பிளம்பர் வேலை பார்க்க போன இடத்தில் . ரூ.23 கோடி மதிப்பு தங்கம்

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள ஒரு பழைய சொகுசு பங்களாவில் நடந்து வந்த சீரமைப்புப் பணிகளின் போது, ஒரு பிளம்பர் செய்த அதிர்ஷ்டமான செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின் அடித்தளத்தில் சிமென்ட் தரையில் கயிறு ஒன்று வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார். சாதாரண விஷயமாக நினைக்காமல், ஆர்வம் காரணமாக அந்தத் தரையைத் தோண்டிப் பார்த்தபோது, துருப்பிடித்த இரும்புப் பெட்டி ஒன்று புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த சுமார் 30 கிலோ எடையுள்ள பளபளக்கும் தங்கக் காசுகள் இருந்தன. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 23 கோடி ரூபாயாகும். அவருக்கு முன்பு வேலை பார்த்த மற்றொரு தொழிலாளி அந்தக் கயிற்றைக் கவனித்திருந்தாலும், அலட்சியமாக விட்டுச் சென்றுள்ளார்.

ஆனால், இந்த பிளம்பரின் ஆர்வம் அவரை ஒரே நாளில் கோடீஸ்வரனாக்கியுள்ளது. ஆஸ்திரிய நாட்டின் சட்ட விதிகளின்படி, தற்செயலாகக் கண்டெடுக்கப்படும் புதையல்களின் மதிப்பை, அதைக் கண்டுபிடித்தவரும் நிலத்தின் உரிமையாளரும் சரிபாதியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில், அந்த நேர்மையான உழைப்பாளிக்குத் தகுதியான பங்கு சட்டப்படி கிடைத்துள்ளது.