இந்­திய சந்­தையை நோக்கி நகரும் மெட்டா

 

மெட்டா நிறு­வ­னத்தின் தலைமை நிர்­வாக அதி­காரி மார்க் ஸக்­கர்பெர்க், குணால் ஷா உரு­வாக்­கிய CறேD நிறு­வ­னத்தில் 900 மில்­லியன் டொலர் முத­லீடு செய்யும் திட்­டத்தை அறி­விக்­கிறார்.

அதே நேரத்தில், மெட்­டாவின் கீழ் இயங்கும் வட்ஸ் அப் நிறு­வ­னத்தின் சர்­வ­தேச நிறை­வேற்று உத்­தி­யோ­கத்­த­ராக குணால் ஷா நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­ப­டு­கி­றது…

 

ஒரு நடுத்­தரக் குடும்­பத்தைச் சேர்ந்த மாணவன். அப்­பாவின் வியா­பாரம் சரி­வ­டை­கி­றது.

படிப்பில் உய­ரத்தை எட்ட வேண்டும் என்ற கனவு இருக்­கி­றது. ஆனால், குடும்­பத்தின் பொரு­ளா­தாரச் சுமை அந்தக் கனவை விட கன­மாகத் தோளில் ஏறு­கி­றது.

பல்­க­லைக்­க­ழ­கத்­திற்குச் செல்­கிறான். படிக்க வேண்­டிய துறையைத் தேர்வு செய்­கிறான். எதிர்­கா­லத்தில் அதிக சம்­பளம் தரும் பாடப்­பி­ரிவு அவ­னது முன்­னு­ரி­மை­யல்ல.

டெலி­வரி பணி­யா­ள­ராக வேலை செய்ய வேண்டும். சைபர் கபேயில் நேரம் செல­விட வேண்டும். மரு­தாணிப் பைகளை விற்று குடும்­பத்­துக்கு உதவ வேண்டும். அதற்கு வகுப்­ப­றையில் செல­விடும் நேரம் குறை­வாக இருக்க வேண்டும்.

அத­னால்தான் மும்­பையின் வில்சன் கல்­லூ­ரியில் மெய்­யி­யலைத் தேர்வு செய்­கிறான்.

அந்த இளை­ஞனின் பெயர் குணால் ஷா.

பல­ருக்கு மெய்­யியல் என்­பது வேலை வாய்ப்பு குறை­வான பாட­மாகத் தோன்­றலாம். ஆனால், குணால் ஷாவுக்கு அது மனித மனதைப் புரிந்­து­கொள்ளும் ஜன்­ன­லாக இருந்­தது. மனி­தர்கள் ஏன் ஒரு முடிவை எடுக்­கி­றார்கள்? ஏன் ஒரு பொருளை வாங்­கு­கி­றார்கள்? ஏன் சில பழக்­கங்­களை மாற்ற மறுக்­கி­றார்கள்? இந்தக் கேள்­வி­கள்தான் அவரை வாழ்நாள் முழு­வதும் தொடர்ந்து வந்­தன.

காட்சி மாறு­கி­றது. 2026 ஜூன்.

மெட்டா நிறு­வ­னத்தின் தலைமை நிர்­வாக அதி­காரி மார்க் ஸக்­கர்பெர்க், குணால் ஷா உரு­வாக்­கிய CறேD நிறு­வ­னத்தில் 900 மில்­லியன் டொலர் முத­லீடு செய்யும் திட்­டத்தை அறி­விக்­கிறார்.

அதே நேரத்தில், மெட்­டாவின் கீழ் இயங்கும் வட்ஸ் அப் நிறு­வ­னத்தின் சர்­வ­தேச நிறை­வேற்று உத்­தி­யோ­கத்­த­ராக குணால் ஷா நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­ப­டு­கி­றது.

உலகம் முழு­வதும் சுமார் 330 கோடி மக்­களை இணைக்கும் தளத்தின் பொறுப்பு, இந்­தி­யாவில் பிறந்து வளர்ந்த ஒரு தொழில் முனை­வோரின் கைக­ளுக்கு வர­வி­ருக்­கி­றது.

இது சாதா­ரண நிய­மனம் அல்ல. சுந்தர் பிச்சை அல்­லது சத்யா நடெல்லா போன்­ற­வர்கள் அமெ­ரிக்­காவில் உயர்­கல்வி கற்று, சிலிக்கன் பள்­ளத்­தாக்கின் நிறு­வ­னங்­களில் படிப்­ப­டி­யாக உயர்ந்­த­வர்கள். ஆனால், குணால் ஷாவின் பயணம் வேறு.

அவர் இந்­தி­யா­வி­லேயே தன் நிறு­வ­னங்­களை உரு­வாக்­கி­யவர்.

2010-ஆம் ஆண்டு ப்றீசார்ஜ் என்ற டிஜிட்டல் கட்­டண நிறு­வ­னத்தை இணைந்து தொடங்­கினார். மொபைல் ரீசார்ஜை எளி­தாக்­கிய அந்த நிறு­வனம் இந்­திய ஸ்டார்ட்அப் உலகில் பெரிய வெற்­றி­யாக மாறி­யது. பின்னர் அது ஸ்னப்டீல் நிறு­வ­னத்­திடம் ஆயி­ரக்­க­ணக்­கான கோடி ரூபாய் மதிப்பில் விற்­கப்­பட்­டது.

அதற்குப் பிறகும் அவர் ஓய­வில்லை. 2018 இல் CறேD-ஐ உரு­வாக்­கினார். நல்ல கடன் வர­லாறு கொண்ட கிரெடிட் கார்ட் பய­னா­ளர்­க­ளுக்­கான தள­மாகத் தொடங்­கிய CறேD, பின்னர் நிதிச் சேவை­களின் முழு­மை­யான சூழ­லாக வளர்ந்­தது.

