ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடல் ; அனுமதியின்றி கடக்க முயற்சிக்கும் கப்பல்களை தாக்குவோம்.. ஈரான் எச்சரிக்கை

 

அமெரிக்கத் தாக்குதல்களை தொடர்ந்து மீண்டும் மோதல் வெடித்ததால் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதே போல தங்களின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குத்தல் நடத்தப்படும் எனவும் ஏற்றான் எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் உட்பட எது முயற்சித்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கூறி இருக்கிறது. ஈரானுக்குள் இருக்கும் பல இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, ஈரான் இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனிடையே ஹோர்முஸ் நீரிணையை தாங்கள் அனுமதிக்காத நிலையிலும், சட்டவிரோதமாக கடக்க முயன்ற 2 கப்பல்கள் மீது ஏற்கனவே தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மூலம் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் எந்தவொரு கப்பலையும் குறிவைப்போம் என்று ஈரானின் ராணுவத் தலைமை எச்சரித்து உள்ளது.

மேலும் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள எந்தவொரு கப்பலும் அங்கிருந்து வெளியேற கூடாது. எங்கள் இந்த எச்சரிக்கையை மீறி ஹோர்முஸ் நீரிணையை நெருங்குவது எதிரிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவே கருதப்படும் என்றும் ஈரான் ராணுவம் கூறியுள்ளது.