காசியில் உள்ள கங்கை தீர்த்தத்திற்கு செல்ல முடியாதவர்கள், கங்கை ஊற்றாக பொங்கும் அரியத்துறை சிவன் கோவிலுக்கும் சென்று பாவங்களை தீர்க்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
ஆரணி நதி
தீபாவளி அன்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசிக்க பாவம் தொலையும் என்று சொல்வது வழக்கம். ஆனால், இதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் கங்கை ஊற்றாக பொங்கும் அரியத்துறை சிவன் கோவிலுக்கும் சென்று பாவங்களை தீர்க்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
ஆரணி நதி
தமிழகத்தின் காசியாக விளங்கும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே உள்ளது. இங்கு குடியிருக்கும் வரமூர்த்தீஸ்வரரை தரிசித்தால் முன்னோர் சாபம் தீரும். மகரிஷி ரோமர் என்பவர் சிவனை தரிசிக்க விரும்பினார். பிரம்மாவிடம் இது பற்றிக் கேட்க, அவர் தர்ப்பையை பந்தாக மாற்றி உருட்டினார். பூமியில் இப்பந்து நிற்கும் இடத்தில் தவம் செய்யுங்கள். விருப்பம் நிறைவேறும் என்றார் பிரம்மா.
ஆரணி நதி
தர்ப்பை சக்கரம் நின்ற இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு மகரிஷி வரம் பெற்றார். அனுசூயா, அத்திரி தம்பதியின் மகனான முகுந்த முனிவர் சிவத்தல யாத்திரை சென்றார். அப்படி செல்லும் வழியில் பிரம்மச்சாரி ஒருவரிடம், “காசிக்கு எப்படி செல்வது” எனக் கேட்டார். அதற்கு அந்த பிரம்மச்சாரி, “அவ்வளவு துாரம் செல்ல வேண்டாம்.
ஆரணி நதி
ஆரணி நதியில் நீராடி வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் காசியை தரிசித்த பலன் கிடைக்கும்” என்றார். அதன்படி செய்யவே, பிரம்மச்சாரி வேடத்தில் இருந்தவர் பைரவராக காட்சியளிக்க, அவரது சடையில் இருந்து கங்கை வரத் தொடங்கியது. அரிய கங்கை நீரைக் கொண்டு வந்ததால் இத்தலம் அரியத்துறை என்றானது.
ஆரணி
இன்றும் ஆரணி நதியில் ஓரிடத்தில் கங்கையை போன்ற ஊற்று பொங்கி வருகிறது. இதை தலையில் தெளிக்க பிதுர் தோஷம் தீரும். வரமூர்த்தீஸ்வரரை வழிபட்டால் போதும், பாவம் அனைத்தும் தீரும்.
ஆரணி
அழகின் வடிவான மரகதவல்லி இங்கு தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். இந்திரன் இங்கு இங்கு வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் விலகப் பெற்றார். குரங்கு ஒன்று இங்குள்ள கங்கை நீரை குடித்து சிவனை வணங்கியதால் மறுபிறவியில் மன்னராகப் பிறக்கும் பேறு பெற்றது. 1000 ஆண்டுகள் அரசமரமாக இருந்த கிருஷ்ணர் இங்கு சாப விமோசனம் பெற்றார்.




