பீகாரில் 28 வயது மதிக்கத்தக்க திருமணமான இளம்பெண்ணை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 5 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் செய்து, பிறப்புறுப்பில் மரத்துண்டு, தோட்டா மற்றும் கல் போன்ற பொருட்களை செலுத்தி சித்ரவதை செய்த கொடூரச் சம்பவம் அறங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி ஐந்து நபர்கள் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கணவனை அறையில் பூட்டி வைத்துவிட்டு, அவரது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில், கடுமையான வயிற்று வலியால் சிரமமப்பட்டு வந்த அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது, பிறப்புறுப்பில் இருந்து தோட்டா, கல் மற்றும் மரத்துண்டு போன்ற பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இந்த பொருட்களை செலுத்தி சித்ரவதை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் என்ற இடத்தில் தனது கணவருடன் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டுக்கு வெளியே உள்ள கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது கணவரை வீட்டுக்குள்ளேயே தள்ளிவிட்டு வீட்டை பூட்டியுள்ளனர்.
பிறகு, கழிப்பறையில் இருந்து வெளியே வந்த அப்பெண்ணை அந்த கும்பல் வாயைக் கட்டி, வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று கயிற்றால் கட்டிப்போட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்பெண் சத்தம் போட முயன்றபோது, பிளேடால் அவரது மார்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கீறி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
பிறகு அந்த பெண் மயக்கமடையவே, அங்கிருந்து குற்றவாளிகள் தப்பித்து ஓடிவிட்டனர். மயக்கம் தெளிந்து அப்பெண் மாமியாரை அழைத்துள்ளார். அவர் வீட்டிற்குள் பூட்டி வைத்த அவரது மகனையும் மருமகளையும் மீட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் உடனே மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களும் அருகில் இருந்த பரௌனி என்ற மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அப்பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அங்கிருந்து சதர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பாலியல் வன்கொடுமையால் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த வலி இருக்கிறது. கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கவே மறுநாளே (ஜூன் 12 ஆம் தேதி) வீடு திரும்பியுள்ளனர்.
இருப்பினும், தொடர்ந்து பிறப்புறுப்பு பகுதியிலும், வயிற்றுப் பகுதியிலும் கடுமையான வலியை அனுபவித்து வந்துள்ளார். இதையடுத்து, ஜூன் 17 ஆம் தேதி மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், அப்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிறப்புறுப்பில் துப்பாக்கியின் தோட்டா, கல் மற்றும் மரத்துண்டு போன்ற பொருட்கள் இருந்துள்ளன. உடனடியாக சிகிச்சை மூலம் அவற்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் அப்பெண் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெகுசராய் காவல்துறை குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு, இதேபோல் 3 பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, அவரைத் தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்ததோடு, வீட்டிலிருந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையடுத்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்ததுள்ளார். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் டிஎஸ்பி பாண்டே உறுதியளித்துள்ளார்.




