில் தான் குதூகலிக்கும். பெரும்போக நெற் செய்கைக்காக அயற்கிராமங்களின் மக்கள் அங்கே வருவார்கள். வாடிகளை அமைத்து அங்கே வாழ்வார்கள். அந்த மக்களுக்கு அது கடின உழைப்பை சிந்தும் மகிழ்ச்சிகரமான நாட்கள். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கைக் காலம்.
அது அறுவடைக் காலம். உடும்பன்குளத்தின் நூறு ஏக்கர் வயல் நிலங்களும் நன்றாகவே விளைந்திருந்தது. சில வயல்களில் வைத்திருந்தனர், சில வயல்களில். துப்பட்டிகள் (சிறிய நெற்கட்டுக்கள்) அடுக்கப்பட்டிருந்தன. சில வயல்களில் அறுவடைக்குத் தயாராக நெற்கதிர்கள் சாய்ந்து கிடந்தன.
1986ஆம் ஆண்டு மாசி 19ஆம் திகதி.
காலை 7 மணி, அதிகாலையிலேயே எழுந்து விட்ட அந்த விவசாயிகள் வயல்களில் தமது வேலைகளில் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தார்கள். இரவிரவாக சூட்டுக் களத்தில் போராடிய உழவு இயத்திரங்கள் ஓய்ந்துபோய் நின்றன. இளஞ் சூரியனின் கதிர்கள் அந்த விவசாயிகளின் வெற்று மேனிகளில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. அவர்களின் உழைப்பின், வியர்வையின் பலனை அவர்கள் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார்கள்.
கிளிகளின் பறப்புகளும், கீச்சல் ஒலிகளும் அடர்ந்த காட்டினால் சூழப்பட்ட அந்த வயல்நிலங்களின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன. அறுவடையை முடித்துவிட்டு ஊருக்குச் செல்லும் ஆவல், அவர்கள் உற்சாகமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் குதூகலத்துடன் அறுவடை செய்து கொண்டிருந்த தமிழ் விவசாயிகளை மனித அறுவடை செய்ய சிங்கள வெறிப்படைகள் சுற்றி வளைத்துப்படுத்திருந்ததை அந்த அப்பாவி விவசாயிகள் அறிந்திருக்கவில்லை.
காடுகளில் பதுங்கியிருந் சிங்கள இராணுவத்தினர் திடீரென வெறிபிடித்தவர்கள் போல சத்தமிட்டபடி துப்பாக்கிகளை இயக்கியபடியே வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த மக்களைச் சுற்றிவளைத்தார்கள். அவர்கள் கதறிக் கொண்டிருந்தார்கள், பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
வயல் வெளியில் இரும்பிப் பார்த்த இடமெல்லாம் பச்சைநிறப் பேய்கள். அங்கு எவருமே தப்புவதற்கு வழி இருக்கவில்லை. சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டவர்கள் எல்லாம் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள், ஆண்களும் பெண்களும், வித்தியாசமில்லாமல் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்ட அனைவரையும் மந்தைகளைச் சாய்ப்பது போல விரட்டி, வயல் வெளிகளின் ஓரத்தில் இருந்த கிரவல் பாதைக்குக் கொண்டுசென்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் மிருக வெறிபிடித்த இராணுவத்தினரால் பல பெண்கள் கதறக்கதற காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டார்கள்.
கிரவல் பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆண்களும், பெண்களும் அங்கே தனித்தனியாகப் பிரிக்கப்பட்டார்கள், அவர்களின் கண்ணீருக்கும் கதறல்களுக்குமிடையே அவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டார்கள். அங்கும் இளம் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்.
ஆண்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருவர் இருவராக கட்டப்பட்டு அங்கே நின்ற உழவு இயத்திரத்தில் ஏற்றப்பட்டார்கள், தமது மகன்மாருக்கு, கணவன்மார்களுக்கு ஏதோ விபரீதம் நடக்கப்போகின்றது என்பைதை உணர்த்து கொண்ட பெண்கள் அவர்களை விடுவிக்கும்படி மன்றாடினார்கள். அந்தக் கொடிய மிருகங்களின் கால்களில் விழுந்து கதறினார்கள்… மன்றாடினார்கள். ஆனால் இரக்கமற்ற அந்தச் சிங்கள வெறியர்களின் காதுகளில் அந்த அப்பாவி ஜீவன்களின் வேண்டுதல்கள் விழவில்லை. அவர்கள் அடித்து விரட்டப்பட்டார்கள்.
உச்சிவெயில் நேரம்.
உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்ட கிராமத்தவர்கள், வயல் வெளியின் சூட்டுக்களம் நோக்கிக் கொண்டு செல்லப்படுகிறார்கள், இளைஞர்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் எல்லோரும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களின் முகங்களில் பயங்கலந்த கலவரம், இந்த வெறிபிடித்த இராணுவத்தினருக்கு எதிராக எதுவுமே செய்ய முடியாத நிலை – அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
வைக்கோற் போர் அருகே சென்றதும் உழவு இயந்திரம் நிறுத்தப்பட்டது. அந்த விவசாயிகள் இருவர் இருவராக இறக்கப்பட்டார்கள்.
இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கத் தொடங்கின.