ஆனால், குணால் ஷாவின் தனித்­தன்மை தொழில்­நுட்­பத்தில் மட்டும் இல்லை.

அவ­ருக்கு மிகவும் பிடித்த துறை Bஎகவிஒஉரல் ஏcஒனொமிcச் — மனி­தர்­களின் பொரு­ளா­தார முடி­வு­க­ளுக்குப் பின்னால் இருக்கும் உள­வியல்.

மனி­தர்கள் தர்க்­கத்தின் அடிப்­ப­டையில் அல்ல; பழக்­கங்கள், உணர்­வுகள், நம்­பிக்கை ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் முடி­வெ­டுக்­கி­றார்கள் என்­பதே அந்த சிந்­த­னையின் மையம்.

இந்தப் பின்­ன­ணியைப் புரிந்­து­கொண்­டால்தான் மெற்­றாவின் இந்த முடிவின் முக்­கி­யத்­துவம் விளங்கும்.

இந்­தி­யாவில் மட்டும் Wகட்சாப்ப்-ஐ பயன்­ப­டுத்­து­ப­வர்கள் சுமார் 50 கோடி பேர். தக­வல்­களைப் பகிர்­வ­தற்கு மக்கள் அதை நம்­பு­கி­றார்கள். ஆனால் பணப் பரி­வர்த்­த­னை­களில் அதே அள­வி­லான நம்­பிக்­கையை இன்னும் பெற­வில்லை.

இதுவே மெட்­டாவின் அடுத்த சவால். செய்­தி­களை அனுப்பும் செய­லியை, வாங்­குதல், விற்­பனை, கட்­டணச் செலுத்தல், வணிகச் சேவைகள் என வரு­மானம் ஈட்டும் தள­மாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு மெட்­டா­வுக்கு நீண்ட கால­மாக உள்­ளது.

அந்த மாற்­றத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு, இந்­திய நுகர்­வோரின் மன­நி­லை­யையும், டிஜிட்டல் பழக்­கங்­க­ளையும் ஆழ­மாகப் புரிந்­து­கொண்ட ஒரு­வரைத் தேர்வு செய்­வது இயல்­பான முடி­வாக இருக்­கலாம்.

அதே நேரத்தில் இன்­னொரு கேள்­வியும் எழு­கி­றது.

தானே உரு­வாக்கி வெற்­றி­ய­டைந்த நிறு­வ­னத்தை வழி­ந­டத்திக் கொண்­டி­ருக்கும் ஒருவர் ஏன் வேறொரு நிறு­வ­னத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்?

அதற்­கான பதிலும் குணால் ஷாவின் சிந்­த­னை­யி­லேயே இருக்­கி­றது.

CறேD இந்­தி­யாவில் மிகப்­பெ­ரிய வெற்­றியைப் பெற்­றாலும், அதன் வளர்ச்சி இந்­திய சந்­தை­யோடு அதிகம் இணைந்­துள்­ளது. ஆனால், வட்ஸ்அப் உலகின் பாதிக்கும் மேற்­பட்ட மக்­களின் அன்­றாட தொடர்­பா­டலைத் தொடும் தளம்.

ஒரு தொழில்­மு­னை­வோ­ருக்கு இது ஒரு புதிய பதவி மட்­டு­மல்ல; மனி­தர்­களின் தொடர்­பாடல், பணப் பரி­வர்த்­தனை, டிஜிட்டல் பழக்­க­வ­ழக்­கங்கள் ஆகி­ய­வற்றின் அடுத்த பரி­ணா­மத்தை வடி­வ­மைக்கும் வாய்ப்­பா­கவும் இருக்­கலாம்.

இதில் இன்­னொரு பெரிய மாற்­றமும் இருக்­கி­றது.

இது­வரை இந்­திய திற­மைகள் அமெ­ரிக்­கா­வுக்குச் சென்று உலகத் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களை வழி­ந­டத்­தின. ஆனால், இப்­போது உலக நிறு­வ­னங்­களே இந்­தியச் சந்­தை­யையும், இந்­தியத் தலை­மை­யையும் மைய­மாகக் கொண்டு சிந்­திக்க வேண்­டிய சூழல் உரு­வாகி வரு­கி­றது.

அதி­க­மான பய­னா­ளர்கள் ஆசி­யாவில் இருக்­கி­றார்கள். அதி­க­மான வளர்ச்சி வாய்ப்­பு­களும் இங்­குதான் இருக்­கின்­றன. எனவே இந்­தி­யாவைப் புரிந்­து­கொள்­ளாமல் உலக டிஜிட்டல் சந்­தையை வழி­ந­டத்த முடி­யாது என்­பதை தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் உணரத் தொடங்­கி­யுள்­ளன.

இந்தப் பின்­ன­ணியில் பார்க்­கும்­போது, குணால் ஷாவின் எழுச்சி தனி­ந­பரின் வெற்றிக் கதை மட்­டு­மல்ல.

உலக தொழில்நுட்ப அதிகார மையம் மெதுவாக தனது பார்வையை மாற்றிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகவும் அது பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் இறுதியில் மெட்டாவுக்குப் புதிய வருமான வாய்ப்புகளைத் தரலாம்.

குணால் ஷாவுக்கு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் மேடையை வழங்கலாம்.

ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, உலகத் தொழில்நுட்பத் தலைமையில் இந்திய சிந்தனைக்கும், இந்திய சந்தைக்கும், இந்திய தொழில் முனைவோருக்கும் கிடைத்திருக்கும் புதிய அங்கீகாரமாகவும் இந்த நிகழ்வைப் பார்க்க முடியும்