அமைதி, உற்சாகம், புத்துணர்ச்சி வழங்குவதுடன், வீட்டில் ஒற்றுமை நிலைத்து, பண வருமானமும் அதிகரிக்கும். இதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்கும், வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும்.
தீபம் ஏற்றும் நன்மைகள்
தீபாவளி என்பது ஒளியை கொண்டாடும் திருநாள். வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி வண்ண விளக்குகளால் அலங்கரித்து,, இருளை விரட்டும் முக்கியத்துவம் கொண்டது. பாரம்பரிய நம்பிக்கையின் படி, வீட்டில் தீபம் ஏற்றினால் மகாலட்சுமி நமது வீட்டை தேடி வருவாள், செல்வ வளமும் நன்மைகளும் சேரும் என்று கூறப்படுகிறது.
தீபாவளி திருநாள்
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 ம் தேதி வருகிறது. அந்த நாளில் வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்தால் எதிர்மறை சக்திகள் அகலும். வீட்டின் ஒளி சூழல் மனதைத் தூய்மையாக்கி, குடும்ப நிம்மதி மற்றும் செல்வ வளம் அதிகரிக்க உதவும். இதே நேரத்தில், தீபம் ஏற்றும் இடம், நேரம் மற்றும் எண்ணெய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தீபாவளி திருநாள்
பாரம்பரியமாக, நெய் கொண்ட தீபங்கள் அதிக பலன்களை தரும். நெய் தூய்மையானது, நேர்மறை சக்திகளை வெளிப்படுத்துகிறது. மனதை தெளிவாக்கி ஆன்மீக உணர்வை உயர்த்துகிறது. குடும்ப உறவு வலுப்பட்டு மன அழுத்தம் குறையும்.
தீபாவளி திருநாள்
அதே போன்று, நல்லெண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றினால் மகாலட்சுமிக்கு உகந்ததாக கூறப்படுகிறது. நல்லெண்ணெய் சுடரில் தீய சக்திகளை அழிக்கும் தன்மை கொண்டது. மன அமைதி, உற்சாகம், புத்துணர்ச்சி வழங்குவதுடன், வீட்டில் ஒற்றுமை நிலைத்து, பண வருமானமும் அதிகரிக்கும். இதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்கும், வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும்.
தீபாவளி திருநாள்
மற்றொரு நன்மை, கடுகு எண்ணெய் தீபங்கள். வீட்டில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றினால் கண் திருஷ்டி, தீய சக்திகள் மற்றும் துரதிஷ்டத்தை அகற்றி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தீபாவளி திருநாள்
மன அழுத்தம், பதட்டம் குறையும். இதனால் குடும்பத்தினர்கள் நிம்மதியாகவும் உற்சாகமாகவும் வாழலாம்.