எங்கள் தேசம் எமது மக்களின் குருதியினால் தோந்ந்து கொண்டிருந்தது… அவர்களின் இறுதி மரண ஓலங்களும் முனகல்களும் உடும்பன்குளக் காட்டுப் பகுதியை நிறைத்து எதிரொலித்து ஓய்ந்தது. தங்ளது சேமிப்புகளை அந்நிலத்தில் கொட்டி, வியர்வைத் துளிகளினால் அப்பயிர்களுக்கு உரம் சேர்த்து, அதன் பயனை அறுவடை செய்யக் காத்திருந்த அந்த மண்ணின் மைந்தர்கள் அவர்களின் சூட்டுக் களத்திலேயே உயிரற்ற உடல்களாக வீசப்பட்டுக் கிடந்தார்கள். எல்லாமாக 60இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இனவெறி கொண்டவர்களின் இரத்தப் பசிக்குப் பலியாகிக் கிடந்தார்கள் – இதில் நாடோடிகளாக வாழ்க்கை நடாத்தும் குறவர் இன ஆண்களும் அடங்குவர். இவர்கள் கூலிக்கு வேலை செய்து வாழ்பவர்கள்.
அதே நேரம் இன்னொரு சிறிலங்கா இராணுவக் குழு வாடிகளுக்குள் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிடத் தொடங்குகிறார்கள். வானொலிப் பெட்டிகள், நகை, பணம் பெறுமதியான அனைத்தையுமே எடுத்தார்கள். அறுவடை செய்யப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்த நெல்லு மூடைகளை அந்தக் கிராமத்தவரின் உழவு இயந்திரங்களிலேயே ஏற்றினார்கள்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சூட்டுமேட்டில் குவிக்கப்படுகிறது. நெற்கதிர் குவியல்களினால் அவர்களின் உடல்கள் மூடப்படுகின்றன, சற்று நேரத்திற்கு முன்னர் நெற்கதிர்களை அணைத்து மகிழ்ந்து கொண்டிருந்தவர்களின் உயிரற்ற உடல்கள் அந்த நெற்கதிர்களாலேயே மூடப்பட்டனர். அருகிலிருந்த குடிசைகளின் மரங்களும் காய்ந்த ஓலைகளும் அதன் மேலே போடப்படுகின்றன. ஆனால் அவர்களின் இறுதி நேர முனகல்கள் இன்னும் ஓயவில்லை. அந்தக் கொடூரம் நிறைந்த அராஜகவாதிகள் அதனை கேட்கவும் இல்லை. அவர்கள் சூட்டுக் களத்திற்குத் தீ வைத்தார்கள். அங்கு நின்ற உழவு இயந்திரங்களுக்கும் அடுக்கப்பட்டிருந்த நெற்கதிர் குவியல்களுக்கும் தீயிட்டார்கள். உடும்பன்குளம் எரிந்து கொண்டிருந்தது. அந்த ஏழை விவசாயிகளின் உழைப்பின் பலன்களெல்லாம் அவர்களுடனேயே சேர்த்து எரிந்து கொண்டிருந்தது.
தமிழீழத்தின் எல்லைப்புற மாவட்டமான அம்பாறையில் உடும்பன்குளத்தைப் போலத்தான் பல தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அவை பறிக்கப்பட்டுவிட்டன. பல தமிழ் கிராமத்து மக்கள் இப்படித்தான் அழிக்கப்பட்டுவிட்டார்கள். எங்கள் கிராமங்களில் எல்லாம் இன்று சிங்களவர்கள் வாழ்கிறார்கள். அம்பாறை மாவட்டத்தை ஒரு முழுமையான சிங்கள மாவட்டமாக மாற்ற முயலும் சிங்கள அரசினரின் திட்டமிட்ட செயல்கள் தான் இவை. இந்தக் கொலைகாரர் உண்மையில் ஆட்சியாளர்கள் தான்.
இந்தக் கொலைக்களத்தின் பார்வையாளர்களாக, இன்னும் சுடாமல் வைத்திருந்த மூன்று உழவு இயந்திர சாரதிகளும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்த அப்பாவி மக்களின் மீதான வெற்றியுடனும், இவர்களிடம் கொள்ளையிடப்பட்ட நெல்லு மூடைகளுடனும் அம்பாறை முகாமை நோக்கி வீதி வழியாக அந்த அராஜகவாதிகளின் அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது. அவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரச் சாரதிகளான புவனேந்திரன், செல்லையா, திவ்வியநாதன் ஆகிய மூவரும் – அதன் பின் இரும்பி வரவே இல்லை. அவர்களுடன் சேர்த்து எல்லாமாக 60 அப்பாவித் தமிழர்கள் அன்று அந்தக் கிராமத்தில் கொல்லப்பட்டார்கள். மறு நாள் அரச வானொலி அறிவித்தது…
லகுகல காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம் ஒன்று அழிக்கப்பட்டு பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சண்டையில் 40 பயங்கரவாதிகளின் உடல்கள் எடுக்கப்பட்டன. மேலதிக உடல்கள் தேடப்படுகின்றன.
சிங்கள அரசின் பார்வையில் இத் தமிழர்கள் பயங்கரவாதிகள். இந்த நிலை இப்பொழுதும் தொடர்கிறது. உடும்பன்குளம் போன்று பல கிராமப் படுகொலைகள் செய்யப்பட்டுவிட்டன. ஆனால் நாம் இன்றும் பாதுகாப்பற்றவராக வாழ்கின்றோம். நாம் எமக்கு பாதுகாப்பினை தேட வேண்டும். அந்தப் பாதுகாப்பு என்பது மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்களிப்பதுதான். இனிமேலும் அடிமைகளாக நாம் வாழ்வதைவிட ஆயுதங்களை ஏந்தி எமது மண்ணையும் மக்களையும் பாதுகாப்போம்.
