எழுத்தாளரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ரூ.47 கோடி நஷ்டஈடு வழங்குவதை தடுக்க கோரிய அதிபர் டிரம்ப்பின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதே போல் முன்னணி எழுத்தாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
1996ஆம் ஆண்டு டிரம்ப் டவருக்கு எதிரே உள்ள குட்மேன் என்ற ஆடம்பர விற்பனையகத்தின் ஆடை மாற்றும் அறையில், டிரம்ப் ஒரு நட்பான சந்திப்பில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தது. கடந்த 2022ல் கரோல் முன்வைத்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்தார். இருப்பினும் ரூ.47 கோடி நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிரம்ப், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரிய அதிபர் டிரம்பின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.



