ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம்
ஏற்கனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மொஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும்ட்ரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பதாகை
இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.