உடும்பன்குள சம்பவத்தில் கொல்லப்பட்ட மக்களின் விரிப்புகள்
தங்கவேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த…
1. சீனித்தம்பி சிவபாலன் (வவது 28)
2. சீனித்தம்பி தவநாகன் (வயது 30)
3. சீனித்தம்பி அருள்செல்வம் (வயது 18)
4. குமாரவேல் நாகராசா (வயது 27)
5. சுவாமி டேவிட் (வயது 29)
6. கணபதி வடிவேல் (வயது 27)
7. பொன்னம்பலம் யோகராசா (வயது 18)
8. விஸ்வகேது இராசாராம் (வயது 30)
9. கணேசமூர்த்தி பேரின்பன் (வயது 28)
19. விஸ்வகேது இராசா (வயது 23)
10. இராசையா சதாசிவம் (வயது 35)
12. ஆறுமுகம் சோமசுந்தரம் (வயது 35)
13. தர்மலிங்கம் சபாரட்னம் (வயது 22)
14. கணேசபிள்ளை மோகனராசா (வயது 22)
15. இராசையன் தவேந்திரன் (வயது 18)
16. சில்வஸ்ரர் இன்னாசி (வயது 32)
17. மயில்வாகனம் தியாகராசா (வயது 13)
18. மைலன் தியாகராசா (வயது 18)
19. சுந்தரம் சின்னவன் (வயது 20)
20. தர்மன் (வயது 22)
21. இராமசாமி கந்தையா (வவது 48)
22. பத்மநாதன்
23. மார்க்கண்டு இரவீந்திரன்
24. பொன்னன் இராசதுரை
அக்கரைப்பற்று கிராமத்தைச் சேர்ந்த…
25. ஆறுமுகம் நல்லதம்பி (வவது 63)
26. நல்லதம்பி விநாயகமூர்த்தி (வயது 35)
27. நல்லதம்பி கோபாலகிஸ்ணன் (வயது 23)
28. நல்லதம்பி கணபதிப்பிள்ளை (வயது 25)
29. கந்தப்பு பாக்கியராசா (வலது 26)
30. கதிரேசு வைரமுத்து (வயது 60)
31. வைரமுத்து சுந்தரலிங்கம். (வயது 22)
32. அருண் சோமசுந்தரம் (வயது 32)
33. கந்தசாமி இராசமாலிங்கம் (வயது 60)
34. சீனித்தம்பி தாமோதரன் (வயது 40)
35. இராசையா சதாசிவம் (வயது 35)
36. சின்னத்தம்பி துரையப்பு (வயது 45)
கொம்மாந்துறை – செங்கலடியைச் சேர்ந்த…
37. தர்மலிங்கம் கனகேஸ்வரன் (வயது 18)
38. கணபதிப்பிள்ளை தங்கராசா (வயது 38)
39. மாணிக்கம் கிருபை (வயது 28)
இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட உழவு இயந்திரச் சாரதிகள்:
40. மாணிக்கப்போடி திவ்வியநாதன் (வயது 30)
41. தாசப்பு செல்லையா (வயது 22)
42. ஞானமுத்து புவனேந்திரன் (வயது 30)
மற்றும்
43. மசன்னா ஜெயராஜ் (வயது 28)
44. தாசப்பு சாமித்தம்பி (வயது 30)
45. தாசப்பு செபமாலை (வயது 20)
46. வெங்கரன் குலநாதன் (வயது 27)
47. துரை இராமலிங்கம் (வயது 26)
48. முத்துசாமி முத்துலிங்கம் (வயது 20)
49. இரங்கன் பௌல் (வயது 35)
இத்துடன் கூலி வேலைக்கென உடும்பன்குளம் வந்திருந்த நாடோடிகளான எட்டு குறவர் இன ஆண்களும் கொல்லப்பட்டனர். இவர்களுடன் பிற ஊர்களில் இருந்து வந்து நாட்கூலி வேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்யும் காலமாகும். உடும்பன்குளத்தில் தங்களது வயல்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொட்டகை அமைத்து வயல் வேலைகள் முடியுமட்டும் அங்கேயே தங்கியிருந்து தமது அறுவடையினை முடித்துக்கொண்டு நெல் மூட்டைகளுடனேயே திரும்புவது வழக்கமாகும். இவ்வாறே 1986ஆம் ஆண்டு மாசி மாதமும் வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள்.
1986.02.19 அன்று காலை 6.30 மணியளவில் கொண்டைவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினரால் உடும்பன்குள வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்களும், அங்கு தங்கியிருந்தவர்களும் சுற்றி வளைக்கப்பட்டார்கள். இராணுவத்தினரில் சிலர் உருமறைப்பு சீருடையிலும், மற்றவர்கள் நீலச் சீருடையிலும் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் இராணுவத்தினராற் கைது செய்யப்பட்டு கைகள், கண்கள் கட்டப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்தவர்களில் பெண்கள் இராணுவத்தினராற் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டார்கள். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் மார்பகங்களை அறுத்துக் கொலை செய்தனர். ஆண்களின் ஆண் உறுப்பு வயலில் நெல் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரிவாளினால் வெட்டப்பட்டது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். பலர் இராணுவத்தினரின் துன்புறுத்தலினாலேயே தமது உயிரினை இழந்தார்கள். பின்னர் எஞ்சியிருந்தவர்களைச் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்ததுடன், அவர்களின் உடலினை அறுவடை செய்யப்பட்ட நெற்சூட்டினுள் ஒன்றாகப் போட்டு எரித்தார்கள்.
இவ்வாறு 1986.02.19 அன்று காலை இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், வாடியில் தங்கியிருந்தவர்கள், சிறார்கள் என நூற்றுமுப்பத்துமூன்று பேரிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இவர்களில் ஒரு சிலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து 21.02.1986 அன்று மட்டக்களப்பு பிரசைகள் குழு வணபிதா சந்திரா பெர்ணான்டோ, நாளேட்டாளர்கள் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள்.
