மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 15- ஜூலை -2026

 

மேஷம்: தடைபட்​டுக் கொண்​டிருந்த திரு​மணம் கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்​டு. விரும்​பிய பொருட்​களை வாங்கி மகிழ்​வீர். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டு​வீர். வியா​பாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். உத்​தி​யோகம் சிறக்​கும்.

ரிஷபம்: நினைத்த காரி​யங்​கள் நிறைவேறும். புது முயற்​சிகளில் வெற்றி காண்​பீர். கணவன்​-மனை​விக்​குள் இருந்த கசப்​பு​கள் வில​கும். அலைச்​சல் குறை​யும். வியா​பாரரீ​தி​யாக வெளியூர் பயணங்​கள் செல்​வீர்​கள். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்ப்​பது நல்​லது.

மிதுனம்: குடும்​பத்​தில் உங்​களின் வார்த்​தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்​டாரத்​தில் பதவி​கள் தேடி வரும். மகிழ்ச்​சிகர​மான சூழல் நில​வும். அலு​வல​கத்​தில் சக ஊழியர்​கள் ஆதர​வாக இருப்​பர். வியா​பாரத்​தில் புது யுக்​தி​களைக் கையாண்டு அனை​வரை​யும் கவர்வீர்.

கடகம்: குடும்​பத்​தில் கணவன் – மனை​விக்​குள் மனம் விட்​டுப் பேசி சின்​னச் சின்ன கருத்து மோதல் வந்​தா​லும் சமாளிப்​பீர். உடல் சோர்​வு, அலைச்​சல் வந்து போகும். வியா​பாரத்தை விரிவுபடுத்​து​வீர். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்​பது நல்​லது.

சிம்​மம்: அடிப்​படை வசதி பெரு​கும். பூர்​வீக சொத்​துப் பிரச்​சினை முடிவுக்கு வரும். உறவினர், நண்​பர் வீட்டு சுப நிகழ்ச்​சிகளில் முதல் மரி​யாதை கிட்​டும். அக்​கம் பக்​கத்​தினரை பகைத்​துக் கொள்​ளாதீர். வியா​பாரம் சூடு பிடிக்​கும். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்க்​க​வும்.

கன்னி: உங்​களின் இலக்கை நோக்கி முன்​னேறு​வீர்​கள். சமூகத்​தில் அந்​தஸ்து உயரும். குடும்​பத்​தில் நல்​லது நடக்​கும். பிள்​ளை​கள் படிப்​பில் ஆர்​வம் காட்​டு​வார்​கள். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும். வியா​பாரரீ​தி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்​திப்​பீர்​கள்.

துலாம்: எந்​தப் பிரச்​சினையை​யும் சமாளிக்​கும் மனப் பக்​கு​வம் கிடைக்​கும். உடன்​பிறந்​தவர்​கள் பக்​கபல​மாக இருப்​பார்​கள். பயணங்​களால் புத்​துணர்ச்சி பெறு​வீர்​கள். அலு​வல​கத்​தில் நிம்​ம​தி​யுண்​டு. வியா​பாரத்​தில் கடையை வேறு இடத்​துக்கு மாற்​று​வீர்.

விருச்​சிகம்: குழப்​பங்​கள் நீங்கி குடும்​பத்​தில் நிம்​மதி உண்​டு. உறவினர், நண்​பர்​கள் மத்​தி​யில் மதிப்பு கூடும். ஆடம்பர செல​வு​களை குறைத்து வருங்​காலத்​துக்​காக சேமிக்​கத் தொடங்​கு​வீர். வியா​பாரத்​தில் முன்​னேற்​றம் காண்​பீர். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும்.

தனுசு: காரி​யத் தடைகள், அலைச்​சல் வந்து போகும். விருந்​தினர் வருகை, குடும்​பத்​தின​ரால் செலவு உண்​டு. வியா​பாரத்​தில் பழைய பாக்​கி​களை போராடி வசூலிக்க வேண்டி வரும். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷ​யத்​தில் தலை​யி​டா​மல் இருக்​க​வும். மேல​தி​காரி​கள் ஆதரிப்​பர்.

மகரம்: தம்​ப​திக்​குள் இருந்த சங்​கடம் நீங்கி சந்​தோஷம் வரும். குடும்ப வரு​மானத்தை பெருக்க வழி கிட்​டும். நாடாளு​பவர்​களின் அறி​முகம் கிடைக்​கும். வியா​பார ரீதி​யாக பயணம் செல்​வீர்​கள். புதிய பங்​கு​தா​ரர்​களின் ஆலோ​சனையை நிராகரிக்​காதீர். உத்​தி​யோகம் சிறக்​கும்.

கும்​பம்: பழைய நல்ல நினை​வு​களை நினைத்து அசை போடு​வீர்​கள். உங்​களை சுற்​றி​யிருப்​பவர்​கள் உங்​களிடம் அன்​பாக இருப்​பர். வியா​பாரத்​தில் பாக்​கி​களை வசூலிப்​பீர். அலு​வல​கத்​தில் புதிய பதவிக்கு பரிந்​துரை செய்​யப்​படு​வீர். உழைப்​புக்​கேற்ற அங்​கீ​காரம் கிட்​டும்.

மீனம்: இங்​கித​மாகப் பேசி கடின​மான காரியங்களை சாதிப்​பீர். பிள்​ளை​கள் பொறுப்​பாக நடந்து கொள்​வர். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டு​வீர்கள். வி​யா​பாரத்​தில் பாக்​கிகள் வசூலாகும்​. அலு​வல​கத்​தில்​ அடுத்​தவர்​ விஷ​யத்​தில்​ தலை​யி​டாமல்​ இருக்​கவும்​.

பராபவ – ஆனி 31 | புதன்கிழமை

திதி: பிரதமை காலை 11.51 வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம்: பூசம் இரவு 9.46 வரை. பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: ஹர்ஷணம் காலை 8.03 வரை. பிறகு வஜ்ரம்.

நாமகரணம்: பவம் காலை 11.51 வரை. பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12. 24 வரை.

சந்திராஷ்டமம்: பூராடம்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50.

அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4

பரிகாரம்: பால்

தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை