தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உங்கள் உடலுக்கு என்ன நன்மைகளை தரும்? 45 நாட்களில் செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
விலை மலிவாகவும், வருடத்தில் 365 நாட்களும் தடையின்றி கிடைக்கக்கூடிய ஒரு முழுமையான இயற்கை உணவாக வாழைப்பழம் திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த எளிய பழத்தில், உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
காலை உணவாக இருக்கட்டும் அல்லது மாலை நேர சிற்றுண்டியாக இருக்கட்டும், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்க வாழைப்பழத்தை விட சிறந்த தேர்வு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தச் சூழலில், ஒரு நபர் தினமும் ஒரு வாழைப்பழம் வீதம் தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வந்தால், அவருடைய உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் இங்கே பார்க்கலாம்.
கலோரிகள்: 89 kcal
கொழுப்பு: 0.33 கிராம்
கொலஸ்ட்ரால்: 0 மி.கி
சோடியம்: 1 மி.கி
கார்போஹைட்ரேட்: 22.80 கிராம்
நார்ச்சத்து : 2.60 கிராம்
புரதம்: 1.09 கிராம்
பொட்டாசியம்: 358 மி.கி
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், தசை செயல்பாட்டிற்கும் உதவுகிறது. இதில் உள்ள இயற்கை சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதால், காலை உணவாக அல்லது உடற்பயிற்சிக்கு முந்தைய சிற்றுண்டியாக சாப்பிட சிறந்த தேர்வாகும்.
மேலும் வைட்டமின் பி6 உள்ளடக்கம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ‘செரோடோனின்’ ஹார்மோன் சுரப்பை தூண்டி மனநிலையை சீராக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் செல்களை பாதுகாப்பதுடன், உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன.
இவை உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு தமனிகளில் கொழுப்பு படிவதை குறைக்க உதவக்கூடும்.
இந்த ஆய்வின்படி, அன்றாட உணவில் வாழைப்பழத்தை சேர்ப்பது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.