உடும்பன்குளத்தின் வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்கள் மீதான தாக்குதலை நடத்திய இராணுவத்தினருக்குப் பொறுப்பாக லெப்டினன்ட் சந்திபால தலைமை தாங்கினார்.
இச்சம்பவத்தில் இராணுவத்தினருடன் இணைந்து முஸ்லிம் குழுக்களும் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.
உடும்பன்குளம் நெற்பயிர்களில் நடந்த படுகொலைகளை நேரில் பார்த்தவரும் வன்புணர்ச்சிக்குள்ளானவருமான திருமதி ரி.கே. தன் கதையை பின்வருமாறு தொடர்புபடுத்தினார்:
“அன்று இரவு கொண்டவெட்டுவான் முகாமில் இருந்து வந்த படைத்துறையினர் நெல்வயல்களில் வேலை செய்த அனைவரையும் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் ஆண்களை சுடத் தொடங்கினர். அவர்கள் எங்கள் ஐந்து பேரை வன்புணர்ச்சி செய்தனர். எங்களை எதுவும் செய்ய வேண்டாம் என படைவீரர்களிடம் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் அனைவரும் நெல் வயலில் வரிசையில் நின்று எங்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தினர். வலி தாங்க முடியாமல் படிப்படியாக தன்னினைவை இழந்தோம்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நாங்கள் நன்னிலை எய்தி ஒரு மலையின் குகைக்குள் ஓடினோம். அங்கிருந்தபடி படைவீரர்கள் அனைத்து உடல்களையும் நெற் சாக்காலும் காய்ந்த புற்களாலும் மூடி அந்த உடல்களுக்கு தீ வைப்பதை பார்த்தோம்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்கரைப்பற்று குடிமக்கள் குழுத் தலைவர் திரு. அகமது லெப்பை, பொதுச் செயலாளர் எஸ்.டி.மூர்த்தி, துணைத் தலைவர், அருட்தந்தை. பிலிப், மற்றும் மட்டக்களப்பு குடிமக்கள் குழுவின் தலைவர் வண.சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் நாளேட்டாளர்களுடன் நெல் வயலுக்கு வந்தனர். அந்த பகுதியில் உள்ள காற்றில் சடலங்கள் அழுகியதால் ஏற்பட்ட பிணமணம் நாறியதோடு வந்தவர்கள் சடலங்கள் பாதி எரிந்த நிலையில் உள்ளதையும் கண்டனர்.
அங்கு 66 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டறிந்தனர். அனைத்து சடலங்களையும் புகைப்படம் எடுத்தனர். எங்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்தனர். கலவானை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் முத்துகம கூட இந்தப் படுகொலை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். அந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை. இங்கு நீதி இல்லை. பலியானவர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது படைத்துறையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட எங்களுக்கோ எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.”
1986ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இருபத்தோராம் திகதி பிரசுரிக்கப்பட்ட “த இந்து” நாளேடு கீழ்வருமாறு ஒரு செய்தியைப் பிரசுரித்தது.
கிழக்கு மாகாணத்திலுள்ள தங்கவேலாயுதபுரம் எனும் கிராமத்தில் 1986ஆம் ஆண்டு பெப்ரவரி பத்தொண்பதாம் திகதி ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என்போர் அடங்குவர். இத்தாக்குதலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் கவசவூர்திகளில் வந்து தாக்குதலை மேற்கொண்டனர். அத்துடன் ஆகாயத்திலிருந்து உலங்குவானூர்தியும் இக் கிராமத்தின் மீது குண்டுகளை வீசியது. இதனால் கடைகளும் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டன. ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டனர்.
உடும்பன்குளம் படுகொலையில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்
இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் கிழக்கு மாகாணத்திலேயே சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன.
இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதே வேளை வெட்டியும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர். இந்த வகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்கு மாகாணம் கண்டிருக்கிறது.
இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களும் சிங்கள இராணுவத்தினரின் கொடூரங்களுக்குள் இருந்து தப்பமுடியாமல் போயிற்று.
இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உடும்பன்குளம் என்ற கிராமத்தில் தான் கொடூரமான படுகொலைச் சம்பவம் ஒன்று 1986 ஆம் ஆண்டு அன்று சிறிலங்கா இராணுவத்தினராலும் முஸ்லிம் காடையர்களினாலும் மேற்கொள்ளப்பட்டது. வளமான மண்ணில் வளமாக வாழ்ந்த உறவுகள் இருபத்தியொரு வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்றும் அங்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு இப்படுகொலையானது மறக்கமுடியாத ரணவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
இக்கிராமமானது வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் அமையப் பெற்ற அழகிய கிராமமாகும்.
உடும்பன்குளக் கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்கள் வயல் விதைப்புக்களிலும் அறுவடைக் காலங்களிலும் தங்கள் குடும்பத்துடன் சென்று அருகில் உள்ள மலைகளில் வாடிகளிலேயே வாழ்ந்து வந்தார்கள். அக்காலப் பகுதியில் தங்கள் உணவுத் தேவைக்கு மலைகளில் உள்ள மேடுகளில் சோளம், வெண்டி, கீரை போன்றவற்றைப் பயிரிட்டும் அருகில் உள்ள குளம் ஒன்றில் மீன்களை பிடித்தும் உணவாக்கிக் கொள்வார்கள்.
இவ்வாறு தங்கள் நிலங்களில் நிம்மதியாக வாழ்ந்த இம்மக்கள் தங்களுக்கு இப்படி ஒரு கொடூரம் நடக்கவிருப்பதை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
இப்படுகொலைச் சம்பவமானது தற்செயலாக வந்த இராணுவத்தினராலோ அல்லது பதில் நடவடிக்கை என்ற ரீதியிலோ இப்படுகொலைகள் செய்யவில்லை, மாறாக இம்மண்ணில் இருந்து இவர்களை விரட்டுவதே இவர்களின் உள்ளார்ந்த நோக்கமாகும் என்பதை இம்மக்கள் பின்னாளில் அறிய முடிந்தது.
