வணிக கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு

ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீதான தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தது தொடர்பாக அமெரிக்க தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. ஹோர்முஸ் நீரிணை அருகே, எண்ணெய் கப்பலின் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு இயந்திர அறையில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்

ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு!

ஈரான் மீது அமெரிக்கா நேற்று நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் அல்லது ராணுவத்தை பயன்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித அமைதி உடன்படிக்கையையும் எட்ட முடியாது என ஈரானின் ஐ.நா தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.