நீர்கொழும்பு சிறைச்சாலை முன்னால் கைதிகளின் உறவினர்கள் திரண்டு முன்னெடுத்த ஆர்ப்பாட்டம்

 

நீர்கொழும்பு சிறைச்சாலை முன்னால் கைதிகளின் உறவினர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் குறித்த குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வன்முறைத்தனமாக அமைதியற்ற முறையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரத்தின்போது காயமடைந்த மற்றும் உயிரிழந்த கைதிகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் வழங்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பின்னர், பொலிசார் தலையிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதிகளை உறவினர்கள் குழு ஒன்று சென்று சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளனர்.

அதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிடுவதற்கான அனுமதியை மருத்துவமனை நிர்வாகமும் வழங்கியுள்ளது.

அதேநேரம், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலைக் கூரைமீதேறிப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.