19.02.1986 அன்று காலை கொண்டைவெட்டுவான் இராணுவ முகாமில் இருந்த இராணுவம் ஏற்கனவே திட்டமிட்டபடி உடும்பன்குளம் கிராமம் நோக்கி சென்னது. அக்கிராமத்தைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் தங்களோடு முஸ்லிம் காடையர்களையும் இணைத்துக் கொண்டனர். கிராம மக்களில் கூடுதலானவர்கள் மாசி மாத அறுவடைக்காலம் என்பதால் வயல் வேலைகளுக்குச் சென்று விடுவார்கள். அன்றும் அப்படித்தான் வயல் வேலைக்குச் சென்று விட்டார்கள். வயல்களில் வேலை செய்த பல அப்பாவிப் பொதுமக்களை கைது செய்து கைகளையும் கண்களையும் கட்டித் துன்புறுத்தினார்கள். ஆண்களுடைய உறுப்பை அறுத்தும், சுட்டும், வைக்கோலை உழவு இயந்திரத்தில் போட்டு எரித்துவிட்டும் சென்று விட்டார்கள்.
இக்கிராமப் படுகொலைச் சம்பவம் பற்றி அறிவதற்கு கிழக்கு மாகாணப் போராளிகளை அணுகினோம். இப்படுகொலைச் சம்பவத்தில் படுகாயமடைந்த சியாமளா என்ற சிறுமி (அன்று நான்கு வயது) தற்பொழுது இருக்கிறார் (அவருக்கு தற்பொழுது இருபத்தியேழு வயது). அவரிடம் கேட்டால் இச்சம்பவத்தைப்பற்றி அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள்.
1986 ஆம் ஆண்டு நான்கு வயது என்று பாராமல் இராணுவத்தினரால் படுகாயப்படுத்தப்பட்ட அச்சிறுமி தற்பொழுது போராளியாக உள்ளார். இச்சம்பவத்தில் தனது உறவுகளை இழந்த நிலையில் அப்பம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த தமிழ்ப்பிறை (சியாமளா) தன்னுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அப்பம்மாவிடம் அறிந்து கொண்டதை – இவர் திரைக்கதை போல் எங்களிடம் கூறியுள்ளார்.
“நாங்கள் 1986 அம் ஆண்டு காலப்பகுதியில் அக்கறைப்பற்றில் வசித்து வந்தோம். எங்களுக்கு உடும்பன்குளத்தில் 15 ஏக்கர் வயல் நிலம் உள்ளது. அதில் முழுதாக விவசாயம் செய்து வந்தோம். அறுவடை காலம் என்பதால் அதற்குத் தேவையான பொருட்களை ஒழுங்குபடுத்திய பின் எங்கள் அப்பாவின் இரண்டு உழவு இயந்திரத்தில் நாங்கள் அனைவமுரும் உடும்பன் குளத்திற்குச் சென்று மலைகளில் வாடிகள் அமைத்து இருந்தோம்.
எங்களோடு அப்பப்பா, அப்பம்மா, அப்பா, அம்மா மற்றும் இரண்டு சித்தப்பாமார் வேறு உறவினர்களும் வந்தார்கள். ஆண்கள் அனைவரும் வயலில் அறுவடைக்குச் செல்வார்கள். பெண்கள் மலையில் உள்ள வாடியில் எங்களுக்குத் தேவையான உணவுவகைகளைச் செய்வார்கள்.
இவ்வாறு அன்று வழமையான வேலைகளைச் செய்து கொண்டிருக்கையில் மதியம் உணவு உண்பதற்காக அப்பா எல்லோரையும் அழைத்து ‘எல்லோரும் சாப்பிடப் போங்க, நான் சூடுகளுக்கு காவல் நிக்கிறன்.” என்று சொன்னார். உடனே எல்லோரும் மலைகளுக்கு சென்று விட்டார்கள். அக்காலப்பகுதியில் எனது சித்தப்பா கோபால கிருஸ்ணன் (கண்ணா) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எடுத்து விட்டு இருந்தபடியால் அந்த இடைவெளியில் அவரும் எங்களோடு வந்தவர். அவர் மலையில் மறுபக்கத்தில் படுத்து நித்திரையாகி விட்டார்.
கிராமத்தை சுற்றிவளைத்த ஆமி வயலுக்கு வந்து,
“டேய், எங்க எல்லாரும்?”.
அதற்கு அப்பா,
“எல்லோரும் மலையில் சாப்பிடினம்.”
என்று சொல்ல – ஆமியோடு வந்த முஸ்லிம் ஒருத்தன், அப்பாவை நன்றாகத் தெரிந்தவன், கத்தியால் வயிற்றில் குத்திவிட்டான். அப்பா, “கண்ணா ஓடு, கண்ணா ஓடு” என்று சித்தப்பாவின் பெயரைச் சொல்லி கத்தினார். அப்பதான் எல்லாரும் பார்த்தால், அப்பா இரத்த வெள்ளத்தில் – அருகில் ஓடிக்கொண்டிருந்த அருவிக்கரையில் தூக்கிப் போட்டிருந்தார்கள். பின்னர், மலையில் இருந்த ஏனையோரையும் கைது செய்து வயலுக்குக் கொண்டுவந்தார்கள். அதில் ஆண்களை கண்களையும் கைகளையும் கட்டி அடிக்கத் தொடங்கினார்கள். அப்போது பெண்களை ஓடச் சொல்லி விட்டான். ஓடும் போதுதான் இராணுவத்தினரின் தாக்குதலில் நான் காலில் படுகாயமடைந்தேன்.
