
அமெரிக்கா ஈரான் இடையே கடந்து பிப்ரவரி மாதம் முதல் போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கம்மேனி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா- ஈரான் இடையே போர்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி அமெரிக்கா ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது.அந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 14 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
அதன் அடிப்படையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும்,ஈரான் கடலோரப் பாதையில்தான் கப்பல்கள் செல்ல வேண்டும் என்றும், ஓமன் கடற்கரையை ஒட்டிய வழித்தடத்தை பயன்படுத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது.இந்த சூழலில்,மார்ஷல் தீவைச் சேர்ந்த அல் ரெஹாயத், சவுதியின் வெட்யான், லைபீரியாவின் சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய மூன்று எண்ணெய் கப்பல்கள் அண்மையில் ஓமன் கடற்கரையை ஒட்டிய வழியாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததாக கூறப்படுகிறது.
கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்
இதையடுத்து, அந்த கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, ஈரானின் இலக்குகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இந்த சம்பவங்களே அங்காராவில் டிரம்ப் கடுமையாக கருத்து தெரிவிக்கவும், இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் மீண்டும் அதிகரிக்கவும் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ NATO உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் சென்றார். அப்போது ஈரான் ஆதரவுப் படைகளிடமிருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக போயிங் 747-8 சிறப்பு விமானத்தில் வந்திறங்கினார்.இது குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஈரான் போயிங் 747-8 விமானத்தை குறிவைக்கவில்லை. மாறாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் மற்றும் அவரின் பயணத்தை குறிவைத்துள்ளது.
ஈரான் விடுத்த எச்சரிக்கை பயந்து விமானத்தை மாற்றிய ட்ரம்ப்
மேலும் நேட்டோ உச்சிமாநாடுமுடிந்த பிறகு புதிதாகச் சேர்க்கப்பட்ட கத்தார் விமானத்தில் ஏவுகணைகளைத் திசைதிருப்பும் மற்றும் செயலிழக்கச் செய்யும் முழுமையான நவீனத் தற்காப்பு அமைப்புகள் இன்னும் முழுமையாகப் பொருத்தப்படவில்லை.இதனால் லேசர் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட ஏவுகணைத் தடுப்பு வசதிகளைக் கொண்ட பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணிப்பதே பாதுகாப்பானது என அதிகாரிகள் டிரம்பிற்கு அறிவுறுத்தினர்.
இதனை ஏற்று அங்காராவிலிருந்து புறப்பட்ட டிரம்ப் புதிய விமானத்தைத் தவிர்த்து, பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானம் மூலம் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.இருப்பினும் மாநாடு முடிந்து திரும்பும்போது, ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள் டிரம்பைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தக் கூடும் என அமெரிக்க உளவுத்துறையிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.



