பெயர் : SUGNTH ANONY RAJ
பிறந்த நாள் : 19 OCT
பிறந்த இடம் : DENMARK
தொடர்புக்கு : .
நாட்கள் தானே.!
எப்படியோ நகர்ந்து போனது!
நான் மட்டும் அப்படியே
உறைந்து போனதேன்.?
வருடம் கடந்ததென்று தேதி சொல்லுது
உறங்க சென்ற நீ மட்டும் எழும்ப மறந்ததேன்!
நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியானாய்!
இதயங்களெல்லாம் நொறுங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்...!
காற்று வந்து காதில் ஏதோ சொல்லிப் போகுது
பார்க்கும் இடமெல்லாம் உன் குரலே கேட்குது
கடந்தகாலம் எங்களிற்கு கனவாய் போனது
எதிர்காலம் இப்படியேன் இருட்டாய் ஆனது?
ஆறாத்துயருடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அப்ஸ்,