இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

 

இஸ்ரேலில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (17) அந்நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இஸ்ரேல் பாராளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடர் நடைபெற்றது.

இந்த கூட்டத் தொடரில் ஏராளமான சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இஸ்ரேல் பாராளுமன்றத்தின் 4 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் தற்போது கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு, நப்தலி பென்னெட் முதலானோர் போட்டியிடவுள்ளனர்.

ஒக்டோபர் 27ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு, தேர்தலில் 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய அரசு தோற்றம் பெற்ற பின்னர், அப்புதிய அரசின் தலைமையில் புதிய பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.