ஆண்களில் எங்கள் உறவினரான வாய்பேச முடியாத அண்ணையை இராணுவத்தினர் கண்களை கட்டி விட்டு ஓடச் சொன்னான். அவர் உடனே ஓடி வந்து மிகுதிப் பேருக்கு என்ன நடக்குது என்று மலைப்பகுதியில் இருந்து பார்த்தார்.
இராணுவத்தினர் எல்லாரையும் அடிப்பதையும் வெட்டுவதையும் துப்பாக்கியால் சுடுவதையும் பார்த்த இவர் கண்ட காட்சி இவரை கதிகலங்க வைத்தது. எனது அப்பா அப்போது இறக்கவில்லை அப்படியே காயத்துடன் தான் இருந்தவர். எங்கள் உழவு இயந்திரத்தில் எல்லோரையும் போட்டு எரித்துவிட்டார்கள்.
அத்தோடு, அறுவடை முடிந்த பின்பு நாங்கள் அக்கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு தானமாக நெல் கொடுப்பது வழமை. அன்றும் தானம் பெறவந்த பல மக்கள் இதில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இச்சம்பவத்தை மறைந்திருந்து வாய்பேச முடியாத அண்ணையே ஊருக்குள் வந்து சொன்னார். ஆனால் அவருடன் பழகிய எங்கள் உறவினர்களுக்கே அவர் அங்கு என்ன நடந்தது என்று செய்து காட்டிய பின்தான் விடயம் ஊருக்குள் தெரியவந்தது.
இப்பொழுது அப்பாவையும் மற்றவர்களையும் போட்டு எரித்த உழவு இயந்திரத்தின் எரிந்த பாகங்கள் இப்படுகொலையின் சாட்சியாய் எங்கள் வீட்டில் உள்ளது.
காயமடைந்து அக்கறைப்பற்று வைத்தியசாலையில் தான் சிகிச்சை பெற்றேன். அவ்வைத்தியசாலை தற்பொழுது சிறிலங்கா இராணுவத்தின் அதிரடிப்படை முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது.”
என்று தனது கடந்தகால வடுக்களை எமக்குத் தெரிவித்தார்.
உடும்பன்குளம் படுகொலைச் சம்பவம் ‘உபுள் செனவிரட்ண’ என்ற அதிரடிப்படை பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.
உடும்பன்குளம் படுகொலை
இப்படுகொலையில் 8 குறவர்கள் உட்பட மொத்தம் 133 தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் படுகாங்களுடன் தப்பியிருந்தனர். அவ்வாறு தப்பியவர்களில் சிலர் பெண்களாவர். அவர்கள் வன்புணர்சிக்குள்ளாகியிருந்தனர். கொல்லப்பட்டோரின் சடலங்கள் அனைத்தும் சிங்கள-முஸ்லிம் படைவெறியர்களால் எரியூட்டப்பட்டிருந்தன [1]. அவ்வாறு எரியூட்டப்பட்டவற்றுள் முழுமையாக எரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் மொத்தம் 98 ஆகும். இவர்களுள் மொத்தம் 54 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர்[1]. அன்னவர்களது பெயர் விரிப்புகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன [1] [2].
அடையாளம் காணப்பட்டவர்களுள் ஒருவர் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு ஆழியவளையைச் சேர்ந்த ஆ.நல்லதம்பி என்பவராவார். இவர் அட்டப்பள்ளம் ஐந்தாம் குறிச்சியில் திருமணம் செய்திருந்தார். இவருடைய ஐந்து பிள்ளைகளில் ஒரு மகனும், இரு மகள்களின் கணவன்மாரும் அற்றைய நாள் அறுவடைக்குச் சென்றிருந்தனர். ஆனால், கெடுவேளையாக இவர்கள் அனைவரும் அற்றை நாளில் சிங்கள-முஸ்லிம் படைவெறியர்களால் கொல்லப்பட்டனர்.
1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 42 வது அமர்வில் இந்திய நிகராளிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய டி.எஸ்.டிலோன் மற்றும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற குழுவின் தலைவர் செனட்டர் ஏ.எல்.ஹிஸ்ஸன் ஆகியோர் உடும்பன்குளம் படுகொலை நிகழ்வு தொடர்பாக ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் உடும்பன்குளம் மலையடிவார பிள்ளையார் கோவிலில் இப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் அவர்தம் நினைவாக தீபமேற்றி உருகுவர். பின்னர் அத்தீபத்தினை கையில் எடுத்துக்கொண்டு மலைமேலுள்ள முருகன் ஆலயத்திற்குக் கொண்டு சென்று வழிபாடு செய்வர் [3].
கிண்ணியாவிலும் இனச்சுத்திகரிப்பா?
ஒரு கிராமத்தான் பட்டணத்துக்கு வந்தான். கடையொன்றில் சில பொருட்களைக் கொள்வனவு செய்தான். கடைக்காரரின் பார்வையில் அவள் வெகுளியாகவும். அப்பாவியாகவும் தெரிந்தான். என்றாலும் கடைக்காரர் அவனுடன் நோமையா- கவே நடந்து கொண்டார்.
