என்னதான் தெருவுக்கு தெரு மருத்துவமனை இருந்தாலும் தலைவலி, சளி, இருமல், உடல் வலி, கை கால் வலி போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் நேரடியாக மருந்தகங்களுக்கு சென்று தனது மருந்துகளை வாங்கி உட்கொள்கிறார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது.
ஏனெனில் சாதாரண ஏழை மக்களும், நடுத்தர மக்களும் கூட மருத்துவரை அணுக முடியாத நிலையில்தான் மருத்துவர்கள் வாங்கும் கட்டணமும் அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளின் விலையும் தற்போது அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில்தான், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இனிமேல் இருமல் மருந்துகளை பொதுமக்களுக்கு மருந்தகங்களில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பே மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மெடிக்கல் ஷாப்களில் மருந்து கொடுக்கக் கூடாது என ஏற்கனவே சட்டம் இருந்தாலும் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை.
தற்போது இந்த விதிமுறைகளை மத்திய அரசை கடுமையாக்கியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கலப்படம் செய்யப்பட்ட போலி இருமல் மருந்துகளால் சில குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது..




