நோய் எதிர்ப்புசக்திக்கு கருந்திராட்சை !

 

பிளாக்கரண்ட் பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும், மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீன பாரம்பரிய வைத்திய முறைகளில் பிளாக் கரண்ட் பழம் பயன்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திராட்சை வகையைச் சேர்ந்த இந்தப் பழம் அடர் ஊதா நிறத்தில் காணப்படுகிறது. இது புளிப்பு கலந்த இனிப்பு ச்சுவை கொண்டது. இது ரைப்ஸ் நிக்ரம், கருந்திராட்சை என்றும் அழைக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

அதிக வைட்டமின் சி: ஒரு கப் பிளாக் கரண்ட் பழத்தில் ஆரஞ்சுப் பழத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

கண் ஆரோக்கியம்

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அந்தோசயினின்கள் கண் பார்வையை மேம்படுத்துவதோடு, விழித்திரை பாதிப்பு மற்றும் குளுக்கோமா போன்ற கண் பிரச்னைகளைத் தடுக்க உதவுகின்றன.

இதய நலம்உடற்கூறியல் பயில்

பொட்டாசியம் மற்றும் அந்தோசயினின்கள் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தைக் சீராக வைக்கவும், இதயநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

செரிமானம்

இதில் உள்ள கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலைத் தடுப்பதோடு குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

மூட்டு வலி குறைவு

பிளாக்கரண்ட் விதைகளில் உள்ள காமா-லினோலெனிக் அமிலம் (GLA) மற்றும் அழற்சி எதிர்ப்புப் பொருள்கள் மூட்டுவலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு

இதில் உள்ள மாங்கனீசு மற்றும் பாலிஃபீனால்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை மெதுவாக்கி, இன்சுலின் சுரப்பை சீராக்க உதவுகின்றன.

அழற்சியைக் குறைக்கிறது

இதில் ஒமேகா-6 கொழுப்பு அமிலமான காமா-லினோலிக் அமிலம், அதிக அளவில் காணப்படுகிறது. இந்த வேதிப்பொருள் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதுடன், முடக்கு வாதம் உள்ளிட்ட அழற்சிக் கோளாறுகளின் அறிகுறிகளையும் அசௌகரியங்களையும் தணிக்க உதவுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் எதிர்ப்பு

பிளாக்கரண்ட் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கின்றன. மேலும், சில புற்றுநோய்களுக்கு வழிவகுக்கக்கூடிய செல் சேதத்தைத் தடுக்கவும் அவை உதவுகின்றன. இதில் உள்ள ஆந்தோசயனின்கள், கல்லீரல் புற்றுநோய் செல்களின் மேலதிக வளர்ச்சியைத் தடுக்கவும் கூடும்