பொருட்களுக்கான பணத்தை கடைக்காரர் கேட்ட போது அவன் சங்கோஜத்துடன் உள்ளாடைக்குள் கையை விட்டு ஆயிரம் ரூபாய் நோட்டை இழுத்து நீட்டினான். “ஐயா நாங்கள் கிராமத்தாள்கள் பட்டணத்துக்காரர் போல படிப்போ, அறிவோ ஏமாற்றிப் பிழைக்கும் கெட்டித்தனமோ எங்களுக்குக் கிடையாது. பட்டணத்துக்காரங்கள் பொல்லாதவங்கள் அதுதான் பணத்தை இப்படிப் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று வியாக்கினம் வேறு சொல்லிக் கொண்டார். உண்மை தான் சில மோசமான பட்டணத்துக்காரங்களால எல்லோருக்குந் தான் தலைகுனிவு” என்றபடியே கடைக்காரரும் மீதியைக் கொடுத்தார்.
கிராமத்தான் பல கடைகளில் ஏறி இறங்கினான். பல பொருட்களை கொண்டான். பொருட்களுடன் ஊருக்குப் புறப்படும் பஸ்ஸில் எறி அமர்ந்த பின்னர் தன்னைத் தானே இப்படிப் பாராட்டிக் கொண்டாள் எப்படித் தெரியுமா? “அப்படா கொண்டு வந்த கள்ள நோட்டுக்களை கெட்டித் தனமாக மாற்றி விட்டேன்” என்று தான்.
இப்படிக் கெட்டித்தனமாகத் தான் திருகோண மலை மாவட்டத்திலுள்ள கிண்ணியாவிலிருந்து 27 தமிழ்க் குடும்பங்கள் துவேஷத்தனமாக அரசியல்வாதியாலும், அதிகாரிகளாலும் மிக நாசூக்காக விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கிண்ணியா முஸ்லிம்கள் வாழும் நிலப்பரப்பு ஆயினும், ஆங்காங்கே சில தமிழ்க் குடும்பங்களும் காலங்காலமாக இவர்களுடன் ஐக்கியமாகவே வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு அரை நூற்றாண்டுக்கு மேலாக வாழ்ந்து வந்த ஒரு தமிழ்ப் பரம்பரை கிண்ணியாவிலிருந்து 24 மணி நேரத்துக்குள் விரட்டியக்கப்பட்டிருக்கிறார்கள்.
27 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் உறவினர்கள் ஒரே குடும்பத்திலிருந்து பெருகிய- வர்கள் இவர்கள் நீண்ட காலமாக குடியிருந்து வந்த காணிகளுக்கு அரசாங்கத்தால் அனுமதிப் பத்திங்களும் 1970ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கின்றன.
1986 மே மாதம் 4 திகதி தமிழர்கள் வகையறியாது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த காலம், அன்று அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சருமாகவிருந்த காலஞ்சென்ற மஹ்ரூப் இராணுவ அதிகாரிகள் சகிதம் அந்தக் குடியிருப்புக்குள் நுழைந்தார்.
“இந்த இடம் இராணுவ முகாம் போடுவதற்குத் தேவையாக இருக்கிறது. இருபத்திநான்கு மணி நேரத்துக்குள் நீங்கள் எல்லோரும் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறிவிடவேண்டும்” என்று உத்தரவிட்டார். மிகச் சாதுவான மனிதர் என்றும் நல்ல மனிதர் என்றும் தாங்கள் நம்பிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து இப்படியான கண்டிப்புடன் கூடிய கெடுபிடி உத்தரவு வரும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவர்கள்.
ஆனால், உண்மை அது தான். தங்கள் அனுமதிப்பத்திரங்களைக் காட்டினார்கள், தங்கள் கஷ்டநிலையை எடுத்துக் கூறினர். ஆனாலும் வெளியேற வேண்டியேற்பட்டது. அன்றே தங்களால் தூக்கிச் செல்ல முடிந்த உடைமைகளுடன் வெளியேறி உறவினர் நண்பர் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
அவர்களுடைய வேதனையெல்லாம் தங்களைப் பற்றி எதுவுமே அறியாத இரானுவம் தங்களை அகற்ற முனைந்தது ஆச்சரியமானதல்ல. ஆனால், காலங்காலமாக தங்களின் ஒவ்வொரு அசைவையும் நன்குணர்ந்தவரும், தங்களுக்கு வரும் துன்பங்களைத் துடைத்தெறிவார் என்று தாங்கள் நம்பியிருந்தவருமான மஹ்ரூப் பாராளுமன்ற உறுப்பினரே தங்களை அகற்றுவதில் முன் நின்றார் என்பதை நினைக்கும் போது தான் இரட்டிப்பானது.
மறுநாளே இவர்கள் குடியிருப்புகள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டு படைமுகாம் போடப்பட்டது. எத்தனையோ வாய்ப்பான வெற்றுக் காணிகள் இருந்த போதிலும் தமிழா நிலமே படை முகாமுக்குத் தகுந்தது என்ற தேர்வில் மஹ்ருப் பாராளுமன்ற உறுப்பினரின் இன்னொரு முகம் பின்புலமாக இருந்திருக்கிறது என்றே நம்ப வேண்டியுள்ளது.
தங்களுக்குத் தெரிந்த அதிகாரிகளிடம் எல்லாம் இந்த மக்கள் நியாயம் கேட்டுப்போனார்கள், பாராளுமன்ற உறுப்பினரின் விருப்பத்திற்கு விரோதமாக நடக்க எந்த அதிகாரியும் முன்வரவில்லை.
1990 ஜூனில் ஏற்பட்ட கலவரத்தில் இந்த முகாம் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்துத் தமிழர்களும் அகதிகளான போது இவர்களும் கிளப்பன்பேக் முகாமுக்கு வந்தார்கள். 1995 வரை கிளப்பன்பேர்க் வாழ்க்கையில் கழிந்தது. 1995இல் கிளப்பன்பேர்க் அகதி மக்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு உப்புவெளி 3ம் கட்டை முகாமுக்கும் கிண்ணியா 20 வட்டாரத்தில் அமைக்கப்பட்ட முகாமுக்கும் மாற்றப்பட்ட போது இக்குடும்பங்களும் இரு கூறாக்கப்பட்டன.
மீளக்குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது இவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றார்கள். ஆனால், அங்கே அனுமதி மறுக்கப்பட்டது. காணிகளைத் திரும்பவும் அரசு எடுத்துக் கொண்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததோடு அவர்களைத் திரும்பிப் போகும்படி பணித்தார்கள்.
‘அப்பன் எப்ப சாவான், திண்ணை எப்போ காலியாகும்’ என்று இருந்த மாதிரி தமிழர்களாகிய இவர்களது காணி உரிமை மிக விரைவாகவும் நாசூக்காகவும் அரசுக்கு மாற்றப்பட்டு அந்தக் காணியில் அபிவிருத்தி என்ற போர்வையில் நிரந்தர நிலப்பறிப்பு நடந்திருக்கிறது.
உடனடியாக மருந்தகம் ஒன்று கட்டப்பட்டது. சமூர்த்தி அலுவலகம் கட்ட அத்திவாரம் போடப்பட்டது. தற்போது அஞ்சல் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
இந்த அடாத்து வேலையில் எங்கள் பங்கு எதுவும் இல்லை என்று கிண்ணியா அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ தப்பித்துக் கொள்ள முடியாது. தமிழர்களைத் துரத்துவோம் என்ற கேவலமான பணியில் நேரடிப் பங்களிப்போ, தமிழர்கள் தாமே துரத்தப்படட்டும், கிண்ணியா சுத்தமாகட்டும் என்று சந்தோஷமாகக் கண்ணை மூடிக் கொண்டிருந்த மறைமுகமான பங்களிப்போ இவர்களுக்கு உண்டு.
வட பகுதியிலிருந்து 24 மணிநேரத்துக்குள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் துன்ப துயரங்களை விட இவர்களது துயரம் எந்த வகையில் குறைந்தது? ஜனநாயகம், சட்டம் அபிவிருத்தி என்ற போர்வைகளுடன் இனச் சுத்திக்கரிப்பு செய்வது எந்த வகையில் நியாயம்?
மார்க்கக் கடமைகளை நிறைவேற்றி ஹாஜியார் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கும் கிண்ணியாப் பெரியவர்கள் சற்றுச் சிந்தித்தால் நல்லது!
பாலியல் வன்முறைக்கு ஆளாகும் தமிழ்ப் பெண்கள்
யாழ்ப்பாணம், ஜூன் 24
கிழக்கு மாகாணத்த்தில் பரவலாக பல இடங்களிலும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக விடுதலைப்புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
மட்டு. கறுவாய்க்கேணியில் கடந்த புதனன்று சவரத் தொழிலாளி ஒருவரின் மனைவியையும் மகளையும் படையினர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர்.
கடந்த வியாழனன்று மட்டு. சுங்கான்கேணியில் கோமளம் எனும் இளம் பெண்ணை இராணுவத்துக்கு துணைபோகும் சில முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
வாழைச்சேனை காகித் தொழிற்சாலை அகதிகள் முகாமில் இருந்த பத்து இளம் பெண்களை கடந்த வெள்ளியன்று இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களின் உடல்களில் பீடியால் சுட்டு காயப்படுத்தியுள்ளனர்.
வாழைச்சேனையில் உள்ள இன்னொரு அகதி முகாமில் இருந்த தவம் என்ற பெண்ணை விசாரணை அழைத்துச் சென்ற படையினர் அப்பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இப்படி விடுதலைப்புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
திகதி: 27/06/1994
வீதிகளில் அழுகிய நிலையில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இளைஞர் சடலங்கள்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இரு இடங்களில் சுமார் 60 சடலங்கள் உருக்குலைந்த நிலையில் இருந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்துச் சென்றவர்களின் சடலங்களாக இவை இருக்கலாமென அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கூறினர்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனை வீதிகளிலும் சந்து முனைகளிலும் குறைந்த பட்சம் 25 சடலங்கள் இருந்ததாக அங்குள்ள மக்களை விசாரித்தபோது தெரியவந்தது.
நகரில் ஏராளமான சடலங்கள் கிடைத்ததை கல்முனையில் உள்ள தங்கள் ஆதரவாளர்களும் ஊர்ஜிதம் செய்வதாக இலங்கை முஸ்லிம் காங்ரஸ் வட்டாரங்களும் தெரிவித்தன.
வியாழக்கிழமையில் (21/06) இருந்து இச் சடலங்கள் கிடப்பதாக கல்முனையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கூறினார்.
காகங்களும், நாய்களும் குதறிக் கொண்டிருக்கின்றன. நகரம் முழுவதும் நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது என்றும் அந்த வர்த்தகர் சொன்னார்.
கல்முனையில் இருந்து 8கிமீ மீற்றர் தெற்கே காரைதீவு என்னும் இடத்தில் சுமார் 30 சடலங்கள் இருப்பதாகவும் தகவல்கள் இடைத்துள்ளன.
அங்கு விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் பிடித்துச் சென்ற 80 பேரில் 50 பேரைத்தான் விடுவித்தனர் என்று கல்முனை மக்கள் தெரிவித்தனர். கல்முனையிலோ, காரைதீவிலோ சடலங்கள் கிடப்பதுபற்றி தங்களுக்குத் தகவல் ஏதும் இல்லை என்று கொழும்பில் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
46 தமிழர் எரிப்பு
(கல்முனை)
கல்முனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாற்பத்தியாறு தமிழரை ஜிகாத் இயக்கமும் சிறிலங்கா இராணுவமும் சேர்ந்து ரயர் போட்டுக் கொழுத்தியுள்ளனர்



